Thursday, 11 May 2017

தமிழ் டைப்பிங்


நம்முடைய லாப்டப் ,பி.சி என்பவற்றில் இருந்து தமிழ் டைப் பண்ண,கமண்ட் பண்ண பல வழிகள் இருந்தாலும் மிகச்சுலபமான வழி NHM Writer ஐ டவுன்லோட் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்.


1.google இல் NHM Writer என்று டைப் பண்ணுங்கள் அல்லது முடிவில் இங்கே நான் இணைத்துள்ள லிங் ஐ க்ளிக் பண்ணுங்கள்
2.NHM Writer 2.9 என்ற லோகோ விற்கு பக்கத்திலிருக்கும் டவுன்லோட் ஐ க்ளிக் பண்ணுங்கள்
3. i accept the agreement ஐ ஏற்றுக்கொள்வதாக க்ளிக் பண்ணி ரன் பட்டன் ஐ அழுத்துங்கள்
இவ்வளவும் பொதுவான உங்களுக்கு தெரிந்த விடயம்
மேலும்




4.படத்தில் காட்டியவாறு மொழி கொடுக்க வேண்டிய பாக்ஸ் இல் தமிழ் ஐ தெரிவு செய்யுங்கள்




5.ப்ரோகிராமில் சேமித்துக்கொள்வதாக நெக்ஸ்ட் ஐஅழுத்துங்கள்


6.creat a desktop icon
create a quick launch icon
எனும் இரண்டையும் டிக் பண்ணுங்கள்

7.இப்போது படத்தில் காட்டியவாறு உங்களுக்கு ஒரு பெல் icon இருக்கும்


8.பெல் அடையாளத்தை க்ளிக் பண்ணி alt+2 என்பதை தெரிவு செய்தால் அல்லது வெறுமனே கீ போர்ட் ல் alt+2அழுத்தினால் உங்களுக்கு தமிழ் வேலை செய்யும்.
9.ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டுமாயின் மறுபடியும் அதே alt+2 ஐ அழுத்தினால் ஆங்கில எழுத்திற்கு மாறும்.

10.மிக சுலபம் . amma என ஆங்கிலத்தில் எழுதினால் அம்மா என் நேரடியாகவே தமிழ்படுத்தும்.
என் லாப்டப் இல் பாதியில் ஸ்கிரீன் ஷாட் வேலை செய்ய மறுத்து விட்டது போட்டோ க்ளிக் பண்ணி போட்டு இருக்கிறேன்.க்ளிக் பண்ணுவதற்காக uninstall பண்ணி மறுபடி டவுன்லோட் பண்ணியிருக்கேன் .
சோ தேவைப்பட்டவர்கள் பயன்பெறவும்
உங்கள் எண்ணங்களை தமிழில் வெளிப்படுத்த எழுத்துப்பிழையை நினைத்து பின்வாங்க வேண்டாம். சொல்ல வரும் விடயம் தெளிவாக இருந்தால் போதும் எழுத்துப்பிழைகள் ஒரு பொருட்டல்ல. எவ்வளவு பிழையுடன் எழுதினாலும்
சரியாக வாசிப்பதற்கு எல்லோருக்குமே தெரியும்.
வாழ்க்கை அழகானது யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களும் அல்ல சளைத்தவர்களும் அல்ல.உங்கள் எண்ணங்களையும் ஆர்வங்களையும் நேசங்களையும் தாய்மொழியைப்போல் வேறு எதிலும் வெளிப்படுத்த முடியாது.
நாங்கள் ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
என்னிடம் சில நேரங்களில் தமிழ் தெளிவு படுத்திக்கொள்ளும் இரண்டு பேரை மனதில் வைத்து எழுதினேன் வேறொன்றுமில்லை.ஆனால் அவர்களுக்கு 4 சர்வதேச மொழிகள் தெரியும் என்பது மேலதிக தகவல்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...