Thursday, 11 May 2017

தற்கொலைத்தக்காளி upside down topsy turvy


தலைகீழாக தக்காளி வைப்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.




காலநிலையும் பராமரிப்பும் சரியாக இருக்கும்பட்சத்தில் சாதாரணமாக நிலத்தில் நடுவதை விட பன்மடங்கு காய்கள் கொடுக்கும் என்று ஆராய்ந்து இந்த முறையை பயன்படுத்துகிறார்கள்.
நமது இடவசதிக்கேற்ப நாங்களும் இதன் மூலம் பலன்பெறலாம்.குறிப்பாக இட வசதி குறைந்தவர்களுக்கு உகந்தது.
கடைகளில் இந்த upside down topsy turvy ஐ வாங்கியும் உபயோகிக்கலாம் .



சுலபமாக நாங்களே இந்த ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டி இருக்கும் பாக் ஐ கொண்டோ பழைய பக்கெட் ஐ கொண்டோ வாளிகளை கொண்டோ,சாதாரண பூச்சாடிகளைக்கொண்டோ
இதை செய்து கொள்ளலாம்.
மிகவும் சுலபமாக செய்யலாம் .


சிலர் தண்ணி போத்தலில் செய்வதையும் பாத்திருக்கிறேன்.
1.நீங்கள் பாவிக்கப்போகும் உபகரணத்தின் அடிப்பாகத்தில் மிகச்சிறிய துளை ஒன்றை இட்டுக்கொள்ளுங்கள் 
2.ஒரு காட்டன் ,அல்லது வெல்வெட் பழைய துணி அல்லது நீரை வெளிவிடக்கூடிய ஃபோம் எடுத்து ஒரு வட்டமாக வெட்டி அதிலும் சிறிய துளை விடுங்கள்.
{நான் படத்தில் காட்டியதுபோல் நெட் இருந்தாலும் துணியை சின்னதாக வைத்து நெட் ஐயும் சேர்த்து வைக்கலாம் .பட் கட்டாயமில்லை}
3.இப்போது துணியை வாளிக்குள் வைத்து தக்காளியின் வேர் நம்மைப்பார்க்கக்கூடியதாகவும் தளிர் பூமியை பார்க்ககூடியதாகவும் உள் நுளைத்துவிடுங்கள்.
மிக முக்கியமான விடயம் செடி 3 வாரத்திற்கு உட்பட்ட அதாவது அதிகம் வேர்விடாததாக இருக்க வேண்டும்
4.ஓரளவு மண் நிரப்பியதும் உயரத்தில் ஏற்ற இடத்தில் மாட்டி விடுங்கள் 
மீதி மண்ணை மாட்டிய பின் நிரப்பலாம்.


அவ்வளவுதான்
எனக்கு போன வருடம் அவ்வளவாக காய்க்கவில்லை.காலநிலை சரியில்லை யூன் மாதம் ஸ்னோ கொட்டி மண்ணை மறைத்துக்கொண்டு ஸ்னோ படிந்திருந்தது.ஆனாலும் 2 அழகான குட்டிப் பழங்கள் தரவே செய்தது.
2015 நிறைய காய் தண்ணீர் கூட ஊற்றவில்லை டைப்பர் ல் தண்ணீர் நனைத்து மண்ணுக்குள் மூடி விட்டு டூர் போய்விட்டோம் .ஆனாலும் நிறைய காய்கள்.
கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் காய்கள் தராவிட்டால்கூட பார்க்கும் நேரமெல்லாம். பிஸியும் மன இறுக்கங்களும் களைந்து மனதை மகிழ்விக்கும் 
இதானால் ஏதும் நட்டம் ஏற்படப்போவதில்லை.











யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்


இது எவ்வளவு விசேஷமானது என்று என் ஈழ மக்களுக்கு சொல்லவே வேணாம்.
இருந்தாலும் நான் செய்ததை என் சொந்த பாஷையிலேயே மாற்றம் செய்யாமல் சொல்லீட்டு போறன்.
ஆயத்தம் செய்யுறதுதான் கஸ்டம் அதனால மெல்ல வீட்டில உள்ள எல்லாரையும் கூட்டு சேர்க்கவேணும்.
கஷ்டமான வேலை முடியவிட்டு ,நான் செய்யுறன் ,வெளிய போங்கோ எண்டு வத்தி விட்டுட வேணும்.


தேவையானவை


5,6 பேருக்கு

ஒடியல்மா 150 கிராம்
நண்டு கால் கிலோ
இறால் கால்கிலோ
கணவாய் அரை கிலோ
பயித்தங்காய் 100 கிராம்
மரவள்ளி கால் கிலோ
முருக்கை இலை கொஞ்சம்
பலாக்கொட்டை 100 கிராம்
குத்தரிசி 2 கைப்பிடி
மீன் தலை கால் கிலோ
உள்ளி 10 பல்லு
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் 20 { உறைப்பு பார்த்து தேவைப்பட்டால் இன்னும் சேர்க்கவும்}
புளி ஒரு டேபிள் ஸ்பூன்
ஆயத்தம்


1.ஒடியல் மாவை தண்ணீரில் ஊற வைத்து கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை மேலே உள்ள தண்ணியை ஊற்றிவிட்டு புது தண்ணி மாற்றவும்
கயர்ப்பு போக 3 தடவையாவது இவ்வாறு செய்யவும்
2. தண்ணீரில் உள்ள ஒடியல் மாவை துணியால் பிழிந்து தண்ணீரை நீக்கி எடுத்து 1 கப் புது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
3...மீன் ,நண்டு ,இறால் , கணவாய் எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைக்கவும்.
4..பயிற்றங்காய்,மரவள்ளி ,பலாக்கொட்டை ,முருக்கை இலை இவற்றையும் சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்
5.. உள்ளி,மிளகாய்,மிளகு மூன்றையும் அரைத்து வைக்கவும்
6.. புளியை கரைத்து வைக்கவும்
செய்முறை


அடுப்பை மிதமான வெப்பத்திலயே வச்சிருங்கோ
தேவைக்கேற்ற மாதிரி அப்பப்போ தண்ணியும் ,உப்பும் சேர்க்க மறக்க கூடாது.
1.வீட்ல உள்ளதில பெரிய பாத்திரமா ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.
2. 4 கப் தண்ணி விட்டு பயிற்றங்காய் ,பலாக்கொட்டை,அரிசி மூன்றையும் வேக வைக்கவும்
3. கொஞ்சம் வெந்து கொண்டு இருக்கும் போது கணவாய் ,நண்டு ,மீன் சேர்க்கவும்
4. ஒரு 5 நிமிஷம் வேக விட்டு மரவள்ளி ,இறால் ,முருங்கை இலை மூன்றையும் போடவும்
5. கொதித்து எல்லாம் வெந்து வரும்போது அரைத்து வைத்திருக்கும் உள்ளி ,மிளகு,மிளகாய் கலவையை சேர்க்கவும்
6. இப்போது எல்லாம் வெந்த பிறகுதான் புளி சேர்க்க வேண்டும்.
7. புளி மணம் போக 5 நிமிஷம் மெல்லிய ஹீட் ல கொதிக்க வச்சுட்டு ஒடியல்மா கரைசலை சேர்க்கவும்
ஒடியல் மா சேத்த உடன அடிப்பிடிக்க பாக்கும் கவனமா கிண்டி விட்டு அடுப்பை அணைக்கவும் { நோஓஓஓ அடுப்பை கட்டிப்பிடிக்க குடாது யுடும் ]





Stress Relief Ball


மன அழுத்தங்களும் ,மனப்பதட்டங்களும் அப்பப்போ எல்லோருக்குக்கும் வந்து போவதுதான்.
இயலாமையில் புலம்பவும் செய்வோம் ,ஆனால் புலம்புதல் விடுதலை கிடையாது. எல்லா டென்ஷன்களையும் வாய்விட்டு பொதுவெளியில் 
புலம்பத்தொடங்கினோமானால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தை தொடர வேண்டி மனம் ஒவ்வொரு துரும்பு பிரச்சனைகளையும் தன்னுள் ஆழப்பதிய வைக்கத்தொடங்கிவிடும்.
இது நிச்சயமாக மன உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலே.அதற்காக எந்த துன்பத்தையும் பகிரக்கூடாது என்பது அர்த்தமல்ல .எல்லாத்துன்பங்களையும் பகிர்ந்து கொண்டே இருக்கக்கூடாது என்பதே.
கண்டிப்பாக சில துயரங்களை பகிர்ந்து ஆறுதல் பெறுதல் அவசியம்.
Stress Relief Ball .இது நிச்சயமாக எல்லோரும் வைத்திருப்பீர்கள்.ஆனால் அடிக்கடி எங்கே வைத்தோம் என்று மறந்து விடுவோம்.
ஒரு வித ஜெலியினால் ஆனது .உள்ளங்கைக்குள் அடங்கியும் அடங்காத வழு வழுத்த இந்த பந்தை கையில் வைத்து பிசைவதன் மூலம் 
மனப்பதட்டம் ,மன அழுத்தம் என்பன குறையும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் 
.உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும் .
தசைகள் வலுப்பெறும்.
இரத்தோட்டம் சீர் பெறுவதால் தூக்கம் வரவும்,தலைவலி ,உடல்வலி குறையவும் உதவும்
கோவத்தை கட்டுப்படுத்தும்.


குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம் ஹாண்ட் ரைட்டிங் அழகாகும் என்பார்கள்.
பலருக்கு ஒரே நேரத்தில் அதிக வேலைகள் பார்த்துவிட்டு ஓய்வெடுக்க பிடிக்கும் அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் நேர்த்தியாக சிந்திக்க வேண்டி, வேலைகளுக்கு நடுவே இதை உருட்டலாம்.
வேலைக்கோ ,அப்பொயிண்ட்மண்ட் க்கோ நேரம் கடந்தாலோ மட்டுமட்டாகிப்போனாலோ படபடப்பை குறைக்கவும் இதை யூஸ் பண்ணலாம்
இப்படி பல தேவைக்கு யூஸ் பண்ணலாம்தான் ஆனால்
எங்கே என் ஸ்ரெஸ் பால்? எங்கே என் ஸ்ரெஸ் பால்???? என்று தேடவே இன்னொரு டென்ஷன் கிளம்பும்.
பட் இதை நீங்கள் அப்பப்போ சட்டென்று செய்து கொள்ளலாம்
தேவையானவை
மைதா மா அல்லது பேக்கிங்க் சோடா 
சிறிய பலூன்
ஃபுனல் {funnel}அல்லது பேப்பர் கோண் 
{பேப்பரை படத்தில் காட்டியதுபோல் கோன் ஆக சுருட்டி முனையில் சிறிது வெட்டி விட்டு கோன் கலையாதவாறு ரேப் ஒட்டலாம்}
பலூன் உள்ளே மாவை செலுத்தி தொய்வு இல்லாமல் இழுத்து முனையை கட்டி விடுங்கள்.கட்டிய முனையை வெட்டாமலும் விடலாம் .வெட்டுவதாக இருந்தால் அருகே வெட்ட கூடாது. 
பந்தை உருட்டும்போது கட்டு அவிழ்ந்து விடும் .பலூன் சிறியதாக இருந்தால் வெட்டத்தேவையே இல்லை.
அவ்வளவுதான்.
கடையில் வாங்கிய ஒரு ball பழையதானதும் வெட்டி பாத்தேன் உள்ளே பேக்கிங் சோடாவேதான்.அதனால் நாங்களே செய்து கொள்ளலாமே.

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????
நாமெல்லாம் இப்போது ஒரு நாளுக்கு 50 போட்டோஸ் எடுத்தாலும் நம் மனசு பொக்கிஷமாக நினைப்பது என்னவோ நம் சிறுபிராயத்து போட்டோக்களைத்தான்.
ஒரு குறிப்பிட்ட வயதுவரை நமக்கு அதன் அருமை தெரியாது .அதன் பின் அதில் ஏற்படும் ஈர்ப்பு எப்போதும் தீராது.
அதிலும் நாம் மழலையாக இருக்கும்போது எடுத்த போட்டோவாக இருப்பின் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வோம்.
இதே போல் நம் குழந்தைகளுக்கு நல்ல நினைவுகளை கொடுக்க நாம் இப்போதே சிந்தித்து அவர்களின் மழலைத்தனங்களை மழலை முகங்களை நிதானமாக அழகாக படம் பிடிக்க வேண்டும்.


இதற்கான என்னால் முடிந்த சில டிப்ஸ்
1.குழந்தைகளை படம் பிடிக்கும்போது Dslr camera தான் மிகப்பொருத்தமானது என்பதை நினைவில கொள்ளுங்கள். 
அவர்களை நெருங்காமல் இடையூறு கொடுக்காமல் எடுத்துக்கொள்ளலாம்.தெளிவாக இருப்பதோடு மாற்றங்கள் செய்யவும் அளவை பெரிதாக்கவும் என நிறைய விஷயங்கள் இந்த dslr camera மூலமே சாத்தியம்.
2.அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்களோ அந்த நேரத்தை ஸூட்டிங்க் ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள்
தூங்கு முன்,தூக்கத்தில் இருந்து விழித்த ஒரு மணிநேரத்திற்குள் ,பயணங்களின் பின், பசி எடுக்கும் நேரம்,நன்றாக சாப்பிட்டு 1 மணிநேரத்திற்குள் எல்லாம் போட்டோ எடுப்பது குழந்தைகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
3.குழந்தைகள் கமராவை பார்க்க வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.அவர்கள் போக்கில் விட்டு நீங்கள்தான் விரைவாக அவர்கள் திரும்பும் பக்கத்திற்கு ஓட வேண்டும்.
4.குறிப்பிட்ட நேரத்திற்குள் சுறுசுறுப்பாக எடுத்து முடிக்க வேண்டும்.


5.குழந்தைகளை அடிக்கடி கையால் தொட்டு தொட்டு ஆடைகளையும் அணிகலன்களையும் தலைமுடியையும் நேர்த்தி செய்யக்கூடாது .முதலே சிந்தித்து ஒரே தடவையில் அலங்காரம் செய்து விட வேண்டும்
6.கையால் அமுக்கி வைத்து எடுப்பதும் எப்போதும் நல்ல போட்டோ கொடுக்காது. அவர்களுக்காக ஒரு இருக்கையோ கம்பளமோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.
7. நாங்கள்தான் அவர்களுக்கு ஏற்றால்போல் குனிந்து வளைந்து எடுக்க வேண்டும் அவர்களை கன்ரோல் பண்ணக்கூடாது.
8. சிரமம் கொடுக்கும் ட்ரெஸ் ,அளவில்லாத ட்ரெஸ் அதிக ஜுவல்ஸ் எல்லாம் அணிந்து போட்டோ எடுக்க முயற்சிக்க கூடாது.கேர் ஸ்டைல் அவர்களுக்கு சற்றும் இடையூறு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
எல்லா ஆயத்தங்களும் முன்னரே சிரத்தையாக செய்து சில நிமிடங்களில் ஆயத்தம் செய்துவிட வேண்டும்.
9.சில குழந்தைகள் இயற்கையிலேயே போட்டோ க்கு மறுப்புக்காட்டுவார்கள் .வித விதமான ஆடைகள் அணிய ஒத்துழைக்க மாட்டார்கள்.இவர்களை போட்டோ எடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிப்போய் எடுக்கலாம்.
அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை கொடுத்து கமெராவை தூர வைத்து எடுக்கலாம்.
ஆரம்பத்தில் நிறைய குழந்தைகளுடன் சேர்த்து எடுக்கலாம். போட்டோக்கு நன்றாக ஒத்துழைக்கும் குழந்தையை இவர்கள் முன் வைத்து விதம் விதமாக போட்டோ எடுக்கலாம் பின்னர் தானாக பிடித்துபோய் 
அவர்களாகவே காஸ்டியூம் அணிந்து போட்டோ க்கு போஸ் குடுக்க ஆசைப்படுவார்கள். [இந்த டிப்ஸ் 1 வயதிற்கு மேல்}
10 ஹலோவீன் ,கிட்ஸ் பேத்டே பார்ட்டி போன்றவற்றில் அடிக்கடி பங்கெடுக்கும் குழந்தைகள் ஃபோட்டோக்கு மறுப்பது குறைவு என்கிறது ஆய்வு.{1+}
11.குறுகிய.அதிக பொருட்கள் நிரம்பிய இடத்தை தெரிவு செய்யக்கூடாது.


12.வெளிச்சம் தேவையான அளவு இருக்க வேண்டும். கம்ராவுடன் சேர்ந்த ஃப்ளாஷ் இல்லாமல் தனிப்பட்ட லைட் ஆக இருந்தால் லைட் ஐ சட்டென்று இடம் மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
13.குழந்தை ஒத்துழைக்க மறுத்தால் அத்தோடு நிறுத்தி இன்னொருநாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
14.ஒரே தடவையில் பல ஷொட் எடுப்பதுபோல் செட்டிங் ல் கொடுக்க வேண்டும்.
15 பெண் குழந்தைகளை மட்டும்தான் அழகழகாக ஃபோட்டோ பிடிக்கலாம் என்று நினைக்க கூடாது .ஆண் குழந்தைகளும் வளர்ந்தபின் மழலை ஃபோட்டோக்களைத்தான் நேசிப்பார்கள்.
அவர்களுக்கும் நிறைய காஸ்டியூம் இருக்கிறது.அழகான ஐடியாக்களை கோர்த்தால் குழந்தைகளுக்கு அழகாக சிரித்தபடியே போஸ் குடுப்பார்கள்.
மகிழ்ச்சித்தருணங்களை அலட்சியம் செய்யாதீர்கள் .நாளை நினைத்துப்பார்க்க மட்டுமல்ல உறவுகளின் நெருக்கம் விலகாமல் இருக்கவும் இதுவே உதவும்.
என் பிள்ளைகளுக்கு நான் ஒருத்தி உருண்டு பிரண்டு வேர்த்து விறுவிறுத்து ஃபோட்டோ எடுக்கிறேன் என்பதே தெரிவதில்லை.தேவையான எல்லாவற்றையும் ஒரு open box இல் எடுத்து வைத்திருந்து நல்ல மூட் பார்த்து விளையாடி விளையாடி
வழக்கமாக ட்ரெஸ் பண்ணுவதற்கும் ஸ்பெஷலா ட்ரெஸ் பண்ணுவதற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதது மாதிரியே சட்டென்று ட்ரெஸ் பண்ணி விடுவேன். எல்லாத்தையும் குறைய நேரத்தில மாட்ற மாதிரி வெட்டி தைச்சு வச்ச்சிருப்பேன்.
ஆயத்தம் பண்ணி அவர்கள் பாட்டுக்கு விட்டு, நான் சிக்கி சின்னாபின்னமாகி கமராவுடன் தவழ்ந்துகூட எடுப்பேன்.
ஆரம்பத்தில் மூத்த மகள் அழுவாள் அவள் பாட்டுக்கு வாண்டாம் போ என்றே விட்டு விடுவேன் .ஒருதடவை மிரட்டியும் பார்த்தேன்.இப்போ நினைத்தாலும் பாவமா இருக்கும்.
ஒருநாள் ஹலோவீன் பார்ட்டிக்கு போகும்போதும் காஸ்டியூம் போட மாட்டேன் என சாதரண ட்ரெஸ் ல் வந்தாள் .ஒரு வெள்ளைக்கார அம்மம்மா சொன்னார் 
வளந்தா பிறகு அட நான் மட்டும் கலோவீன் ட்ரெஸ் ஐ மிஸ் பண்ணீட்டனே அப்டி கவலை வரப்போகுது.பிரின்ஸஸ் ட்ரெஸ் உனக்கு எவளோ அழகா இருக்கும் ??? என்றார்.
அவளுக்கு பிடிக்கவில்லையாம் என்றேன்.
அவர் சொன்ன டிப்ஸ்தான் மேலே உள்ள சில.
இப்போ அக்காவும் தங்கையும் விரும்பி போஸ் குடுக்கிறார்கள்.

ஊசி வாடை



அவ்வப்போது வந்து போகும் சலிப்பு
யார்மீதோ கொண்ட வெறுப்பு
பொறாமையில் சிதறும் போட்டிகள்
உறவுகளை உடைக்கும் அலட்சியங்கள் 
அள்ளி வீசும் அவசர வார்த்தைகள் 
எள்ளி நகையாடும் ஏளனங்கள்
சொல்லி மாளாத புலம்பல்கள் 
எல்லாம் துடைத்து வீசும் 
நெடிகள் அவை
ஆன்மீகம் கற்றுத்தராத பாடம்
ஆலயம் அளித்திடாத ஞானம்
நிலை உணர்த்தும் காட்சிகள்
மாயை தள்ளாட 
 மயக்கம் தெளிய வைத்து
வாழ்வை மீளளிப்பு செய்யும் இந்த 
வைத்தியசாலை அவஸ்தை நேரங்கள்
ஆம் 
குத்திக்குத்தி
குணப்படுத்தும் ஊசி 

ரிப்போர்ட் பண்ணுங்கள்


ஏற்கனவே பேஸ்புக் ல் உங்களுடைய அக்கவுண்ட் அல்லது உங்களுடைய படங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் படங்கள் 
தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் அது உங்கள் கண்ணில் பட்டால் அதே போஸ்ட் இல் உள்ள ரிப்போட் போஸ்ட் எனும் ஆப்ஷனை
அழுத்தி உடனே ரிப்போட் ஃபைல் பண்ணும் ஆப்ஷன் ல் சென்று ரிப்போட் பண்ணுங்கள்.
ஒரு நபரின் படம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் உடனே குறித்த நபருக்குத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை.நீங்களே ரிப்போட் பண்ணலாம் .ஒவ்வொரு ஆப்ஷன் ஆக கொடுத்துக்கொண்டு போகும் போது நீங்கள் விபரம் எழுதி அனுப்பக்கூடியாதாக 
ஒரு கட்டம் அமைத்திருப்பார்கள்.
அதில் எழுதி அனுப்பினால் உங்கள் முறைப்பாட்டை ஆராய்ந்து கொள்கிறோம் என்று பதில் வரும்.பின்னர் 24 மணிநேரத்திற்குள் ஆராய்ந்து பதிவை நீக்கியோ சம்மந்தப்பட்ட தவறான நபரை நீக்கியோ உங்களுக்கு பதில் வரும்
.
உண்மை கண்டறியப்பட்டு அகற்றும் போது தலைமைப்பதிவைதான் நீக்குவார்கள் .அதனால் எத்தனை இடத்தில் அந்த பதிவு ,படம் பகிரப்பட்டிருந்தாலும் பயமில்லை அதன் பின் அந்த சுட்டி ஓப்பன் ஆகாது.
இது முதல் கட்ட அவசர நடவடிக்கையே .இதன் பின் சம்மந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்து சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்கலாம்.
யாரும் தவறானவர்களுக்கு வழிவிட்டு உங்களை தண்டித்துக்கொள்ள வேண்டாம்.
இனிமேல் பேஸ் புக் ல் தலைமைப்பதிவிட்டவரையும் தலைமைப்பதிவையும் மட்டுமன்றி அதை பகிர்ந்தவர்களையும் ப்ளாக் பண்ணும் நடவடிக்கைகள் அமுலாக்கப்போவதாக நியூஸ் ல் பார்த்தேன்.
அறிமுகமிலா நபர்களும் ஆண்களும்தான் ஆபத்தானவர்கள் என்ற எண்ணங்களை கைவிட்டு நெருக்கத்தில் இருக்கும் துரோகிகளிடத்தில் விழிப்பாக இருங்கள்.
அடிக்கடி கூகிள் ல் உங்கள் பெயரை நீங்களே தேடிக்கொள்ளுங்கள் .கூகிள் இமேஜ் ல் உங்களை தேடுங்கள். இது உங்கள் பற்றிய தவறான சித்தரிப்புகள் இருப்பின் காட்டிக்கொடுக்கும்.
யாராவது மேலும் சட்டங்கள் நடைமுறை பற்றி தெரிந்தவர்கள் மேலும் தெளிவு கொடுக்கும் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்
#நிகழ்வுகளின்அதிர்வுகள்

நாசி கோரிங் Nasi Goreng {Indonesian fried rice}

தேவையானவை






எலும்பு நீக்கிய சிக்கன் 100 கிராம்
இரால் 100 கிராம்
முட்டை 2
சாதம் 2 கப்
சோயா சோஸ் 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் 100 கிராம் {spring onion}
வெங்காயம் 1
பூடு 2 பல்லு 
இஞ்சி சிறிய துண்டு
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காரம் தேவைப்படின் 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் சேர்க்கவும்
ஆயத்தம்


1.எலும்பு நீக்கிய சிக்கனை சிறிதாக அரிந்து கொள்ளவும் 
2.முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.
3.இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்
4.வெங்காயத்தை அரிந்து வைக்கவும்.
5.இரால் ஐ தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
6.சாதம் தயார் செய்து வைக்கவும்
செய்முறை
1.சட்டி சூடாகியதும் எண்ணெய் விட்டு வெட்டிய வெங்காயம் ,இஞ்சி உள்ளி பேஸ்ட் என்பவற்றை உப்பு சேர்த்து வதக்கவும்.
2.சிக்கன் துண்டுகளையும் இறால் ஐயும் சேர்த்து கிளறவும்.
3. சிக்கன் ,இறால் இரண்டும் வெந்ததும் முட்டையை சேர்த்து கிளறி அதனுடன் வெங்காயத்தாளையும் சோயா சோஸ் ஐயும் சேர்க்கவும்
4.இவற்றுடன் சாதத்தையும் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.


வழமையாக fried rice ற்கு முட்டையை ஆம்லட் ஆக ஊத்தி இரண்டு பக்கமும் திருப்பி வேக விட்டு சிறிய சதுரங்களாக வெட்டி சேர்ப்போம் இதில் கட்டாயமில்லை.விரும்பினால் செய்யலாம்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது .நீண்ட நாட்களாக மறந்து போயிருந்தேன்.மகள் ஜப்பான் போய் வந்து ஞாபகப்படுத்தவும் மறுபடி தொடங்கிவிட்டேன்.எனக்கு புரியாணியை வெறுக்க வைத்தது இந்த 
fried rice தான் அவ்வளவு சுவையாக இருக்கும்




youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...