Tuesday, 2 May 2017

அன்னையர் தினம் 2017

இதோ இந்த மாதம் அன்னையர்கள் தினம் வரவிருக்கிறது.

இங்குள்ள குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா அம்மாவை சிறப்பிக்க கற்றுக்கொடுத்து ஊக்கமும் கொடுப்பார்கள்
.
அதேபோல் மதர்ஸ்டே ஃபாத்ர்ஸ் டே க்கு 
வரைவதோ மனசிலிருந்து வார்த்தைகளை எழுதி அன்பளிப்பு செய்வதோ சிறிய  அழகுப்பொருட்கள் செய்து தருவதோ சொல்லிக்கொடுத்திருப்பார்கள்.கடைகளிலும் வழக்கம்போல் தருணமறிந்து
சம்மந்தப்பட்ட அன்பளிப்புக்களை முன்னிறுத்த தொடங்கிவிட்டார்கள்.

நம்மில் எதைச்செய்தாலும் சலிப்பை வெளிப்படுத்தும் சிலர் இருப்பார்கள்.இவர்கள் சொல்லக்கூடும் தினமும் நேசித்தால் போதும் வருடத்தில் ஒருமுறை வரும் தினத்தில் பகட்டுக்காட்டத்தேவையில்லை என்று.

அவர்களுக்கெல்லாம் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு
ஒரு அம்மாவாக நான் தினமும் நேசிக்கப்படுவதையும் விரும்புகிறேன்.அத்தோடு எனக்குரிய நாளில் என்னை மகிழ்ச்சிப்படுத்துவதையும் மிகவும் விரும்புகிறேன்.

அன்பளிப்பு என்றால் அது பணச்செலவு என்றோ ,அல்லது பெறுமதி மிக்கதாக இருக்கவேண்டும் என்றோ நினைத்தால் அவ்வாறானவர்கள் எதிர்பார்ப்பதையும் ,கொடுப்பதையும் தவிர்ப்பதே சிறந்தது.இங்கு கொடுப்பவருக்கும் 
திருப்தி இருக்காது பெறுபவருக்கும் நிறைவு ஏற்படாது.
அல்லது மேற்குறிப்பிட்டவாறு ஒரு நொண்டிச்சாக்கை சொல்லிவிட்டு கடந்து சென்றுவிடுங்கள்.

என் வீட்டில் எனக்கு சப்ரைஸ் கிஃப்ட் வேண்டாம் என்று நானே என்ன எனக்குத்தேவை என்று சொல்லிவிடுவேன்.சொல்லாவிட்டால் கடும் விலையில் கண்ணுல கண்டதெல்லாம் கிஃப்டா வந்துடும்.

அந்த அவஸ்தையை நான் குடுக்க விரும்புவதில்லை. இந்த தடவை கடைசி படத்தில் இல் உள்ள Panda Bear/Cub Floating Tea Infuser ஐ சப்ரைஸ் ஆக வாங்கித்தரும்படி கேட்டு வைத்துள்ளேன்.
அதேபோல் உங்களுக்கு டீன் ஏஜ் பிள்ளைகள் இருந்தால் இன்னும் கவனமாக முன்னமே சொல்லி வைப்பது நல்லது .அல்லது பாவம் பிள்ளைகள் ஓடி ஓடி ஏதாவது வாங்கி அது அடங்காமல் இன்னொன்று வாங்கி 
கண்டபடி செலவு செய்துவிடுவார்கள்
.
இந்த தடவையும் சில கிஃப்ட் ஐடியாக்கள் சிலர் கேட்டபோது பேஸ்புக்கிலும் மெயில் இலும் எனக்கு வந்த ஆஃப்பர் களை க்ளிக் பண்ணி அப்படியே அனுப்பினேன் அதை இங்கும் தந்திருக்கிறேன்.எடிட் பண்ணி போட்டோவை மட்டும் தருவதை விட ஸ்க்ரீன் ஷாட் ஐ அப்படியே
தருகிறேன் ஸ்டோர் நேம் ,விலை எல்லாம் பார்க்கக்கூடியதாக இருக்கும்.{எடிட் பண்ண சோம்பல் வேறு}
யாரங்கே கடுப்பாகுவது?????????

இதோ
1. எல்லா அம்மாக்களுக்கும் சுத்தம் விரும்பிகளாகவே இருப்பார்கள்.நீங்கள் தினமும் ஒத்துழைக்கவில்லை என்றால்கூட இந்த நாளில் வீட்டை அழகு படுத்திக்கொடுங்கள்.
எங்களுடைய ரூம் ஐ அழகு படுத்திக்கொடுங்கள்
கிச்சன் ல் உள்ள கபேர்ட்களுக்கு அழகான பொருட்களை வாங்கி நீங்களே அடுக்கி சுலபமாக்கி கொடுங்கள்.
முக்கியமாக அம்மாக்கள் பழசையும் விடமாட்டார்கள் அதை மெல்ல டொனேட் பண்ணிவிடுங்கள்.
{உதாரணம் படம் 1,படம் 2 }

2.எங்களுக்கு புத்தி சொல்வதை குறைத்து உங்கள் நன்மை கருதி நாங்கள் சொல்லும் புத்திமதிகளை அம்மாநாளை முன்னிட்டு ஏற்றுக்கொள்ளத்தொடங்குங்கள்.

3.கொஞ்சிக்கொஞ்சி கவிதை எழுத வேண்டாம் .எங்களை குளிக்க வைத்து தலைசீவி விடவும் வேண்டாம்.உங்கள் வேலைகளை நீங்களே பார்க்கப்பழகுங்கள்.

4.எந்த நேரமும் ஸ்க்ரீனை பாத்துக்கொண்டு எதையாவது கொரிக்க வேண்டாம் எங்களோடும் நேரம் செலவிடுங்கள்.{அம்மாக்களும்தான்}

5.அலங்காரப்பொருட்களை அன்பளிப்பாய் கொடுத்து அழகு பார்த்தது போதும் நம்மை அலங்கரிக்க நேரமும் ஊக்கமும் கொடுங்கள்.

6.செய்யுறது எல்லாத்தையும் செஞ்சுட்டு ஐ லவ் யூ என்று கட்டிப்பிடிக்க வேண்டாம்.உங்கள் நேசத்தை தினம் தினம் உங்கள் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துங்கள்.

7...அம்மாக்கான நாள் என்று கூகிள் ல் படம் தேடி பேஸ்புக் ல் கவிதை எழுதுவதை விடுத்து அந்த நாள் முழுவதும் நாம் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்து கொடுங்கள்.
(சும்மா இருப்பது எவளவு கஷடம் என்று நீண்ட நாட்களின் பின் அம்மாவுக்கும் புரியட்டும்}

8.திருமணமான பிள்ளைகள் அம்மா வூட்டுக்கு போனால் உக்காந்த இடத்தில் விரும்பியது வரும் என பீற்றுவதை விடுத்து பிள்ளைகள் வந்தால் என்னை உக்கார வச்சு விரும்பியது செய்து தருவார்கள் என்றுகூட 
அம்மாவை சொல்ல வைத்து மகிழ்ச்சிப்படுத்தலாம்.
காரணம் அம்மாவின் உழைப்பின் காலம் அதிகம்,வாழ்வின் காலமும் உங்களின் இரு மடங்கு அருகிக்கொண்டிருக்கும்,வயசின் இடையூறுகள் கண்டிப்பாக இருக்கும், 
தன் செல்வங்கள் முன் அதையெல்லாம் காட்டி கொடுக்க மாட்டார்கள்.உங்களைப்பார்த்த சந்தோசத்தில்
கிடைக்கும் தற்காலிக அதீத எனேர்ஜியில் செயல்படுவார்கள்.அவர்கள் ஓய்வில் அக்கறை செலுத்துங்கள்

9.பிள்ளைகள்தான் அம்மாக்கள் ற்கு செல்லமாக இருக்க வேண்டும் என்பதல்ல அம்மாக்களையும் நீங்கள் செல்லமாகவே வழிநடத்தலாம்.

10.கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுக்கு தலைவாரிப்பூச்சூடி விடும் அம்மாக்கள் அல்ல நாங்கள் .எங்கள் சிரமத்தை குறைக்க தலைமுடியை வெட்டி விட்டு சிலிப்பியபடியே பள்ளிக்கு அனுப்பும் அம்மாக்கள் நாங்கள்.
நீங்கள் நெட் இல் என்ன பார்த்தீர்கள் என்ற கிஸ்ட்ரி பார்ப்பது மட்டுமல்ல நீங்கள் பாத்துவிட்டு டிலீட் பண்ணியதைகூட துப்பறியும் அம்மாக்கள் நாங்கள்.ஆகவே நமக்குரிய மதிப்பை நீங்கள் தந்துதான் ஆகவேண்டும்.

11.11.உங்கள் கழுதை வயசுக்கு அப்பறமும் அம்மாவை வச்சு உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆக்கித்துன்னுறதை விடுத்து, அம்மாவுக்கும் சமூக வலைத்தளம் என்ற பொழுதுபோக்குகளை அறிமுகப்படுத்தி உங்களுடன் சேர்ந்து பயணிக்க வையுங்கள்.

சோ அன்பளிப்பிற்கும் அதிகமாக எங்களுக்கு மதிப்பளிக்க பழகிக்கொள்ளுங்கள்.

முக்கியமாக அம்மாக்கள் பிள்ளைகளை சிடுசிடுக்காமல் குறைபிடிக்காமல் ஆதரித்துக்கொள்ளுங்கள்
கிவ்ட் ஐ முன்னாடியே தயார் பண்ணி வைத்துவிடுங்கள்.
அனைத்து அன்னையர்களும் சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.
இன்னும் சில படங்கள் பின்னர் இணைக்கிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்.


























6 comments:

  1. அன்னையர் தினத்துக்கு மிக அருமையான பதிவு சுரே ..இனிய வாழ்த்துக்கள் .
    ஆமாம் அட்வான்சா அலெர்ட் செஞ்சு வைக்கலைன்னா விலையுள்ள நாம் பயன்படுத்தாத பொருட்கள் வந்திடும் :)
    டீன்ஸுக்கும் நல்ல அட்வைஸ்தான் தந்திருக்கிங்க .எங்களுக்கு மார்ச் மாதம் முடிஞ்சி ..
    இப்போ தந்தையர் தினத்துக்கு ரெடியாகிறா பொண்ணு

    ReplyDelete
    Replies
    1. ஆமா அஞ்சு என் அக்கா பசங்கள் அக்காக்கு மார்ச் மாசம் அநியாயத்துக்கு வாங்கின கிஃப்ட் ஐயும் விலையையும் பாத்து இப்பிடி தோணிச்சு எனக்கு.

      Delete
  2. மூன்று மறக்க முடியா பரிசுகள் எங்களுக்கு அவ தந்திருக்கா ..என் பிளாக்கில் போடறேன் அதில் ஒன்று ஸ்க்ராப் புக் படங்கள் சேர்த்து அவளே எழுதியது :)
    போட்டு இங்கே கமெண்டில் சொல்றேன் வந்து பாருங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமா போடுங்கோ .அஞ்சு தானே அழகா செய்றதை முன்னாடியும் பாத்திருக்கேன்.கண்டிப்பா இதையும் காமியுங்கோ.எனக்கும் கடையில வாங்குற கிவ்ட் ஐ விட எங்களை நினைச்சுக்கொண்டு நேரம் செலவிட்டு ஸ்பெஷலா இப்பிடி ஏதாச்சும் செய்து தந்தால் கொள்ளைப்பிரியம்.வீட்ல வெட்டிங் போட்டோ மாட்டல ஆனால் வெட்டிங் க்கு 4 வயசில அக்காவின் சின்னவர் நம்மளை வரைஞ்சு தந்தது அழகா மாட்டி வச்சிருக்கோம்.

      Delete
  3. சுரேகா நலமோ? பார்த்து ரொம்ப நாளாச்சு... எங்கட றீச்சரையும் நான் சுகம் விசாரித்ததாக சொல்லி விடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. நலம் நலம்.அவோ பேஸ்புக் வாறவா .சில நால் முன்னவும் உங்களைபற்றி பேஸ்புக்ல கதைச்சனாங்கள்.ரெண்டு பேரும் ப்ளாக் ல கும்மி அடிக்கிறீங்கள் எண்டு.

      Delete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...