Thursday, 2 February 2017

fritz box potato chipper

fritz box potato chipper
சாதாரணமா கிச்சனில் நாம் செய்யும் வேலைகளை சுலபமாக்க கடைகளில் பலதரப்பட்ட உபகரணங்கள்,மெசின்கள் கிடைக்கும் என்பது யாவரும் அனுபவித்ததே.
அவை உண்மையிலேயே நம் வேலைகளையும் நேரத்தையும் சேமித்து தருகின்றதா? என்றால்

எனக்கு நம்முடைய கைப்புள்ளையின் கொசு அடிக்கும் நவீன இயந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும்.
நான் கட்டிங்க் போர்ட்டில் வைத்து மிக வேகமாக வெங்காயம் அரிவேன்.ஆனாலும் வெங்காய மணம் ஒட்டாமல் இருக்கவும் கண்ணெரிவை தடுக்கவும் கடையில் இருப்பதை எல்லாம் நம்பி நம்பி வாங்கினேன்.

வெங்காயத்தை உரித்து { கொசுவை தேடி பிடித்து } கத்தி எடுத்து கழுவி கட்டிங்க் போர் ட்ல் வைத்து பாதியாக வெட்டி பின்னர் வெங்காயம் அரியும் மெஷினை எடுத்து கழுவி அதற்குள் அந்த வெங்காயத்தை வைத்து வெட்ட வேணுமாம்.
அதாவது இப்பிடி தொடுற மூக்கை செலவு பண்ணி சிரமப்பட்டு அப்டீக்கா வந்து தொடவேணுமாம்.
இது ஒரு உதாரணம் இதைப்போல ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி குவித்து மிஞ்சியது குட்டி குட்டி குடும்ப பிரச்சனைதான்.மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு கப்போர்ட் ல இடத்தை வீணாக்கி
அடுக்கி வைச்சிருக்கிறதுதான் மிச்சம்.

ஆனாலும் எல்லாவற்றையும் அவ்வாறு சொல்லிவிட முடியாது.
உருளைக்கிழங்கை சிப்ஸ் மாதுரி அரிந்து கொள்ள ஒரு மஷின் வாங்கினேன் கொஞ்சம் பாரம் .ரெண்டு உருளைக்கு இதை எடுத்து கழுவிக்கொண்டு எதற்கு என்றுவிட்டு கையால் வழக்கம்போல வெட்டி விடுவேன்.

ஆனால் இங்கு நான் காட்டி இருப்பது ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா,2 ப்ளேட் அவ்வளவே தான்.சட்டென்று எடுக்கலாம் சட்டென்று கழுவி வைக்கலாம்.பாரமும் கிடையாது ப்ளேட்ஸ் ஐயும் உள்ளே வைத்து மூடி வைக்கலாம்.

இங்குள்ள kitchen stuff plus இல் 5 டொலர்களுக்கு வாங்கினேன்
அடிக்கடி பிள்ளைகளிற்கு fries செய்து கொடுப்பேன்.என் மகள், ம்மா பொட்டக்கோ என்பாள் .உடனே இதில் உருளை வெட்டி பட்டர் பூசி 15 நிமிடம் அவனில் வைத்து கொடுத்து விடுவேன்.
அவனில் ம் வைக்கலாம் எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம் .சமயத்தில் வெங்காயம் கூட இதில் நறுக்குவேன்.
பெயர் fritz box potato chipper.
என்னை போல கண்டதையும் வாங்கி ஏமாறாமல் இப்படி தெரிந்தெடுத்து சிலதை வாங்க என் பதிவு உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி பகிர்ந்திருக்கிறேன்.
https://youtu.be/QHkdjsPFOj4
fritz box potato chipper
சாதாரணமா கிச்சனில் நாம் செய்யும் வேலைகளை சுலபமாக்க கடைகளில் பலதரப்பட்ட உபகரணங்கள்,மெசின்கள் கிடைக்கும் என்பது யாவரும் அனுபவித்ததே.
அவை உண்மையிலேயே நம் வேலைகளையும் நேரத்தையும் சேமித்து தருகின்றதா? என்றால் எனக்கு நம்முடைய கைப்புள்ளையின் கொசு அடிக்கும் நவீன இயந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும்.

நான் கட்டிங்க் போர்ட்டில் வைத்து மிக வேகமாக வெங்காயம் அரிவேன்.ஆனாலும் வெங்காய மணம் ஒட்டாமல் இருக்கவும் கண்ணெரிவை தடுக்கவும் கடையில் இருப்பதை எல்லாம் நம்பி நம்பி வாங்கினேன்.

வெங்காயத்தை உரித்து { கொசுவை தேடி பிடித்து } கத்தி எடுத்து கழுவி கட்டிங்க் போர் ட்ல் வைத்து பாதியாக வெட்டி பின்னர் வெங்காயம் அரியும் மெஷினை எடுத்து கழுவி அதற்குள் அந்த வெங்காயத்தை வைத்து வெட்ட வேணுமாம்.
அதாவது இப்பிடி தொடுற மூக்கை செலவு பண்ணி சிரமப்பட்டு அப்டீக்கா வந்து தொடவேணுமாம்.

இது ஒரு உதாரணம் இதைப்போல ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி குவித்து மிஞ்சியது குட்டி குட்டி குடும்ப பிரச்சனைதான்.மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு கப்போர்ட் ல இடத்தை வீணாக்கி
அடுக்கி வைச்சிருக்கிறதுதான் மிச்சம்.

ஆனாலும் எல்லாவற்றையும் அவ்வாறு சொல்லிவிட முடியாது.
உருளைக்கிழங்கை சிப்ஸ் மாதுரி அரிந்து கொள்ள ஒரு மஷின் வாங்கினேன் கொஞ்சம் பாரம் .ரெண்டு உருளைக்கு இதை எடுத்து கழுவிக்கொண்டு எதற்கு என்றுவிட்டு கையால் வழக்கம்போல வெட்டி விடுவேன்.

ஆனால் இங்கு நான் காட்டி இருப்பது ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா,2 ப்ளேட் அவ்வளவே தான்.சட்டென்று எடுக்கலாம் சட்டென்று கழுவி வைக்கலாம்.பாரமும் கிடையாது ப்ளேட்ஸ் ஐயும் உள்ளே வைத்து மூடி வைக்கலாம்.
இங்குள்ள kitchen stuff plus இல் 5 டொலர்களுக்கு வாங்கினேன்

அடிக்கடி பிள்ளைகளிற்கு fries செய்து கொடுப்பேன்.என் மகள், ம்மா பொட்டக்கோ என்பாள் .உடனே இதில் உருளை வெட்டி பட்டர் பூசி 15 நிமிடம் அவனில் வைத்து கொடுத்து விடுவேன்.
அவனில் ம் வைக்கலாம் எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம் .சமயத்தில் வெங்காயம் கூட இதில் நறுக்குவேன்.

பெயர் fritz box potato chipper.
என்னை போல கண்டதையும் வாங்கி ஏமாறாமல் இப்படி தெரிந்தெடுத்து சிலதை வாங்க என் பதிவு உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி பகிர்ந்திருக்கிறேன்.

candy -dipped strawberries

candy -dipped strawberries

தேவையானவை

candy melt அல்லது சொக்லேட் சிப்ஸ்
ஸ்ராபெரி
குக்கி ஷீட்
பார்பிக்யூ ஸ்டிக்

1.ஸ்ராபெரி கழுவி வடிய வைத்து பின் கொஞ்சமும் ஈரமில்லாதவாறு ஒவ்வொன்றாக துடைத்து பார்பிக்யூ ஸ்டிக் ல் சொருகி வையுங்கள்.

2.. உங்களிடம் chocolate fondue pot இருந்தால் சொக்லேட் ஐ உருக்குவதற்கு உபயோகியுங்கள்.அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து
30செக்கன் மைக்ரோவேவ் இல் வைத்து வெளியே எடுத்து ஈரமில்லாத கரண்டியால் கிளறி மறுபடி 30 செக்கன் வைத்தால் உருகும்,தவிர கொதிநீரில் இன்னொரு பாத்திரத்தை தண்ணீரில் மூழ்காதவாறு வைத்து அதற்குள் 
உருக வைக்கலாம்.

3.நன்கு உருகியதும் குச்சியில் சொருகி இருக்கும் ஸ்ராபெரியை இதனுள் அமுக்கி எடுத்து குக்கி ஸீட் ல் ஆற வைத்து விடுங்கள்
பின்னர் நன்றாக உலருமுன் விரும்பியதுபோல் அதன் மேல் அலங்காரம் செய்யுங்கள் .உலர்ந்தால் அலங்காரம் எதுவும் ஒட்டாது.

மிகவும் சுலபமாக செய்து விடலாம்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் .போட்டோ பிடித்து விட்டு தருகிறேன் என்று நீங்கள் கணவன்களிடம் மட்டுமே மிரட்டலாம்.குழந்தைகளிடம் சொன்னால் அவ்வளவுதான் போரில் ஸ்ராபெரி யூஸ் ஆகிவிடும்.
அதனால் இன்று நான் செய்த வெள்ளை 1 ,மற்றும் 2 சொக்லேட் ஸ்ராபரி ஓடிவிட்டது.மீதியை படம் பிடித்து வைத்திருக்கிறேன்.
எனக்கு பால்கனியில் வைத்து கோப்பி தயாரித்து குடிக்க மற்றும் இப்படி சின்ன வேலைகள் செய்ய ரெம்பவே பிடிக்கும்.அதனால் இயற்கையை ரசித்தபடியே வேலை முடித்த திருப்தி.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Wednesday, 1 February 2017

ஈஸி கீரை சாதம்

தேவையானவை
அரிசி 2 கப்
கீரை 1...
உள்ளி 4 பல்
பெருஞ்சீரகம்
கடுகு
உளுந்து 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் 1
பச்சை மிளகாய்4
தக்காளி 1
லெமன் சிறிது

ரைஸ் குக்கர் ல் சாதம் செய்து வைக்கவும்.

கீரை,வெங்காயம்,தக்காளி என்பவற்றை அரிந்து வைக்கவும் .

பூண்டு அரைத்து வைக்கவும்.

1.அடுப்பில் பாத்திரத்தை வைத்து கடுகு,சீரகம்,உளுந்து தாளித்து

அதற்குள் பச்சை மிளகாய், வெங்காயம் ,உப்பு ,தக்காளி ,உள்ளி சேர்த்து வதக்கி

அரிந்து வைத்துள்ள கீரையை கொட்டி

தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வேக வைக்கவும்.

வேகியதும் லெமன் சேர்த்து அதற்குள் சாதத்தை கொட்டி மிக்ஸ் பண்ணவும் .அவ்வளவேதான்

விரும்பினால் வெந்த கீரையை மிக்சியில் ஒரு சுத்து சுத்தி சேர்க்கலாம்.எனக்கு பாதி கீரையை மிக்சியில் சுத்தியும் மீதி அப்படியேயும் சாதம் சேர்த்து செய்யவே பிடிக்கும்.

கிச்சன் ஃபான் range hood கிளீனிங்

கிச்சன் ஃபான் range hood ( kitchen fan,kitchen ventilator} ஒரே நிமிடத்தில் சுத்தம் செய்ய

சுலபமாக அடிக்கடி எண்ணெய்ப்பிசுக்கு ஒட்டிக்கொள்ளும் ஒரு இடம் இது.

தினமும் சமையல் முடித்து துடைக்காவிட்டால் எண்ணெய் கிரீஸ் போல் சேர்ந்து விடும்.

சமர் வந்ததும் அடிக்கடி சாப்பாடு ,ஸ்னாக்ஸ் செய்து எடுத்துக்கொண்டு பிக்னிக் போவதால் சுத்தம் செய்யாமல் விட்டு கிரீஸ் போல் படிந்து விட்டிருந்தது என்னுடைய கிச்சன் range hood....

அவசரமாக வீடு சுத்தம் செய்யும் தேவை ஏற்பட்டபோது ,எனக்கு முன் இந்த அழுக்கை கவனித்துக்கொண்ட என் வீட்டார் ஒரே சத்தம் .இங்க வந்து பார் இது கிளீன் பண்ண 2 மணித்தியாலம் போதாது போல என்று.

எப்படி செய்ய்வது என்று தெரியாமல் கோவமாக அந்த கறையே பாத்துக்கொண்டு நிற்கும் வேளையில், மகாராணி கணக்கில் அந்த இடத்துக்கு சமூகமளித்த நான்

என் பிரதான கிளீனிங் பொருளான பேக்கிங் சோடாவை எடுத்து
அந்த கிறீஸ் மேல் தூவி ஒரு ஸ்பொஞ் {scrup sponge} ஐ எடுத்து தூவிய பேக்கிங் சோடாவை பரவி விட்டு உடனேயே வழித்து எடுத்து விட்டேன்.

அவ்வளவுதான் எல்லா அழுக்கும் அந்த ஸ்பொஞ் ல் ஒட்டிக்கொண்டது.
பேக்கிங் சோடா அழுக்கை எப்படி உறிஞ்சி வைத்துள்ளது என பாருங்கள்.
ஒரே நிமிடம்தான்.

அதாவது

1.எண்ணெய்ப்பிசுக்கின் மேல் பேக்கிங்க் சோடாவை தூவவும்

2.ஒரு ஸ்கர்ப் ஸ்பொஞ் {scrup sponge} எடுத்து பரவி விட்டு

3.அதே ஸ்பொஞ் ஆல் வழித்து எடுத்து விட்டு துணியால் துடைத்து விடுங்கள்.

விரும்பினால் இவ்வாறு செய்த பின் கிச்சன் சோப் தோய்த்த துணியால் துடைத்து விடுங்கள்.

இதில் மட்டுமல்ல எங்கே நீங்கள் எண்ணெய் பிசுக்கை போக்க விரும்பினாலும் தண்ணீர் கலக்காமல் பேக்கிங்க் சோடாவை தூவி துடையுங்கள்.

பளீச் பளீச்

ஈஸி தக்காளி சாதம்

தேவையானவை
சாதம் 2 கப்
தக்காளி 4...
வெங்காயம் 1
கடுகு ,கருவேப்பிலை,சீரகம்
பச்சை மிளகாய் 2
இஞ்சி ஒரு சிறு துண்டு
உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா 1 டீ ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்

தக்காளியை சிறு சிறுதுண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தையும் அதேபோல் நறுக்கி வைத்து விட்டு.

பாத்திரத்தை சூடேற்றி கடுகு ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய்,உளுந்து தாளித்து

 பின் வெங்காயம், இஞ்சி ,கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி அதன் பின் உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து

அதற்குள் வெட்டி வைத்துள்ள தக்காளியை கொட்டி நன்கு வதக்கவும்..
இதனுள் சாதத்தை கொட்டி கிளறி விரும்பினால் மல்லி இலை தூவி பரிமாறவும்.

அன்னாசிக்குருவி

தேவையானவை

அன்னாசி
டுத் பிக்(tooth pick)
கருப்பு திராட்சை

1.அன்னாசியை குறுக்காக பாதியாக வெட்டி அந்த பாதியை மறுபடியும் குறுக்காக வெட்டி மேலும்  2  துண்டுகள் ஆக்கவும்.

2.படத்தில் காட்டியது போல் மேல் பக்கத்தில் கூராக இருக்கும் தண்டை மெலிதாக சீவவும் .

3. இதேபோல் இன்னொரு தடவை செய்யவும்.

4.அவ்வாறு சீவிய பகுதியை படத்தில் காட்டியதுபோல் வளைத்து அதற்குள் கருப்பு திராட்சையை வைத்து குச்சியால் குத்தவும்.

5.இப்போது அன்னாசியின் சதையை தோலில் இருந்து பிரிக்கும் படியாக கீழ் பாகத்தில்  வெட்டவும்.

6. அப்படியே வைத்துக்கொண்டு  வரி வரியாக துண்டுகள் ஆக்கவும் .

7.துண்டுகளை இடம் வலமாக மாற்றி மாற்றி வெளியே நோக்கி தள்ளி விடவும் .

அழகான குருவிகளுக்கு வேறு பழங்களை சாப்பிட கொடுப்பதுபோல் அலங்கரிக்கவும்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...