Thursday, 11 May 2017

படமும் கதையும் 1


மார்ச் ஏப்ரல் மே வசந்த காலம் Spring
ஜூன் ஜீலை,ஆகஸ்ட் கோடை காலம் Summer
செப்டெம்பர் ஒக்டோபர் நவம்பர் இலையுதிர்காலம்Fall
டிசம்பர் ஜனவரி பெப்ருவரி குளிர்காலம்Winter
காலநிலை பிரிவு நாடுகளை பொறுத்து வேறுபடலாம் ஆனால் எல்லாக்காலநிலைகளும் எல்லோராலும் நேசிக்கப்பட்டாலும்,
எந்த இடையூறும் கொடுக்காமல் எல்லோரையும் நேசிக்கும் ஒரு காலநிலைதான் இந்த வசந்தகாலம், காரணம் மற்றைய எல்லாக்காலங்களிலும் உள்ளதை மிதமிஞ்சாமல் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
மரங்களில் தளிர்கள் சிறு மொட்டுக்கள் போல் அழகாக இருக்கும் .அதாவது மரம் நிறைய மொட்டுக்கள் போல் இருக்கும்.அதுவும் பனியில் நனைந்தோ மழையில் குளித்துவிட்டோ நிற்கும் மரங்களை binocular கொண்டு பாத்தால்
நம் மனசிலும் அழகு துளிர்க்கும்.
நான் மரங்களின் தளிர்களைத்தான் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது கமராவை 35* ற்கு மேலே ஸூம் பண்ணும்போதுதான் இந்த குட்டி குருவியார் கூடு கட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
துணை தேவையான பொருட்கள் கொண்டுவர போயிருக்கும் போல அடிக்கடி கூப்பிட்டு கொப்பில் தாவி தாவி தேடிக்கொண்டு இருந்தது.
நமது சுட்டு விரலளவு சிறிய பறவை .நெட் இல் search by image இல் படத்தை கொடுத்து தேடினேன் great tit இதன் பெயர் என்றும் வெறும் 16 கிராம் மட்டுமே எடைகள் கொண்டது என்றும் தெரிகிறது.
நானும் ஸீப்ரா பிஞ்ச் கனரி எல்லாம் வளர்த்தேன் முன்பு. அவை போல அழகான பாடகர்களை எங்கும் கண்டதில்லை.இந்த பேர்ட் குரல் கூட அழகாக இருந்தது.
ஓட்டை ஓட்டையாக குடைந்து இந்த மலைகளில் வசிப்பவர்களும் இதுபோன்ற குட்டிப்பறவைகள் குடும்பங்களே.
போட்டோக்கு முகத்தை காட்டாமல் வாலை மட்டும் காட்டிக்கொண்டு இருந்தது அதுவும் தெளிவில்லை.பார்ப்போம் அடுத்த தடவை மாட்டுவார் .மாட்டுவார்
சோ நீங்கள் எவ்வளவு பரபரப்பாகவும் , மன அழுத்தமாகவும் இருக்கலாம் முடிந்தவரை இவற்றை பிள்ளைகளுக்கு (இயற்கையை ரசிக்க )கற்றுக்கொடுக்க தவறிவிடாதீர்கள்.இவை அவர்கள் பழக்கவழக்கங்களில் அதிக மாற்றங்கள் கொண்டுவரும்.
சாந்தமான பிள்ளைகளாக வளர்வார்கள்.குடும்பத்தை அதிகமாக நேசிப்பார்கள் .தேவையற்ற பொழுதுபோக்குகளை நாட மாட்டார்கள்,தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள் ,மனம் அமைதி கொள்வதால் ஞாபக சக்தி பெருகும் 
நன்றாக படிப்பார்கள் 
என்றெல்லாம் நான் சொல்லவில்லை ஆராய்ச்சிகள் சொல்கிறது.அம்புட்டுத்தேன்.

























No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...