Thursday, 11 May 2017

Stress Relief Ball


மன அழுத்தங்களும் ,மனப்பதட்டங்களும் அப்பப்போ எல்லோருக்குக்கும் வந்து போவதுதான்.
இயலாமையில் புலம்பவும் செய்வோம் ,ஆனால் புலம்புதல் விடுதலை கிடையாது. எல்லா டென்ஷன்களையும் வாய்விட்டு பொதுவெளியில் 
புலம்பத்தொடங்கினோமானால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தை தொடர வேண்டி மனம் ஒவ்வொரு துரும்பு பிரச்சனைகளையும் தன்னுள் ஆழப்பதிய வைக்கத்தொடங்கிவிடும்.
இது நிச்சயமாக மன உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலே.அதற்காக எந்த துன்பத்தையும் பகிரக்கூடாது என்பது அர்த்தமல்ல .எல்லாத்துன்பங்களையும் பகிர்ந்து கொண்டே இருக்கக்கூடாது என்பதே.
கண்டிப்பாக சில துயரங்களை பகிர்ந்து ஆறுதல் பெறுதல் அவசியம்.
Stress Relief Ball .இது நிச்சயமாக எல்லோரும் வைத்திருப்பீர்கள்.ஆனால் அடிக்கடி எங்கே வைத்தோம் என்று மறந்து விடுவோம்.
ஒரு வித ஜெலியினால் ஆனது .உள்ளங்கைக்குள் அடங்கியும் அடங்காத வழு வழுத்த இந்த பந்தை கையில் வைத்து பிசைவதன் மூலம் 
மனப்பதட்டம் ,மன அழுத்தம் என்பன குறையும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் 
.உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும் .
தசைகள் வலுப்பெறும்.
இரத்தோட்டம் சீர் பெறுவதால் தூக்கம் வரவும்,தலைவலி ,உடல்வலி குறையவும் உதவும்
கோவத்தை கட்டுப்படுத்தும்.


குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம் ஹாண்ட் ரைட்டிங் அழகாகும் என்பார்கள்.
பலருக்கு ஒரே நேரத்தில் அதிக வேலைகள் பார்த்துவிட்டு ஓய்வெடுக்க பிடிக்கும் அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் நேர்த்தியாக சிந்திக்க வேண்டி, வேலைகளுக்கு நடுவே இதை உருட்டலாம்.
வேலைக்கோ ,அப்பொயிண்ட்மண்ட் க்கோ நேரம் கடந்தாலோ மட்டுமட்டாகிப்போனாலோ படபடப்பை குறைக்கவும் இதை யூஸ் பண்ணலாம்
இப்படி பல தேவைக்கு யூஸ் பண்ணலாம்தான் ஆனால்
எங்கே என் ஸ்ரெஸ் பால்? எங்கே என் ஸ்ரெஸ் பால்???? என்று தேடவே இன்னொரு டென்ஷன் கிளம்பும்.
பட் இதை நீங்கள் அப்பப்போ சட்டென்று செய்து கொள்ளலாம்
தேவையானவை
மைதா மா அல்லது பேக்கிங்க் சோடா 
சிறிய பலூன்
ஃபுனல் {funnel}அல்லது பேப்பர் கோண் 
{பேப்பரை படத்தில் காட்டியதுபோல் கோன் ஆக சுருட்டி முனையில் சிறிது வெட்டி விட்டு கோன் கலையாதவாறு ரேப் ஒட்டலாம்}
பலூன் உள்ளே மாவை செலுத்தி தொய்வு இல்லாமல் இழுத்து முனையை கட்டி விடுங்கள்.கட்டிய முனையை வெட்டாமலும் விடலாம் .வெட்டுவதாக இருந்தால் அருகே வெட்ட கூடாது. 
பந்தை உருட்டும்போது கட்டு அவிழ்ந்து விடும் .பலூன் சிறியதாக இருந்தால் வெட்டத்தேவையே இல்லை.
அவ்வளவுதான்.
கடையில் வாங்கிய ஒரு ball பழையதானதும் வெட்டி பாத்தேன் உள்ளே பேக்கிங் சோடாவேதான்.அதனால் நாங்களே செய்து கொள்ளலாமே.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...