Thursday, 11 May 2017

தற்கொலைத்தக்காளி upside down topsy turvy


தலைகீழாக தக்காளி வைப்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.




காலநிலையும் பராமரிப்பும் சரியாக இருக்கும்பட்சத்தில் சாதாரணமாக நிலத்தில் நடுவதை விட பன்மடங்கு காய்கள் கொடுக்கும் என்று ஆராய்ந்து இந்த முறையை பயன்படுத்துகிறார்கள்.
நமது இடவசதிக்கேற்ப நாங்களும் இதன் மூலம் பலன்பெறலாம்.குறிப்பாக இட வசதி குறைந்தவர்களுக்கு உகந்தது.
கடைகளில் இந்த upside down topsy turvy ஐ வாங்கியும் உபயோகிக்கலாம் .



சுலபமாக நாங்களே இந்த ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டி இருக்கும் பாக் ஐ கொண்டோ பழைய பக்கெட் ஐ கொண்டோ வாளிகளை கொண்டோ,சாதாரண பூச்சாடிகளைக்கொண்டோ
இதை செய்து கொள்ளலாம்.
மிகவும் சுலபமாக செய்யலாம் .


சிலர் தண்ணி போத்தலில் செய்வதையும் பாத்திருக்கிறேன்.
1.நீங்கள் பாவிக்கப்போகும் உபகரணத்தின் அடிப்பாகத்தில் மிகச்சிறிய துளை ஒன்றை இட்டுக்கொள்ளுங்கள் 
2.ஒரு காட்டன் ,அல்லது வெல்வெட் பழைய துணி அல்லது நீரை வெளிவிடக்கூடிய ஃபோம் எடுத்து ஒரு வட்டமாக வெட்டி அதிலும் சிறிய துளை விடுங்கள்.
{நான் படத்தில் காட்டியதுபோல் நெட் இருந்தாலும் துணியை சின்னதாக வைத்து நெட் ஐயும் சேர்த்து வைக்கலாம் .பட் கட்டாயமில்லை}
3.இப்போது துணியை வாளிக்குள் வைத்து தக்காளியின் வேர் நம்மைப்பார்க்கக்கூடியதாகவும் தளிர் பூமியை பார்க்ககூடியதாகவும் உள் நுளைத்துவிடுங்கள்.
மிக முக்கியமான விடயம் செடி 3 வாரத்திற்கு உட்பட்ட அதாவது அதிகம் வேர்விடாததாக இருக்க வேண்டும்
4.ஓரளவு மண் நிரப்பியதும் உயரத்தில் ஏற்ற இடத்தில் மாட்டி விடுங்கள் 
மீதி மண்ணை மாட்டிய பின் நிரப்பலாம்.


அவ்வளவுதான்
எனக்கு போன வருடம் அவ்வளவாக காய்க்கவில்லை.காலநிலை சரியில்லை யூன் மாதம் ஸ்னோ கொட்டி மண்ணை மறைத்துக்கொண்டு ஸ்னோ படிந்திருந்தது.ஆனாலும் 2 அழகான குட்டிப் பழங்கள் தரவே செய்தது.
2015 நிறைய காய் தண்ணீர் கூட ஊற்றவில்லை டைப்பர் ல் தண்ணீர் நனைத்து மண்ணுக்குள் மூடி விட்டு டூர் போய்விட்டோம் .ஆனாலும் நிறைய காய்கள்.
கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் காய்கள் தராவிட்டால்கூட பார்க்கும் நேரமெல்லாம். பிஸியும் மன இறுக்கங்களும் களைந்து மனதை மகிழ்விக்கும் 
இதானால் ஏதும் நட்டம் ஏற்படப்போவதில்லை.











No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...