Wednesday, 1 February 2017

டிப்ஸ்

பச்சை மிளகாயை அதன் காம்பை நீக்கி விட்டு உப்பு தூவி ஒரு டப்பாவில் அடைத்து பிரிட்ஜ் ல் வைத்தால் கெட்டு போகாமல், 1 மாசம் வரை பிரெஷ் ஆக இருக்கும்

கடலை கத்தரி குழம்பு



தேவையானவை
சிறிய கடலை ரின் 1
கத்தரி 1
வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உள்ளி 4 பல்லு
புளி 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க
கடுகு,சீரகம்,கருவேப்பிலை

செய்முறை

1.அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு சீரகம் ,கருவேப்பிலையை,வெங்காயம்,உள்ளி என்பவற்றை தாளிக்கவும்

2.அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய கத்தரிக்காயை சேர்க்கவும்

3.கத்தரிக்காய் வேகியதும் கழுவிய ரின் கடலையை சேர்க்கவும்

4.உப்பு ,தூள் சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்

5.தண்ணீர் வற்றி வரும்போது புளியை கரைத்து விட்டு கொதித்த பின் இறக்கவும்.



விரதம் இருக்கும் போது வீட்டில் உள்ள
எல்லோருமே விரதமாக இருப்பதில்லை .எலோரும் அசைவம் சாப்பிட நாம் அவர்களுக்கு அசைவம் செய்து விட்டு தனி ஒருவருக்கு சைவம் செய்ய வேண்டி வரும் .கூடவே ஒற்றை ஆளுக்கு எதுக்கு ?அட நமக்கு மட்டும்தானே எதயாவது சாப்பிடுவோம் என்று கூடவே சோம்பல் ம் சேர்ந்துவிடும்.அவ்வாறான வேளைகளிலும் ,அடுத்து வீட்டுக்கு விருந்தினர்களை குடும்பத்தோடு கூப்பிட்டு மாங்கு மாங்கு என்று நடப்பன பறப்பன எல்லாம் சமைத்து வைக்க அப்போதுதான்  அந்த குடும்பத்தில் ஒருவர் நான் இன்று விரதம் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று ராகம் போடுவார்.உண்மையில் பூரிக்கட்டையை எடுத்து தலையில் நங் என்று போட வேண்டும் போலதான் இருக்கும் ,ஆனால் விருந்துக்கு கூப்பிட்டு அவ்வாறு போட முடியாது.அதனால் எரிச்சலை வெளியே காட்டாமல் சிரித்த படியே என்ன சமைப்பது என்று தேட தொடங்குவோம் அவ்வாறான வேளைகளிலும் ரின் கடலை இருந்தால் கத்தரியோடு சேர்த்து  இந்த திடீர் குழம்பை வைத்து சிறப்பாக பரிமாறலாம்.

காய்கறி கோழி வேக்காடு


தேவையானவை

கோழுக்கால்கள் 6
ப்ரோக்கோலி 1/4 கிலோ
குடை மிளகாய் 1/4 கிலோ
கரட் 1/4 கிலோ
பீன்ஸ் 1/4 கிலோ
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு

ஆயத்தம்
கோழியை சுத்தம் செய்து வெட்டாமல்  கீறல்கள் மட்டும் போடவும்
காய்கறிகளை பெரிய  துண்டுகளாக நறுக்கி வைக்கவும்


செய்முறை

1..கோழி ,உப்பு ,தனிமிளகாய் ,எண்ணெய் என்பவற்றுடன் 1 கப் தண்ணீஇர் விட்டு வேக வைக்கவும்
2..முக்கால் பதம் வெந்ததும் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை அதனுள் போட்டு இன்னும் 1 கப் தண்ணீர் விடவும்
3 வேகி தண்ணீர் வற்றியவுடன் இறக்கி ஆற வைக்கவும்
4.  1/2 கப் ஷவக்றீம் sour cream சேர்த்து  மிக்ஸ் பண்ணவும்

சோறு ,பாஸ்தா போன்றவற்றுடன் பரிமாறலாம்.

நம் எல்லோருக்குமே விருந்தினர் வரும்போது விசேசமாக வித்தியாசமாக எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை வரும்.ஆனால் அவர்களின் வருகைக்காக வேறு ஆயத்தங்களும் செய்ய வேண்டி இருப்பதால் சமையலில் நினைத்த சிலவற்றை செய்ய முடியாமல் போகும் .செய்தாலும் நினைத்ததுபோல் வந்துவிடாது .அவ்வாறான வேளைகளில் இதில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறி கோழி வேக்காடு பார்ப்பதற்கு அழகாகவும் .காய்கறிகள் கோழியுடன் சேர்ந்து வேகுவதால் சுவையாகவும் அதே நேரம் சிறப்பு உணவாகவும் சுலபமாக செய்யவும் கைகொடுக்கும்.

சாம்பார்


தேவையானவை
துவரம் பருப்பு 1/4 கப்...
தக்காளி1
உள்ளி 2 பல்லு
காய்ந்த மிளகாய் 5
வெங்காயம் 1
புளி 2 மேசைக்கரண்டி
சாம்பார் பெளடர் 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி

தாளிக்க
கடுகு
சீரகம்
கருவேப்பிலை
முருங்கைக்காய் 1
கத்தரி 1
உருளை 1
{காய்கறிகள் விருப்பம்போல் மாற்றலாம்}

செய்முறை

1.பருப்பு,உள்ளி,மிளகாய் ,தக்காளி,1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பவுடர் என்பவற்றை ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

2.இன்னொரு பாத்திரத்தில் வெங்காயம் கடுகு சீரகம் ,கருவேப்பிலை தாளிக்கவும்

3.தாளித்தவற்றுடன் காய் கறிகளை கொட்டி சிறிது தண்ணீர் ,உப்பு ,சாம்பார் பொடி சேர்த்துமூடி வேக வைக்கவும்

4. இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்பு சேர்க்கையில் பாதியை கொர கொரப்பாக அரைக்கவும்

5. வேகிய காய்கறிகளுடன் எல்லாவற்றையும் சேர்க்கவும்

6. புளிக்கரைசலை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு சாம்பார் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
சாம்பார் ஒரு சத்து மிக்க உணவு.கிட்டத்தட்ட இதுவும் ஒரு சூப் போலதான்.சத்து ,சுவை ,இலகுவில் செமிக்கும் ,வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது என்று இதன் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கிளீனிங்

கடையில் நாங்கள் சுத்தம் செய்வதற்கு வாங்கும் பிரத்தியேக பொருட்கள் விளம்பரத்தில் சொல்லப்படுவது போன்று நமக்கு பலன் கொடுப்பதில்லை.மிகவும் விலை மலிவான இந்த பேகிங் சோடா நமக்கு எவ்வளவு பயன்கொடுக்கிறது பாருங்கள்

பொட்டு கடலை சட்னி

எல்லா நேரங்களிலும் சமையலுக்கு அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை.அப்பிடி செலவிட்டாலும் வாயில் வைக்கும்போது அவ்வளவு நேரத்தையும் அநியாயம் பண்ணியதுபோல் சுவை இருக்கும் .ஆனால் குறைந்த பொருட்களுடன் குறைவான நேரத்தில் செய்யும் உணவுகள் குறைகளுக்கு வாய்ப்பின்றி அபாரமாக அமைந்து விடுவதை நாம் எல்லோருமே அனுபவத்தில் கண்டிருப்போம்

கிச்சன் ஐ நறுமணம் செய்ய

சமையலின் போது ஏற்படும் மணங்கள் பசியாக இருக்கும்போது நன்றாக இருக்கும்.பின் அந்த மணம் நமக்கு ஒத்து போய் ஒரு மணமாகவே தெரியாது.ஆனால் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைபவர்களுக்க்கு அது அவ்வளவு நன்றாக இருக்காது .அதேநேரம் நாம் வெளியே போகும்போது நமது ஆடைகளிலோ தலைமுடியிலோ அந்த மணங்கள் ஒட்டிக்கொண்டு வந்து நம்மை நெருங்கி பேசுபவர்களுக்கு அசெளகரியத்தை கொடுக்கிறது.ஆகவே நாம் சமைக்கும் போதும் சமைத்து முடிந்த பின்னும் மணம் போக்கும் சில வழிமுறைகளை கையாள்வது நல்லது.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...