Thursday, 11 May 2017

பட்டர் டீ




எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம்
சுவை மட்டுமல்ல பசியை சுமார் 3 மணித்தியாலங்கள் வரை மறக்கடித்துவிடுவதால் ரெம்பவும் பிடித்துப்போயிருக்கிறது இந்த பேலியோ டயட்டின் பிரதான டீ.
செய்முறை
அரை கப் கொதிநீரில் அதற்கேற்ற தேயிலையை சேர்க்கவும் .
அத்துடன் அரைக்கப் பாலை சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் {30கிராம்வரை} உப்பு சேர்க்காத பட்டர் ஐ சேர்த்து கப் இல் ஊற்றினால் ம்ம்ம்ம் அருமை.
அல்லது சுடுநீரில் டீ பாக் மற்றும் 30 கிராம் பட்டர் இரண்டையும் 1 நிமிடம் ஊறவைத்து அதனுள் கொதிக்க வைத்த பாலை சேர்க்கவும் .நான் இதனுடன் 1 ஏலக்காய் சேர்ப்பேன்.
10 வருடங்களுக்கு முன் கோப்பி ஷாப் இல் நாங்கள் 15 பேர்வரை கோப்பி ஆர்டர் பண்ணியதில் எனக்கு யாரோ ஆடர் கொடுத்த சுகர் இல்லாத டீ வந்து சேர்ந்துவிட்டது.நல்லாய்த்தானே இருக்கு என்று குடித்துவிட்டேன்.(ஏற்கனவே இனிப்பு
பண்டங்கள் விரும்புவதில்லை}
அதன் பிறகு டீ க்கு சுகர் சேர்த்ததில்லை. வீட்டில் ஹஸ் க்கும் அந்த பழக்கம் தொற்றிக்கொள்ள வீட்டில் இருந்த 2 கிலோ சுகர் வருசக்கணக்காக அப்படியே இருக்க டேட் முடிஞ்சிருக்குமோ என்ற பயம் வந்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டு
இன்றுவரை வீட்டில் சுகர் க்கு என்று நிரந்தரமாக ஒரு போத்தலும் கிடையாது .பிள்ளைகளுக்கும் அதே பழக்கம்.ஹெஸ்ட் வந்தால் மட்டும் sugar pot இல் இருக்கும் cube sugar அவ்வளவுதான்.
இந்த வெள்ளை சுகரால் உடலுக்கு அதிக கேடு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் .தவிர்க்க விரும்பினால் சிறிது நாட்கள் டீயில் காப்பியில் தவிர்த்துப்பாருங்கள் பழகிவிடும்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...