Wednesday, 1 February 2017

மயில் செய்வது எப்படி


நீங்கள் இந்த மயிலை கேக் அலங்காரம் செய்ய உபயோகிக்க போகிறீர்களாக இருந்தால் fondant இல் தான் கண்டிப்பாக செய்ய வேண்டும் அழகுக்கு அல்லது விளையாட்டுக்குக்கு செய்வதாக இருந்தால்
polymer clay யில் செய்யலாம்.
...


ஆனால் பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போலவே இருப்பதால் ஒருபோதும் கிளே யில் செய்ததை கேக் போன்ற உணவை அலங்கரிக்க கூடாது.
தேவையான பொருட்களை ஆயத்தம் செய்து கொள்ளவும் .


1.படத்தில் காட்டியது போல் வண்ணங்களை உருட்டி வைத்துக்கொள்ளவும்

2.நீல வண்ணத்தை எடுத்து உள்ளங்கை அளவு நீளத்துக்கு உருட்டி 1 இஞ்சி அளவில் பெருவிரலால் அழுத்தம் கொடுத்து படத்தில் காட்டியுள்ளது போல் வளைக்கவும்.



3.இப்போது மஞ்சல் நிறத்தில் கூராக உருட்டி மயில் சொண்டு செய்து அதை பல் குத்தும் குச்சியை சிறுதுண்டாக உடைத்து அதில் குத்தி வைக்கவும்.

4.குட்டி குட்டியாக 5 மஞ்சல் உருளைகளும் 2 கருப்பு உருண்டைகளும் உருட்டி கண்ணும் மயில் கொண்டையும் செய்து சின்ன குச்சியில் குத்தவும்

5.மயிலை நீங்கள் அலங்கரிக்க தொடங்கும் போது கழுத்துக்கு ஏதாவது வைத்து {சிறிய பேப்பர் ஐ சுருள் செய்து வைக்கலாம்}உலர்ந்தபின் மறுனாள் அதை எடுத்து விடவும்.



6.இப்போது கண் ,கொண்டை என்பவற்றை சரியாக சொருகி வையுங்கள்
அடுத்து


7.மயில் இறகுக்கு ஒத்துப்போக கூடிய 3 வண்ணங்களை எடுத்து உருட்டவும்



8.முதலில் வைப்பதை தவிர்த்து மற்றையது இரண்டையும் தட்டையாக்கவும்.


9.இப்போது ஒன்றன்மேல் இன்னொன்றை வைத்து உருட்டி


10.மெலிய துண்டுகளாக வெட்டவும்.
11. கத்தியால் கோடுகள் போன்ற அடையாளம் விரும்பினால் போட்டுக்கொள்ளவும்


12. பல் குத்தும் குச்சியில் குத்தி மயில் தோகையை அலங்கரிக்கவும்


வீட்டிற்குள் தாவரங்கள்

வீட்டிற்குள் தாவரங்கள் வைத்து அழகுபார்ப்பதில் யாரும் விதி விலக்காக இருந்து விட முடியாது.பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒரு அழகான பொழுது போக்கு இது.

பொழுது போக்கு என்பதற்கும் மேலாக பச்சைத்தாவரங்களை பார்க்கும் போதெல்லாம் மனச்சஞ்சலங்கள் நீங்குவதும் புத்துணர்வு ஏற்படுவதையும் அனைவரும் உணர்ந்தும் இருப்பார்கள்.

இவ்வாறு தாவரங்களை வைக்கும் போது அதனுடன் சேர்த்து சில அலங்காரங்களை செய்து வைத்தால் அழகாகவும் பார்க்கும் நேரமெல்லாம் சந்தோசமாகவும் இருக்கும்.
...
அதாவது பறவைகள்,பொம்மைகள்,வண்ணத்துப்பூச்சி போன்றவையோ அல்லது சில தாவரங்களை விரும்பி உண்ணும் பறவைகள் விலங்குகள் பொம்மைகளையும் அந்தந்த தாவரங்களுடன் சேர்த்து வைக்கலாம்.







எழுத்து அலங்காரம்



சுலபமாக  மிகவும் அழகாக விசேசங்களுக்கு எழுத்துக்களை செய்து கொள்ள

தேவையானவை
அட்டைப்பெட்டி  சில
துணி
க்ளூ
கத்தரிக்கோல்
பென்சில்




அட்டையை எடுத்து அதில் தேவையான அளவு பெரிதாக எழுத்துக்களை வரைந்து கொள்ள வேண்டும்.



எழுதிய பின் எழுத்தை வெட்டி எடுத்து துணியில் வைத்து அதே அளவு வெட்டாமல் ஒ அங்குலம் பெரிதாக வெட்ட வேண்டும்.( துணியை  எழுத்தின் பின்புறமாக திருப்பி ஒட்டுவதற்கு}



வெட்டிய துணியை எழுத்தின் ஓரத்தில் பேஸ்ட் ஐ தடவி துணியை ஒட்ட வேண்டும்.




எழுத்துக்களின் நடுவே வரும் வட்டங்களுக்கு துணியில் ஒரு வெட்டு வைத்து ஓரங்களில் ஒட்டியதுபோலவே மறுபக்கம் மடித்து ஒட்ட வேண்டும்.



துணிகளில் பூக்களை வைத்தும் அலங்கரித்துக்கொள்ளலாம்


3 டி இதயம் சுவர் அலங்காரம்




ரெட் அல்லது பிங் அட்டை ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

அதில் இதய வடிவுகளை பெரிது சிறிதாக 4 அளவுகளில் வெட்டவும் .
...
சிறியதில் கொஞ்சம் அதிகமாக வெட்டவும்.


படத்தில் காட்டி உள்ளதுபோல் நடுவில் வெட்டி மடிக்கவும்.

இரண்டு மடிப்பையும் ஒட்டவும்.

அவ்வளவுதான் விசேஷ நாட்களில் வழக்கமான சுவர் அலங்காரத்திற்கு பதில் வித்தியாசமாக சுலபமாக இதை செய்து ஒட்டி அலங்கரிக்கலாம்.



திருமண ரிஷப்சன் ஆக அல்லது வீட்டில் செய்யும் வெட்டிங் டே ஆக இருப்பின் இதிலேயே உள்ள பெரிய ஹாட் ல் பெயர் எழுதலாம்.


ஈசி சின்ன வெங்காய கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்
 
100கிராம் சின்ன வெங்காயம்
100 கிராம் நெத்தலி கருவாடு...
புளி சிறிது
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
1 உள்ளி
கருவேப்பிலை
கடுகு
சீரகம்





1.கருவாட்டை சுடுநீரில் அலசி சுத்தம் செய்து வைக்கவும்

2.வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.வெட்ட தேவையில்லை.

3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளிக்கவும்.

4அதனுடன் சேர்த்து கருவாடு ,வெங்காயம்,உள்ளி என்பவற்றையும் தாளிக்கவும்

5.உப்பு ,தனிமிளகாய்த்தூள் என்பவற்றை சேர்த்து புளியையும் கரைத்து விட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டால் போதும்
சுவையான வெங்காய கருவாட்டு குழம்பு தயார்.




ஈஸி பீன்ஸ் சுண்டல்



தேவையானவை

வெங்காயம் 1
செத்தல் மிளகாய் 2
உள்ளி 1பல்லு
தேங்காய்ப்பூ 1 கைப்பிடி
பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1டீஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு




1.பீன்ஸ் ஐ மெலிதாக அரிந்து கொள்ளவும்.

2.பீன்ஸை மூடுமளவு தண்ணீர் விட்டு உப்பு மஞ்சல் சேர்த்து வேக வைக்கவும் .

3.தண்ணீர் வற்றி பீன்ஸ் வேகியதும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள வெங்காயம் ,செத்தல் மிளகாய் பெருஞ்சீரகம் ,தேங்காய்ப்பூ ,கருவேப்பிலை,பூடு
எல்லாவற்றையும் போட்டு மெல்லிய நெருப்பில் கிளறி விட்டு இறக்கவும்.




மிகவும் சுவையான நேரத்தை சிக்கனப்படுத்தும் சுலபமான பீன்ஸ் சுண்டல் சோற்றுடன் சாப்பிட ரெடி.



ஈஸி வாழைக்காய் பஜ்ஜி



தேவையானவை

வாழைக்காய்  2
கடலை மா 1 கப்
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு



செய்முறை

1.வாழைக்காயை தோல் நீக்கி படத்தில் காட்டியதுபோல் மெலிதாக சீவிக்கொள்ளவும்

2.  கடலைமா , தனிமிளகாய்த்தூள்,உப்பு மூன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசைமா பதத்திற்கு குழைக்கவும்.

3. எண்ணெய் கொதித்ததும் வாழைக்காயை இந்த கலவையில் முக்கி எடுத்து பொரித்து எடுக்கவும்.

மா உப்பியது போல் வாழைக்காய் தெரியாமல் மூடி இருந்தால் சரியாக செய்து விட்டீர்கள் என்று கொள்ளவும்


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...