Thursday 11 May 2017

salmon with steamed veggies


தேவையானவை
சால்மன் பிஷ் 300 கிராம்
ப்ரோக்லி 150 கிராம்
asparagus 150 கிராம்
பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு (ஹிமாலயா பிங் சால்ட்}
மிளகு 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் ஒரு டீஸ்பூன்
லெமன் பாதி
மயோனஸ் 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை
1.சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து சால்மன் ஐ வேக வைத்து எடுங்கள் .{சால்மன் வெந்த தண்ணீரையும் ஒரு பக்கம் வைத்திருங்கள் }
2.ப்ராக்லி ,asparagus என்பவற்றை சிறிது தண்ணீர் வைத்து ஆவியில் வேக வைத்து வையுங்கள் ( இந்த தண்ணீர் மீதி இருந்தாலும் வைத்துக்கொள்ளுங்கள்}
3.பாத்திரத்தை சூடு பண்ணி அதில் பட்டரைபோட்டு உருகியதும் அதனுள் மிளகு,உப்பு,மஞ்சல் என்பவற்றை சேர்த்து அதனுள் சால்மன் மற்றும் காய்கறிகளை சேர்த்து கலவை எல்லா இடமும் பரவுமாறு திருப்பி
விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்
4. அதே பாத்திரத்தில் மீன் மற்றும் காய் கறி வெந்த மீதி தண்ணீரை சேர்த்து {நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது மொத்தம் 1/2 கப் அளவே போதும்} மயோனஸ் ஐ அதனுள் சேர்த்து கரைத்து சாஸ் ஆக எடுத்துக்கொள்ளவும் .
லெமன் சேர்த்து சாப்பிடவும் .


ஈஸி ஈஸி ஈஸி குழந்தைகளுக்கும் பிடிக்கும் .
ஹிமாலயா பிங் சால்ட் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்






No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...