Wednesday, 1 February 2017

உணவு பரிமாறுதல்

சமையலில் உள்ள சிறு குறைகள் பரிமாறும் விதத்தில் காணாமல் போய்விடும்.அதேபோல் பரிமாறும் தட்டுக்களும் உணவில் ஈர்ப்பையும் பசியையும் ஏற்படுத்தி நிச்சயம் நமக்கு பாராட்டை ஏற்படுத்தி தரும்

ஆடிக்கூழ் {யாழ்ப்பாண முறை]

தேவையானவை

சிவப்பு அரிசிமா  1/4 கப்
அவித்த மைதா மா 1/4 கப்
பயறு 5 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் 2 கப்
சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
பனங்கட்டி 1/4 கிலோ


நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 5 {எண்ணிக்கை}
ஏலக்காய் 1


ஆயத்தம்

1.சிவப்பு அரிசிமாவில் 4 டேபிள் ஸ்பூன் எடுத்து கால் கப் அளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்

2.சிவப்பு அரிசி மாவையும் அவித்த மைதா மாவையும் சேர்க்கவும்

3.தண்ணீரை கொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் தண்ணீருக்குள் உப்பு சேர்த்து கொஞ்சமாக மாவில் சேர்த்து  இடியாப்ப பதத்திற்கு குழைக்கவும்

4. மா ஆறியதும் சிறு உருண்டைகள் செய்து வேக வைக்கவும்

5.பனங்கட்டியை 1 கப் சுடுநீரில் கரைத்து வைக்கவும்

6.தேங்காய்ப்பால் 2 கப் தயார் செய்து வைக்கவும்

7.ஒரு துண்டு தேங்காயை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும்

8.பயறை வறுத்து வைக்கவும்

9.நச்சீரகம், மிளகு,ஏலக்காய் என்பவற்றை  சட்டியில் வறுத்து பொடி செய்து வைக்கவும்

செய்முறை

அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் விட்டு பயறை வேக வைக்கவும் .
பயறு வேகியதும் பனங்கட்டியை வடிகட்டி அதற்குள் ஊற்றவும்
பாலையும் சேர்க்கவும்
ஒரு கொதி வந்ததும் வேகிய மா உருண்டைகளை கொட்டி தேங்காய்த்துண்டுகள் ,பொடி செய்த மிளகு சீரகம்,ஏலக்காய் என்பவற்றை சேர்க்கவும்
கடைசியில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து குமிழி விட்டு கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.



தேசம் விட்டு தேசம் போய் பல நூறு உணவுகளை சுவைத்தாலும் அறியாத வயதில் ஒரே ஒரு முறை உண்டிருந்தாலும் நம் பாரம்பரிய உணவு நமக்கு எப்போதுமே விசேசம்தான் .

வாழைக்காய் சம்பல்

தேவையானவை

வாழைக்காய் தோல்  1 வாழைக்காயினுடையது
சின்ன வெங்காயம் 4
பச்சை மிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்

செய்முறை

வாழைக்காய் தோலை கொஞ்ச தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வேகி தண்ணீர் வற்றியதும் {வற்றாவிட்டால் தண்ணீரையும் எடுக்கவும்} தேங்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம்  சேர்த்து மிக்சியில் அரைக்கவும்

உப்பு லெமன் சேர்க்கவும்


அசைவ உணவுகள் ,கடல் உணவுகள்,மாமிச உணவுகள் போன்றவற்றை எல்லா வகையறாக்களையும் சேர்த்து உண்ண முடியாது ஆனால் காய்கறிவகைகள்  எத்தனை சேர்த்தாலும் சுவை அதிகமாகுமே தவிர குறையாது .அவ்வாறு காய்கறிகள் விரதங்கள் செய்யும் நாட்களில் இந்த எளிய வாழைக்காய் சம்பல் உணவுக்கு இன்னும் கூடுதல் சுவை சேர்க்கும்

Monday, 30 January 2017


ஈஸி கப் கேக்


தேவையானவை
மைதா மா 2 கப்
சுகர் 1 கப்
பட்டர் 1 கப்
வெஜிடபிள் ஆயில் கால் கப்
பால் கால்  கப்
பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்



மிக்சியில் சுகர் ஐ கொட்டி பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடிக்கவும்
அதை தொடர்ந்து பட்டர் , முட்டை, எண்ணெய் என்பவற்றை அடிக்கவும்
பின்னர்  மாவையும் பேக்கிங்க் சோடாவையும் சேர்த்து அடித்து கப்கேக் மோல்ட் இல் ஊற்றவும்
அவொனை 350 பாகையில் சூடுபண்ணி 14 நிமிடங்களில் ஒரு குச்சியை உள்ளே செலுத்தி பார்க்கவும்
குச்சியில் கேக் ஒட்டாவிட்டால் மேலதிக நேரம் தேவையில்லை ஒட்டினால் மேலும் 2 நிமிடங்கள் விடவும்.
.பட்டர் சேர்க்கும் எல்லா கேக் வகைகளுக்கும் பட்டரை குறைத்து அதற்கு பதில் எண்ணெய் சேர்த்தால் மிகவும் மென்மையாக பஞ்சு போல் வரும்.

Sunday, 29 January 2017

தற்புகழ்ச்சியில் மட்டு வாசம் செய்யும் நாகரீகர்


அடுத்தவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் இடையூறு செய்தால் தவிர நீங்களும் அடுத்தவர்களின் பொதுவான நடைமுறைகளுக்கு  வலிய வலிய கல்லெறியாமல் இருப்பது நாகரீகமான மனிதர்களுக்கு அழகு.

தவிர நீங்கள் எறியும் கற்கள் தகர்க்க போவது உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளையே


அன்றி அதிகம் பேசும் வாயும் இரவில் ஊளையிடும் நாயும் அடிவாங்காமல் போனதாக சரித்திரம் இல்லை என்பதுபோல் அவமானபடுவதை தவிர்க்க இயலாது.

ஈஸி தக்காளி சட்னி



தேவையானவை
தக்காளி1
வெங்காயம் பாதி
காய்ந்த மிளகாய் 6
தேங்காய் சிறுதுண்டு அல்லது தேங்காய்ப்பூ 1 டேபிள் ஸ்பூன்


அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் தாளித்து அதனுடன் சேர்த்து தக்காளி, மிளகாய்,தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி மிக்சியில் நன்கு அரைக்க வேண்டும்.
மறக்காமல் உப்பு போடவும் .புளி தேவையில்லை.தக்காளி சேர்த்திருப்பதால்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...