வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Friday, 10 March 2017
Wednesday, 8 March 2017
மண்னைத்தாண்டி வருவாயா??????
குளிர் நாடுகளில் வசிக்கும் குட்டி விவசாயிகளுக்கு......
இதோ விண்டர் சீஸன் முடிவையும் ஸ்பிரிங் ஆரம்பத்தையும் அண்மித்துக்கொண்டு இருக்கிறோம்.
இது உங்களுக்கு பயிர்களை வீட்டுக்குள் முளையிட வைக்கும் தகுந்த காலம் என்பதை நினைவூட்டுகிறேன்.
மறந்தாலும் செடிகளை வாங்கி வைக்கலாம்தான் ஆனாலும் .விதைகளில் இருந்து கொஞ்ச மண்ணை தன் மண்டைமேல் சுமந்து கொண்டு மண்ணில் இருந்து நம்மை எட்டிப்பார்க்கும் பச்சை நிற
பேபி செடியை ரசிப்பது ஒரு கலை.
குனிந்து ,நிமிர்ந்து ,சரிந்து,வளைந்து ஒரு 2 வாரம் வரைக்கும் அந்த செடிகள் கொடுக்கும் அழகே அழகு.
இவை நான் போன வாரம் விதைத்தவை.
இந்த தடவை நான் பட்டர் பீன்ஸ்,வைன் தக்காளி,குண்டு மிளகாய் , இவளவும்தான் முளைக்க வைத்திருக்கிறேன். என்னிடம் அதிக இடம் இல்லை.மேலதிகமாக வழக்கம்போல் ஸ்ராபெரி மட்டும் வாங்கி நடுவேன்.
குண்டு மிளகாய் சில வருசத்துக்கு முன் விதைகள் வாங்கினேன்.
அதன்பின் என் செடிகளில் இருந்தே விதைகள் சேமித்து செடி வளர்க்கிறேன்.
இது என் சார்ந்தவர்களுக்கான ஒரு நினைவூட்டல் .லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூஸிக் மக்களே
Tuesday, 7 March 2017
க்ரீமி காரட் டொமாட்டோ சூப்
தேவையானவை
வெங்காயம் 2
கரட் 50g
தக்காளி 150 g
பட்டர் 1 tsp
க்ரீம் சீஸ் {cream cheese} 2 tbsp
பச்சை மிளகாய் {காரம் விரும்பினால்} 1
பால் அல்லது தண்ணீர் 1cup
உப்பு தேவையான அளவு
மிளகு
செய்முறை
1 சட்டியை சூடுபண்ணி பட்டரில் வெங்காயம் காரட்,தக்காளி ,பச்சை மிளகாய் என்பவற்றை உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.
1 சட்டியை சூடுபண்ணி பட்டரில் வெங்காயம் காரட்,தக்காளி ,பச்சை மிளகாய் என்பவற்றை உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.
2.காய்கறி வதங்கியதும் 1 கப் தண்ணீர் அல்லது 1 கப் பால் சேர்த்து மேலும் 5 நிமிடம் வேக விடவும்
3.ஸ்டவ் ஐ அணைத்துவிட்டு கிரீம் சீஸ் ஐ சேர்க்கவும்
6. எல்லாவற்றையும் ப்ளெண்டரால் நன்கு அரைக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும்
Saturday, 4 March 2017
ஈஸி ஊறுகாய்
தேவையானவை
லெமன் 2 கிலோ
உப்பு 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் 3 டேபிள் ஸ்பூன்
லெமன் 2 கிலோ
உப்பு 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 100கிராம்
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
ஆயத்தம்
லெமன்ஸ் கழுவி வடிய வைக்கவும்
போத்தல் ஒன்று கழுவி ஈரமில்லாமல் துடைத்து வைக்கவும்
போத்தல் ஒன்று கழுவி ஈரமில்லாமல் துடைத்து வைக்கவும்
செய்முறை
1.ஒருகிலோ லெமன்ஸ் ஐ எடுத்து 4 துண்டுகளாக வெட்டி போத்தலுக்குள் போடவும்
2.மீதி ஒரு கிலோ லெமன்ஸ் ஐ பிழிந்து சாற்றை எடுத்து வெட்டிய லெமன்ஸ் அதற்குள் மூழ்குமாறு சேர்க்கவும்.
3. இதற்குள் உப்பு மஞ்சல் இரண்டையும் சேர்க்கவும்
4. வெயில் அல்லது லைட் வெளிச்சம் படும் இடத்தில் வைத்து தினமும் குலுக்கி விடவும்.
5. 1 வாரத்தின் பின் கலவை நிறம் மாறி தண்ணீர் வற்றி வந்ததும் காய்ந்த மிளகாய் ,நச்சீரகம் இரண்டையும் மெல்லிய தீயில் வறுத்து
பொடித்து சேர்க்கவும்.
பொடித்து சேர்க்கவும்.
சாப்பிட எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியை உபயோகிக்கவும்.
எப்போ இந்த costco க்கு போனாலும் இதோ இந்த அணில் கூடுகள் இருக்கும் வியூ தான் நம்முடைய பார்க்கிங் ஆக இருக்கும்.
சில நேரம் அதுக்காவே சில ரவுண்ட்ஸ் அடிப்போம். எங்களுக்கு கோப்பி அவர்களுக்கு பாப்கோன் எல்லாம் கொண்டுபோய் நேரம் செலவிடுவோம்.
நான் தனியே அவசரமாக போனால் கூட அங்கேயே பார்க் பண்ணி 1 நிமிடமாவது ரசித்துவிட்டுத்தான் கிளம்புவேன்.
சில நேரம் அதுக்காவே சில ரவுண்ட்ஸ் அடிப்போம். எங்களுக்கு கோப்பி அவர்களுக்கு பாப்கோன் எல்லாம் கொண்டுபோய் நேரம் செலவிடுவோம்.
நான் தனியே அவசரமாக போனால் கூட அங்கேயே பார்க் பண்ணி 1 நிமிடமாவது ரசித்துவிட்டுத்தான் கிளம்புவேன்.
அவ்வளவு பிஸியாகவும் சந்தோஷமாவும் இருப்பார்கள் இந்த அணில் குடும்பங்கள்
குளிர் காலத்திலும் அதிக ஸ்னோ நாட்களிலும் போனால் ஏதோ ஒரு வெறுமை .
கோப்பியை ருசிக்கவும் முடிவதில்லை
அவர்களின் வெறும் கூடுகளை
ரசிக்கவும் முடிவதில்லை
அவர்களின் வெறும் கூடுகளை
ரசிக்கவும் முடிவதில்லை
ஆனால் வாழத்தெரிந்தவர்கள்.சேமித்ததை சாப்பிட்டோ இடத்தை மாற்றியோ இந்தக்காலநிலையை கடந்து அடுத்த மாதம் ஓடோடி வந்துவிடுவார்கள் என்ற நின்மதியிலும் எதிர்பார்ப்புடன் நாமும் அவர்களும்
வாழும் போராட்டத்தில் நாட்களை நகர்த்தியபடி......
வாழும் போராட்டத்தில் நாட்களை நகர்த்தியபடி......
ஆயா சுட்ட வடை
ஒரு ஊரில ஒரு ஆயா ஒரு பெரிய ஆலமரத்து நிழல்ல உக்காந்து 33 வருஷமா வடையா சுட்டுகிட்டு இருந்திச்சாம்.
திடீர்னு அடிச்ச மர்ம புயல்ல ஆலமரம் அடியோட சாய்ஞ்சிரிச்சாம்.
திடீர்னு அடிச்ச மர்ம புயல்ல ஆலமரம் அடியோட சாய்ஞ்சிரிச்சாம்.
அப்போ ஆலமர நிழல் க்கு பதில் அரக்கர்கள் கூட்டம் ஊசிக்காத்தும் நுழையாமல் மொய்ச்சுகிட்டுதாம்.
அப்போ அங்குட்டு இடையிடையே ஒத்த வடைய ருசிபாத்து திரிஞ்ச நரி ஓண்ணு இனிமேல் வடை பிஸினஸ் நாந்தான் பண்ணுவேன், ஆலமரத்து ஆன்மா சொல்லிகிச்சு நு அடம்புடிச்சுதாம்.
ஆயா க்கு வந்த கோவத்தில வடை சட்டிகளை தூக்கிட்டுபோய் ஏசி ரூம் ல வச்சு பூட்டிகிச்சுதாம்
இதுல கடையும் இல்லாமல் வடையும் இல்லாமல் இடிக்கு மேல இடி விழுந்த வாடிக்கையாளர்களில
ஆயா வடைக்கு உமிழ்நீர் சுரந்தபடி குடையை எடுத்துக்கிட்டு சிலர் ஓட
இப்போதைக்கு கடையை காப்பாற்றியாகவேண்டுமே என்று நரியை தேடி பலர் ஓட...............
கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ
இதுல படிப்பினை என்னன்னா சுவர் இருந்தாதான் சித்திரம் வரையலாம். கடை முக்கியம்லே மக்கா
சுரேஜினி பாலகுமாரன்
Subscribe to:
Posts (Atom)
youtube to usb converter
எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...
-
பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப் பானையில் ஓர்புறம் ஓட்டையடா ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே பு...
-
தேவையானவை சிவப்பு அரிசிமா 1/4 கப் அவித்த மைதா மா 1/4 கப் பயறு 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் 2 கப் சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ...
-
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" (நா...