Thursday, 11 May 2017

வெஜிடபிள் ஆப்பு



இன்று எனக்கு வெளிவேலைகள் அதிகம் இருந்தது .ஒரு சீஸன் தொட்டதுக்கெல்லாம் வெளிச்சாப்பாடுதான்.காலையில் சிலநேரம் நல்ல கோப்பி வாசனை வரும் .கனவு காண்கிறேனோ என்று நினைச்சு எழும்பினால் .
கோப்பியும் ப்ரேக்ஃபாஸ்ட் ம் ஹஸ் வாங்கி வந்து எழுப்பிய அதிகாலைகள் அதிகம்.
இரண்டு பேரும் சேர்ந்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே ப்ரேஃக்பாஸ்ட் எடுத்துவிட்டு பிரிந்து வேலைக்கு சென்று மதியம் ரெஸ்ராரண்ட் இல் சாப்பிட்டு இரவு சாப்பாடு டேக் அவுட் எடுத்துக்கொண்டு 
வீட்டுக்கு வந்த நாட்களும் அதிகம்.
சமையல் மணமே இல்லாமல் விதவிதமான காண்டில்ஸ் வாசனைகளை மட்டுமே வீட்டில் முகர்ந்த நாட்களும் அதிகம்.
ஆனால் இப்போதெல்லாம் வெளியே டீ தவிர எதையும் சுவைப்பதில்லை.ஒரு டோனட் வாங்குவதென்றால் கூட அருவருப்பாக இருக்கிறது.
மகள் ஒரு செண்ரிம் க்கு பெறுமதி இல்லாத சைனா விளாட்டுப்பொருளுக்காக வாங்குற மக்டோனல்ட் ஹப்பிமீல்ஸ் ஐ வழக்கம்போல என்னிடம் தரும்போது ரெம்ப கடுப்பாகுறேன்.அவளவு அருவருப்பு .
இன்று என் ஹஸ் ;அம்மா சாப்பாடு நீங்க எடுக்குறீங்களா நான் வரும்போது எடுத்து வரவா??? 
என்ன வேணும்????
மீ; நோப் நான் சட்டெண்டு சமைக்கப்போறேன் .
ஹஸ் ; என்னது 5 நிமிஷத்தில எனக்கு ஆப்பு வைக்கிறதுக்குத்தானே ப்ளான் பண்றாய்??? 
மீ; யெஸ்ஸ்ஸ் பாஸ் அதே தான்.....
இதோ இதுதான் இன்று நான் ஹஸ் க்கு வைச்ச வெஜிடபிள் ஆப்பு .இதை சூப் என்றும் சொல்லலாம்.


வெஜிடபிள் சூப்
தேவையானவை
கீரை கால் கிலோ
ப்ரோக்லி கால் கிலோ
தக்காளி கால் கிலோ
வெங்காயம் 1 
பச்சை மிளகாய் 2
நச்சீரகம் 1 டீஸ்பூன்
பூடு 2 பல்லு
மயோனஸ் கால் கப் அல்லது க்ரீம் 
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

1.காய்கறிகள் ,வெங்காயம் ,பச்சை மிளகாய்,பூடு என்பவற்றை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
2..சட்டியை அடுப்பில் வைத்து சூடாகியதும் பட்டரை போட்டு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் ,சீரகம்,பூடு என்பவ்ற்றை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3..அதனுடன் காய்கறிகள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
4. வெந்ததும் மயோனஸ் ஐ சேர்த்து எலக்ரிக் ப்ளெண்டரால் அடிக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும் .செம டேஸ்ட் .
அத்தோட இந்த ஒவன் ல வச்சு பொரிச்சு எடுத்த இறால் ம் சேர்த்து சாப்பிட்டால் ம்ம்ம் ஜமி ஜமி.



No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...