Monday, 23 January 2017

மாத்தி யோசி

என்னை ஒருவர் நோகடிக்கிறார் என்பது தவறான குற்றச்சாட்டு.என் அனுமதி இன்றி என்னை யாரும் நோகடிக்க முடியாது என்பது காந்தி சொன்னது.நம்மை நோகடிக்கும் சந்தர்ப்பத்தை பல வழிககளில் நாமேதான் பிறருக்கு உருவாக்கிக்கொடுக்கிறோம்.அந்த உரிமையை நம்மிடம் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது உண்மை.அடுத்தவரை நோகடிக்கும் அற்ப குணம் படைத்தவர்களின் தரத்திற்கு நாமும் பயணிக்கும் போதுதான் அவர்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் செவிமடுத்து மதிப்பளிக்கும் வேளையில்தான் நாம் வார்த்தைகளாலுல் செய்கைகளாலும் நோகடிக்கப்படுவோம்.இதையும் மீறி யார் யாருக்கு என்னென்ன இடம் யாருக்கு இவ்வளவு எல்லை யார் உறவை நெருக்கப்படுத்துவது யாருக்கு எவ்வளவு இடைவெளியை நம்மிலிருந்து ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பகுத்தறிந்துநல்லனவற்றில் அதிகம் கவனம் செலுத்தி முற்போக்குடன் சிந்தித்து அடுத்தவர் வாழ்வில் அநாவசியமாக உரிமையெடுத்து அவர்கள் தனிப்பட்ட விடயங்களை ஆராய்வதும் அறிந்து கொள்ள முற்படுவதிலும் தேவையற்ற வாக்குவாதங்களிலும் சிக்காமல் நடப்போமானால் நம்மை யாரும் நோகடிக்க முடியாது

நோகடிப்பவரைப்பற்றியோ புண்படும் அந்த வார்த்தைகளை சேர்த்து வைத்து நம்மில் மீட்பதற்கோ நம் மனங்களில் ஒரு இடத்தையோ நேரத்தையோ ஏற்படுத்திக்கொள்வது நாமேதான்நல்ல சொல் சிந்தனைகள் செயல்கள் நல்ல வார்த்தைகள் புறம் சொல்லாமை போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம்மில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாமே நம்மை மகிழ்வாக வைத்திருக்க முடியும்.யார் வார்த்தைகளையும் கண்டு கொள்வதும் அதுபற்றியே நமக்கு மதிப்பளிப்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பதுவும் நமது வேலையாக இருக்காது.அடுத்தவர்களைப்பற்றி தவறாக சிந்திப்பதும் பேசுவதும் நம் மனதை நாமே அழுக்கடையச்செய்வதாகும்.ஆகவே இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இனிமேல் நீங்கள் உங்கள் மனதையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க விரும்பினால் அடுத்தவர்களில் உள்ல நல்ல குணங்கள் செயல்களை மட்டுமே பேசுங்கள் .அவர்கள் தீய குணங்களை உங்களில் வரவிடாமல் விரட்டுங்கள்.


மாத்தி யோசி

/நாள்தோறும் நாள் தோறும் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகிறேன் என்ற வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் பதின்மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளி ஒருவர் பூரண குணமாகி எழுந்து நடந்தார்//

ஒருவர் தனது ஆழ் மனதுக்கு இடும் கட்டளைகளே குணங்களாகவும் விருப்பங்களாகவும் எதிர்பார்ப்புக்களாகவும் உருவெடுக்கின்றன.

சாதரண உணவுப்பழக்கவழக்கங்களிலேயே இந்த உணவு எனக்கு ஒத்து வராது என்பது வேறு அது ஒவ்வாமை.ஆனால் இந்த உணவு எனக்கு பிடிக்காது என்பது  வேறு .

95 வீதம்பிரச்சனைகள்  நாமே உருவாக்கி பின்பற்றும் ஒரு கற்பனை.

இதே போன்று நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதிக்கு மேல் நாம் கற்பனை செய்து கொள்பவையே. 


Friday, 20 January 2017

கிட்ஸ் யூ ட்யூப்


குழந்தைகளுக்கு போன் ,ஐ பாட்  இவையெல்லாம் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று எல்லா அம்மாக்களும் மாதிரி எல்லாத்தையும் ஒளித்துத்தான் வைத்திருந்தேன்.

ஆனால் குழந்தை வளப்பு சம்மந்தமாக ஒரு ப்ரோகிராமில் மீட்டிங்
போனபோது ,
சந்தேகம் குழப்பம் என்று பெற்றோர் கேட்ட முதல் கேள்வி அதுவாக இருந்தது.

குழந்தைகள் போன்,ஐபாட் க்கு மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடிக்கிறார்களே கொடுக்கலாமா????

அதற்கு அவர்கள் பதில்

ஆம் கொடுக்கலாம் .ஒரு நாளுக்கு 1 மணித்தியாலங்கள் வரை தாராளமாக அவர்களை உங்கள் கண்காணிப்பின் கீழ் அனுமதிக்கலாம்.


இப்போது விஷயத்திற்கு வருகிறேன்
குழந்தைகளுக்கு யூ ட்யூப் ல் நர்சரி ரைம்ஸ் பிளே பண்ணினால் முதலில் வழக்கம்போல விளம்பரங்களை கடக்க வேண்டியது உங்களை நிச்சயமாக எரிச்சலூட்டும்.அதுவும் சில விளம்பரங்கள் அருவருப்பானவையும் பயமூட்டுவனவாகவும் இருக்கும்.

என் மகளுக்கு ஒருநாள் விழுந்த காயத்திற்கு மருந்து போட வேண்டி இருந்தது அவளை அழாமல் திசை திருப்ப யூ ட்யூப் ல் ரைம்ஸ் பிளே பண்ணி விட்டு தொடங்குவோம் என யூ ட்யூப் ல் ஜானி ஜானி யெஸ் பாப்பாதான் பிளே பண்ணினேன்.ஆனால் அதற்கு முன்னர் ஒரு விளம்பரம் வந்திச்சே ஹோய் ஹோய் ஹோய் என ஒருவர் சத்தமாக முரட்டு குரலில் கத்திக்கொண்டு பாப்கோனை வாய் நிறைய அதாவது வாய்க்குள் அடங்காமல் வெளியே கொட்ட கொட்ட திணிப்பார்.

ஓ வென்று கதறி கதறி அழத்தொடங்கிவிட்டாள் மகள் .அடுத்த மகளும் ஓடி வந்து அதை பார்த்து விட்டு சேர்ந்து அழுது என்னை மூச்சு முட்ட வைத்ததும் இல்லாமல் தொடர்ந்து ஒரு 4 நாளா அதே மாதிரியே சாப்பாட்டை வாய்க்குள் திணிப்பாள்.

இது மட்டுமன்றி வீடியோ எடுத்து கொடுத்துவிட்டு குளிக்க போய் வந்தால் ஒருநாள் ரைம்ஸ் க்குள் யாரோ கூடாத வீடியோ வை அப்லோட் பண்ணி வைத்திருக்கிறார்கள் .அதை இவள் பிளே பண்ணவும் நான் ஐ பாட் ஐ வாங்கவும் சரியாக இருந்தது.
உடனே ரிப்போட் செய்து விட்டு குழந்தைகள் பார்க்க பாதுகாப்பாக என்ன வழிகள் இருக்கிறது என்று அதையெல்லாம் செய்து கொண்டு இருக்கையில் என் கண்ணில் பட்டது இந்த கிட்ஸ் யூ ட்டியூப்.




யெஸ்ஸ்ஸ் சாதரண வீடியோக்களுக்கு நாம் செய்யும் பெற்றோர் பாதுகாப்பு எல்லாம் செய்து
வடிகட்டி
வயது எல்லைகள் பிரித்து 
விளம்பரங்கள் இல்லாமல்
நேரம் கணிப்பிட்டு கொடுக்கக்கூடியதாக
வீடியோக்களை லிமிட் பண்ண கூடியதாக
பாஸ்வேர்ட் அமைக்க கூடியதாக
வீடியோக்கள் சம்மந்தமாக ஈமெயில் பெறக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
பிள்ளைகள் அடிக்கடி பார்ப்பது எப்போதும் முன்னால் காண்பிக்கும் தேட தேவையில்லை.
அப்ப் பெயர் YT Kids.
ஒரு வருடமாக யூஸ் பண்ணுகிறேன் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் இதன் மூலம்.

Wednesday, 7 September 2016

டவிட்டு


கான்சர் க்கு மருந்தை கண்டு பிடித்தார்  எயிட்ஸ் க்கு மருந்தை கண்டு பிடித்தார் என்ற செய்தி அடிக்கடி செய்திகளில்
கண்டுபிடித்தவர்களின் படங்களுடன் வருகிறதே.
அந்த மருந்து மாத்திரையை வைத்து குணப்பட்டார் என்று சொல்லி யார் படமும் செய்தியும் வருவதில்லையே ஏன்???
இந்த எக்ஸாம் ல ஸ்டேட் பர்ஸ்ட் வந்த புள்ளைகள் எல்லாமே, நான்  படிச்சு டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் அப்டி காலம் காலமா பேட்டி மட்டும் குடுக்கிற மாதிரிதான் இதுவுமா?????

அறிந்ததில் வலித்ததும் அடிக்கடி ட்ரைவ் பண்ணும்போது மிரட்டுவதுமாய் ஒரு சம்பவம்


போனவாரம் என் ஹஸ் சொன்ன செய்தி
அம்மா ஒரு எங்கட நாட்டுக்கார அக்கா அவா ஹஸ்பண்ட் கார் தேவைப்பட்டதால அவரை  வேலைக்கு கொண்டுபோய் விட்டுட்டு  வர வெளிக்கிட்டவாவாம். அப்போ 4 வயசு மகள் தானும் வரப்போறன் எண்டு ரெம்ப அடம்புடிச்சதால  மற்ற பிள்ளைகள் அம்மம்மாவோட வீட்ல நிக்க இந்த 4 வயசு மகளை மட்டும் கூட்டி போனவாவாம் .ஹஸ்பண்ட் ஐ வேலைக்கு விட்டுட்டு வீட்டுக்கு வரும்போது ஆக்சிடண்ட் பட்டு குழந்தை ஒரு ஹாஸ்பிட்டல்  அவாவை ஒரு ஹாஸ்பிட்டல்ல
அட்மிட் பண்ணினவையாம்

தகவல் குடுத்து அவா ஹஸ்பண்ட் பாக்க ஓடி வரவும் அந்த அக்கா உயிர் பிரிந்து விட்டதாம்.குழந்தையை பாக்க அந்த ஹாஸ்பிட்டல் க்கு போனபோது குழந்தை உயிரும் பிரிந்து விட்டதாம்.
எண்ணில் அடங்காத துர் சம்பவங்களை அனுபவித்தும் ,நேரில் கண்டும் ,அறிந்தும்  வலிகளை கடந்து வந்த இனம் என்பதாலோ என்னவோ அடுத்தவர்களின் இழப்புக்களும்  கொஞ்சம் அதிகமாகவே  ஊடுருவுவதை தவிர்க்க முடியவில்லை .

Wednesday, 10 August 2016

கண்டதும் கணக்கில் கொண்டதும்

போன வாரம் ஒரு அழகான இடத்திற்கு பிக்னிக் போயிருந்தோம். பரந்து விரிந்த தாமரைக்குளம் ஆங்காங்கே கொக்குகளும்,அன்னங்களும் ,குஞ்சுடன் குடும்பமாக வாத்துக்களும் பவனி
.
 தடாகத்தில் கால் நனைத்தபடி கரை நெடுகிலும் வரிசையாய் உயரமாக வளர்ந்திருந்த புற்கள்.எதிர்ப்பக்கத்தில் கடல்நீர் ஏரி .நடுவே ஏறிச்சென்று
கடலை ரசிக்க கூடிய பாலம் .பாலத்தின் வழியே சென்றால் அடர்த்தியற்ற காடு.பறவைகளின் சங்கீதம்.அணில்களின் குறுக்கும் நெடுக்கும் தாவும் குறும்பு.

இங்கு இப்படி இடங்கள் நிறைய இருக்கிறது. வீட்டில் இருந்து வெறும் 25 நிமிடங்களே.  காலநிலை அறிக்கையில் சூரிய உதயம் 6.55 ற்கு என்று இருந்தது வீட்டில் ஜன்னலூடே மிகவும் ஆவலாக சூரிய உதயம் பார்ப்பார்கள் பிள்ளைகள். அதையே கடலில் நிழல் விழ சூரியனார் ஒளித்திருந்து எழுந்து ஒளிருவதை காண்பிக்க எண்ணி 6.30 மணிக்கு கிளம்புவதாக பிளான் பண்ணி இருந்தோம் .ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை8 மணியாகிவிட்டது அந்த இடத்தை அடைய.


பிள்ளைகளுக்கு வீட்டில் சத்துமா கொடுத்து விட்டு நமக்கு சுண்டல் செய்திருந்தேன்.அதையும் எடுத்துக்கொண்டு வெளியே கோப்பியை வாங்கி கொண்டு போய் காரை உரிய இடத்தில் பார்க் பண்ணும்போது பார்த்தோம்
பக்கத்து கார்க்காரர்களும் தமிழர் குடும்பம்.ஒரு சிறு பெண்ணை அழகாக அலங்கரித்து சாரி உடுத்தி கூட்டி வந்திருந்தார்கள்.
அடுத்த காரில் இருந்து பெரிய கமெராவுடன் கமராமென் இறங்கினார்.இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்.
ஆம் பூப்புனித நீராட்டு விழாவின் தொடர்ச்சியாக நடத்தும் ஸூட்டிங்.

பிஷ்ஷிங் ஏரியாவில் 10நிமிஷம் பிஷ்ஷிங் செய்ய ரொட் எல்லாம் கொண்டு வந்திருந்தார் என் கணவர்.அவர்களுக்கு இடையூறு கொடுக்க வேண்டாமே என்று கடந்து கடற்கரைக்கே சென்று டெண்ட் அடித்துக்கொண்டோம்.

அங்கு என் பிள்ளைகள் மண்விளையாடுவதும் குளிப்பதுமாக நிறுத்துவதாக இல்லை.
மதியம் 12 ற்கு தண்ணியில் இருந்து இழுத்து வந்து சாப்பாடு ஊட்டி விட்டேன்.சாப்பிட்டு விட்டு மறுபடியும் தொடங்கி விட்டார்கள்.
எங்கே பிக்னிக் போனாலும் வெளியேதான் சாப்பிடுவோம் பொதிகள் சுமப்பதில்லை.ஆனால் கடற்கரைக்கு போனால் எனக்கு வீட்டு சாப்பாடு அதுவும் தமிழ் சாப்பாடு கொண்டுபோய் சாப்பிடவே பிடிக்கும்.எப்படியும் கூலர் பாக்ஸ்,டெண்ட் ,கதிரை  என்று கொண்டு போயாக வேண்டும்.
அத்தோடு இது ஒரு சுமையாக இருக்காது.எல்லா பொதிகளுக்கும் சில்லுகள் இருக்கும் .அதனால் ஒரு நாளுக்கு தேவையான எல்லாம் கொண்டு போவோம்.


கணவாய் குழம்பும் ,கத்தரிக்காயும் சோறும் ஹாட் பாக்ஸ் இல் வைத்து எடுத்துப்போயிருந்தேன்.நீண்ட நேரம் தண்ணிக்குள் இருந்ததும் கணவாயையும் சோறையும் நினைக்க நினைக்க கடும் பசி எடுத்தது.
ஆனாலும் எனக்கு பசி இல்லை பிள்ளைகளை பார்க்கிறேன் நீ முதல்ல சாப்பிடு என்று என் கணவர் சொல்ல ,காலையில் நிறைய சுண்டல் சாப்பிட்டது இன்னும் பசி இல்ல நீங்க சாப்பிடுங்கோ என்று நான் சொல்ல ரெண்டு பேருக்கும்
தனித்தனியே சாப்பிட மனமில்லாமல் மாலை 3 வரைக்கும் பிள்ளைகளோடு சேர்ந்தே விளையாடிவிட்டு அதற்குமேல் பசி தாங்க முடியாமல் காருக்குள் கூட்டி வந்து சீட் பெல்ட் போட்டு விட்டு காருக்குள் இருந்தே சாப்பிடுவோம் என்று கிளம்பினோம்

ஓ இப்பதான் கதை ஆரம்பிக்கிறது தண்ணி குடியுங்கோ


நடந்து வரும்போது பார்த்தால் அதே தமிழ் குடும்பம்.அதே ஸூட்டிங்,அந்த பெண்ணுக்கு 13 வயது இருக்கும் போல ஆம் குழந்தைதான் ,அழுது முகமெல்லாம் வீங்கி கண்கள் சிவந்து இருந்தது.இன்னமும் விம்மல் வந்து கொண்டு இருந்தது.
அருகில் 10 வயசு இருக்கும் ஒரு குட்டி பெண் ,தங்கை போல் இருக்கிறது .அக்காவின் மேக்கப் செட் ஓ அல்லது ட்ரெஸ் ஓ தெரியவில்லை  வயதுக்கு பொருத்தமற்ற பெரிய டரவலிங் பாக் கை சுமந்து கொண்டு அழும் அக்காவை பரிதாபமாக பாத்துக்கொண்டிருந்தார்.

அம்மாவோ ஏய் கண்ண துடை. சுழண்டு சுழண்டு ஆடுறது இன்னும் ஆடவே இல்ல அடுத்ததா அதை ஆடு .ம்ம்ம் என்றார் அதட்டலாக.

எதுவுமே கண்டு கொள்ளாமல் நாங்கள் காருக்குள் வந்து சாப்பிட தொடங்கினோம்.
அப்போது அந்த தாயார் ,அதுவரைக்கும் போய் திரும்பி ஓடி வா என்பதும்,அந்த ஆட்டம் ஆடு இப்படி ஆடு என்பதும்,நகைகளை மாற்றுவதும்,மேக்கப் போட்டு விடுவதுமாக முடிந்தளவு அந்த குழந்தையை
டாச்சர் பண்ணிக்கொண்டு இருந்தார்.

வெள்ளையர்கள் அவரவர் பாட்டுக்கு போனாலும் கொஞ்சம் கூட கவனிக்காமல் போகிறார்கள் என்று சொல்ல முடியவில்லை.
சற்று நிமிடங்களாவது உற்று நோக்கவே செய்கிறார்கள்.
கமராமென் முன்னால் ஆடவும்  வேற்று மக்கள் ஒருகணம் உற்று பாக்கவும் அந்த குழந்தை கூனி குறுகி போவது அப்படியே புரிகிறது.
அம்மாவோ குழந்தையை ஒரு நடிகைபோல் உடனுக்குடன் கூச்சமில்லாமல் நடித்து காட்டும்படி ஏவுகிறார்.

கமராமென் சொல்கிறார் அக்கா போதும் அக்கா நான் மிக்ஸ் பண்ணி நல்லா செய்து தாறன் ;என
ஆனால் அந்தம்மாவோ இல்ல தம்பி ஒவொர்நாளுமோ ஒரு நாளுக்குதானே நீங்க எடுங்கோ????????????????
{ காருக்குள் சாப்பாடு மணக்காமல் இருக்க ,கார் மேல் ரூவ்ஃப் ஓப்பன் பண்ணியிருந்தோம்  அதனால் எல்லா சத்தமும் நன்றாக கேட்டது}
அப்போதுதான் யாரோ பசிக்குது என்று சிணுங்குவது கேட்ட போதுதான் கவனித்தேன் ஒரு குட்டி தம்பியும் நிக்குறார் 6 வயசு இருக்கும்.

எனக்கு கண்கள் கலங்கி விட்டது.அன்றைய மகிழ்ச்சியில் யாரோ மண்தூவியதுபோல் உணர்ந்தேன்.

சில பிள்ளைகள் அம்மாக்கள் வேண்டாம் என்றாலும் அலங்கரிப்பதும் சாரி கட்ட சொல்லுவதும் ,விதம்  விதமாக படம் பிடிக்க சொல்லுவதுமாக ஆர்வமாக மகிழ்ச்சியாக விரும்பி ஒத்துழைக்கும் குழந்தைகள்
இருக்கிறார்கள்.
என் மூத்த மகளுக்கு ஆசையாக ஒரு கடற்கன்னி ஆடை தைத்தேன்.அணியும் போது அழுதாள் .கழட்டி வைத்து விட்டேன்.ஒரு வயசு முடிய மறுபடியும் போட்டு படம் எடுக்க விரும்பினேன் நோ என்று ஒரே சொல்லு.
விட்டு விட்டேன்.ஆனால் என் சின்ன மகள் க்கு போட்ட போது பாட்டும் ஆட்டமும் சிரிப்புமாக படம் எடுத்துவிட்டு கழற்றவிடாமல் மறுபடியும் பிடுங்கி தனக்கு வைத்து பார்த்து கண்ணாடி பார்ப்பாள்.

ஆனாலும் ஒருநாள் ஒரு தெரிந்த குடும்பம் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்த போது 2  அழகான ஷல்வார் வாங்கி வந்து பிள்ளைகளுக்கு கொடுத்திருந்தார்கள்.சின்னவளுக்கு அணிவித்து அவர்களுக்கு படம் அனுப்பியபோது
அடடே பெரியவாக்கு அளவில்லியோ? மாத்தி குடுக்கட்டுமோ ? என்று கேட்டதால் அழ அழ போட்டு ஒரு படம் எடுத்தேன்.ஐந்து நிமிடங்கள்தான்.இன்னொருனாள் மடிசார் கட்டினேன் கோவத்தில் குனிந்த படியே இருந்தாள். 4 படம் தட்டி விட்டு
கழற்றி விட்டேன்.
ஆனாலும் நான் அழுதேன் மனம் வருந்தினேன் என்று சொன்னேன் அல்லவா அது இதை நினைத்துதான் .
இதுவும் ஒரு வித சித்திரவதைதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.
கதை முடிந்தது எழும்பி போய் தண்ணி குடியுங்கள்.
இனிமேல் ஒருநாளும் எதையுமே திணிக்க கூடாது என்று சபத்மெடுத்துக்கொண்டேன்.


Monday, 8 August 2016

இப்போதுதான் ப்ளாக் எழுத ஆசை வந்துள்ளது .இதற்கு முன் எப்போதுமே என் ப்ளாக் ல் அக்கறை  எடுத்தது கிடையாது எப்பவாச்சும் யாருக்காவது உதவும் என்று மருத்துவ பதிவு எதையாவது போஸ்ட் பண்ணி விட்டு சென்று விடுவேன் .சில வருடங்கள் ப்ளாக் ஐ மறந்தே போனேன்.

ஆனால் வரும் காலங்களில் என் எண்ணெங்கள் சிலவற்றை வெளிப்படுத்தலாம் என்று மறுபடி தொடங்கி இருக்கிறேன் .

கண்டது காணாதது,கேட்டது,என்னது ,உன்னது என்று தாறுமறாக பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...