Thursday, 11 May 2017

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????

மழலைகளை போட்டோ எடுப்பது எப்படி????
நாமெல்லாம் இப்போது ஒரு நாளுக்கு 50 போட்டோஸ் எடுத்தாலும் நம் மனசு பொக்கிஷமாக நினைப்பது என்னவோ நம் சிறுபிராயத்து போட்டோக்களைத்தான்.
ஒரு குறிப்பிட்ட வயதுவரை நமக்கு அதன் அருமை தெரியாது .அதன் பின் அதில் ஏற்படும் ஈர்ப்பு எப்போதும் தீராது.
அதிலும் நாம் மழலையாக இருக்கும்போது எடுத்த போட்டோவாக இருப்பின் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வோம்.
இதே போல் நம் குழந்தைகளுக்கு நல்ல நினைவுகளை கொடுக்க நாம் இப்போதே சிந்தித்து அவர்களின் மழலைத்தனங்களை மழலை முகங்களை நிதானமாக அழகாக படம் பிடிக்க வேண்டும்.


இதற்கான என்னால் முடிந்த சில டிப்ஸ்
1.குழந்தைகளை படம் பிடிக்கும்போது Dslr camera தான் மிகப்பொருத்தமானது என்பதை நினைவில கொள்ளுங்கள். 
அவர்களை நெருங்காமல் இடையூறு கொடுக்காமல் எடுத்துக்கொள்ளலாம்.தெளிவாக இருப்பதோடு மாற்றங்கள் செய்யவும் அளவை பெரிதாக்கவும் என நிறைய விஷயங்கள் இந்த dslr camera மூலமே சாத்தியம்.
2.அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்களோ அந்த நேரத்தை ஸூட்டிங்க் ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள்
தூங்கு முன்,தூக்கத்தில் இருந்து விழித்த ஒரு மணிநேரத்திற்குள் ,பயணங்களின் பின், பசி எடுக்கும் நேரம்,நன்றாக சாப்பிட்டு 1 மணிநேரத்திற்குள் எல்லாம் போட்டோ எடுப்பது குழந்தைகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
3.குழந்தைகள் கமராவை பார்க்க வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்க்க கூடாது.அவர்கள் போக்கில் விட்டு நீங்கள்தான் விரைவாக அவர்கள் திரும்பும் பக்கத்திற்கு ஓட வேண்டும்.
4.குறிப்பிட்ட நேரத்திற்குள் சுறுசுறுப்பாக எடுத்து முடிக்க வேண்டும்.


5.குழந்தைகளை அடிக்கடி கையால் தொட்டு தொட்டு ஆடைகளையும் அணிகலன்களையும் தலைமுடியையும் நேர்த்தி செய்யக்கூடாது .முதலே சிந்தித்து ஒரே தடவையில் அலங்காரம் செய்து விட வேண்டும்
6.கையால் அமுக்கி வைத்து எடுப்பதும் எப்போதும் நல்ல போட்டோ கொடுக்காது. அவர்களுக்காக ஒரு இருக்கையோ கம்பளமோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.
7. நாங்கள்தான் அவர்களுக்கு ஏற்றால்போல் குனிந்து வளைந்து எடுக்க வேண்டும் அவர்களை கன்ரோல் பண்ணக்கூடாது.
8. சிரமம் கொடுக்கும் ட்ரெஸ் ,அளவில்லாத ட்ரெஸ் அதிக ஜுவல்ஸ் எல்லாம் அணிந்து போட்டோ எடுக்க முயற்சிக்க கூடாது.கேர் ஸ்டைல் அவர்களுக்கு சற்றும் இடையூறு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
எல்லா ஆயத்தங்களும் முன்னரே சிரத்தையாக செய்து சில நிமிடங்களில் ஆயத்தம் செய்துவிட வேண்டும்.
9.சில குழந்தைகள் இயற்கையிலேயே போட்டோ க்கு மறுப்புக்காட்டுவார்கள் .வித விதமான ஆடைகள் அணிய ஒத்துழைக்க மாட்டார்கள்.இவர்களை போட்டோ எடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிப்போய் எடுக்கலாம்.
அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை கொடுத்து கமெராவை தூர வைத்து எடுக்கலாம்.
ஆரம்பத்தில் நிறைய குழந்தைகளுடன் சேர்த்து எடுக்கலாம். போட்டோக்கு நன்றாக ஒத்துழைக்கும் குழந்தையை இவர்கள் முன் வைத்து விதம் விதமாக போட்டோ எடுக்கலாம் பின்னர் தானாக பிடித்துபோய் 
அவர்களாகவே காஸ்டியூம் அணிந்து போட்டோ க்கு போஸ் குடுக்க ஆசைப்படுவார்கள். [இந்த டிப்ஸ் 1 வயதிற்கு மேல்}
10 ஹலோவீன் ,கிட்ஸ் பேத்டே பார்ட்டி போன்றவற்றில் அடிக்கடி பங்கெடுக்கும் குழந்தைகள் ஃபோட்டோக்கு மறுப்பது குறைவு என்கிறது ஆய்வு.{1+}
11.குறுகிய.அதிக பொருட்கள் நிரம்பிய இடத்தை தெரிவு செய்யக்கூடாது.


12.வெளிச்சம் தேவையான அளவு இருக்க வேண்டும். கம்ராவுடன் சேர்ந்த ஃப்ளாஷ் இல்லாமல் தனிப்பட்ட லைட் ஆக இருந்தால் லைட் ஐ சட்டென்று இடம் மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
13.குழந்தை ஒத்துழைக்க மறுத்தால் அத்தோடு நிறுத்தி இன்னொருநாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
14.ஒரே தடவையில் பல ஷொட் எடுப்பதுபோல் செட்டிங் ல் கொடுக்க வேண்டும்.
15 பெண் குழந்தைகளை மட்டும்தான் அழகழகாக ஃபோட்டோ பிடிக்கலாம் என்று நினைக்க கூடாது .ஆண் குழந்தைகளும் வளர்ந்தபின் மழலை ஃபோட்டோக்களைத்தான் நேசிப்பார்கள்.
அவர்களுக்கும் நிறைய காஸ்டியூம் இருக்கிறது.அழகான ஐடியாக்களை கோர்த்தால் குழந்தைகளுக்கு அழகாக சிரித்தபடியே போஸ் குடுப்பார்கள்.
மகிழ்ச்சித்தருணங்களை அலட்சியம் செய்யாதீர்கள் .நாளை நினைத்துப்பார்க்க மட்டுமல்ல உறவுகளின் நெருக்கம் விலகாமல் இருக்கவும் இதுவே உதவும்.
என் பிள்ளைகளுக்கு நான் ஒருத்தி உருண்டு பிரண்டு வேர்த்து விறுவிறுத்து ஃபோட்டோ எடுக்கிறேன் என்பதே தெரிவதில்லை.தேவையான எல்லாவற்றையும் ஒரு open box இல் எடுத்து வைத்திருந்து நல்ல மூட் பார்த்து விளையாடி விளையாடி
வழக்கமாக ட்ரெஸ் பண்ணுவதற்கும் ஸ்பெஷலா ட்ரெஸ் பண்ணுவதற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதது மாதிரியே சட்டென்று ட்ரெஸ் பண்ணி விடுவேன். எல்லாத்தையும் குறைய நேரத்தில மாட்ற மாதிரி வெட்டி தைச்சு வச்ச்சிருப்பேன்.
ஆயத்தம் பண்ணி அவர்கள் பாட்டுக்கு விட்டு, நான் சிக்கி சின்னாபின்னமாகி கமராவுடன் தவழ்ந்துகூட எடுப்பேன்.
ஆரம்பத்தில் மூத்த மகள் அழுவாள் அவள் பாட்டுக்கு வாண்டாம் போ என்றே விட்டு விடுவேன் .ஒருதடவை மிரட்டியும் பார்த்தேன்.இப்போ நினைத்தாலும் பாவமா இருக்கும்.
ஒருநாள் ஹலோவீன் பார்ட்டிக்கு போகும்போதும் காஸ்டியூம் போட மாட்டேன் என சாதரண ட்ரெஸ் ல் வந்தாள் .ஒரு வெள்ளைக்கார அம்மம்மா சொன்னார் 
வளந்தா பிறகு அட நான் மட்டும் கலோவீன் ட்ரெஸ் ஐ மிஸ் பண்ணீட்டனே அப்டி கவலை வரப்போகுது.பிரின்ஸஸ் ட்ரெஸ் உனக்கு எவளோ அழகா இருக்கும் ??? என்றார்.
அவளுக்கு பிடிக்கவில்லையாம் என்றேன்.
அவர் சொன்ன டிப்ஸ்தான் மேலே உள்ள சில.
இப்போ அக்காவும் தங்கையும் விரும்பி போஸ் குடுக்கிறார்கள்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...