ஒரு பெண் தாயாகுவதற்கு மூலக்கூறாக விளங்குவது கருமுட்டை.பெண் குழந்தை தாயின் வயிற்றில் 5 மாதமாக இருக்கும் போதே இந்த செயற்பாடுகள் ஆயத்தமாகிறது என்பது நாம் அறிந்ததே.
பியூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் எவ் எஸ் எச் ( FSH) எல் எச்Luteinizing Hormone (LH) ஹார்மோன்கள் போதுமான அளவு தூண்டப்பட்டு ஈஸ்டோஜன் சினைப்பைக்கு கிடைக்கும்போதுதான் முட்டை வளர்ச்சி சரியானதாக அமைந்து .
சரியான காலத்தில் முதிர்ச்சி ஏற்படும்.
மாதவிலக்கு ஒழுங்கற்று போதல் ,மிக குறைந்த அளவிலான மாதவிடாய், உடல் பருமன் போன்றவை முட்டை வெளியாகதற்கான அறிகுறிகளாகும்,
இனி இதற்கான காரணங்களை பார்ப்போம்
சினைப்பைக்கட்டிகள்
தொற்றுக்கிருமிகள்
நீர்க்கட்டிகள்
அதிக உடல்பருமன்
ப்ரோலக்டின் அதிகாக இருத்தல்
ஊட்டச்சத்துக்குறை
எடை குறைவு
மன இறுக்கம்
முந்தைய அறுவைச்சிகிச்சைகளின் பாதிப்பு
நச்சுப்பொருட்களின் தாக்கம் உடலுக்கு சென்றிருத்தல்
கருத்தடை மாத்திரைகள்
வலி நிவாரண மாத்திரைகள்
சினைப்பை செயலிழப்பு
என்பன கருமுட்டையின் வளர்ச்சியியை பாதிப்புக்குள்ளாக்குகிறது. நாள்தோறும் 2 தடவை நடைப்பயிற்சி மேற்கொள்வது.போலிக் ஆசிட் அதிகம் உள்ள பச்சைத்தாவரங்களை உணவில் சேர்த்துக்கொள்வது,
விரதங்களை தவிர்ப்பது,மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது.போன்றவற்றால் கருமுட்டை வளர்ச்சியை தூண்டலாம் .காரணம்
pituitary ,Hypothyroidism சினைப்பை ஆகியவை தங்களுக்குள் ஹார்மோனை சமப்படுத்தி ஒரேமாதிரியாக கட்டுப்பாட்டுடன் சுரப்பிகளை சீராக இயங்க வைக்கின்றன.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு கருமுட்டை வளர்ச்சியின்மையின் முதல் படி ஆகையால் ஹார்மோன்களை குழப்பமடைய செய்யும்படியான காரணிகளை தவிர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வதும்
ஹார்மோன்களை சீர்குலைக்காமல் இயங்கவைக்க உதவும்.
இருப்பினும் கருமுட்டை வளர்ச்சியின்மை கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஊக்குவிக்கும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் அறுவைச்சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வது அவசியம்.
வீணே காலத்தை போக்குவது இதற்கு தீர்வாகாது.
No comments:
Post a Comment