Wednesday, 30 May 2012

குழந்தை பிறப்பதற்கான நாளை கணக்கெடுத்தல்



கடைசியாக மாதவிலக்கான நாளுடன் 7 நாட்களை கூட்ட வேண்டும்.
அதிலிருந்து 3 மாதங்களை கழித்து வருவதே டாக்டர்களால் கணிக்கப்படும் நாள்.
இது 280 நாட்களை உள்ளடக்கும்.
இதுவே குழந்தை பிறக்கும் நாளை கணக்கிடும் மிக சுலபமான வழி.

இதற்கான உதாரணம்

கடைசி மாதவிலக்கு தேதி செப்டம்பர் 18 என்று வத்துக்கொள்ளுங்கள்
தேதி +7 அதாவது 18+7=25
செப்டம்பரில்   இருந்து 3 மாதங்களை கழியுங்கள் அதாவது செப்டம்பர் ,ஆகஸ்ட்,யூலை மாதங்களை கழித்தால் வருவது யூன்.
உங்கள் பிரசவ தேதி அடுத்த வருடம் யூன் 25

ஆகவே தேதி+7
மாதம் - 3
= பிரசவதேதி

கர்ப்ப அறிகுறிகள்




விந்து கருமுட்டைக்குள் ஊடுருவி இரண்டும் இணைந்து 5 நாட்களாக மெது மெதுவாக நகர்ந்து சென்று கர்ப்பப்பையை அடைகிறது அங்கு ஒரு விதை வேர் விடுவதற்கு சில நாட்களை எடுத்துக்கொள்வதுபோல் ஒரு வாரக்கணக்களவில் மிதவை நிலையில் தன்னை தயார் செய்து
அதன் பின் சரியான இடத்தில் சரியான முறையில் பதியமாகி வளரத்தொடங்குகிறது .

இந்த உள்மாற்றங்களால் வெளியே என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றதோ அவையே கர்ப்பத்துக்கான அறிகுறிகளாகும்.

முதலில் மாதவிடாய் தடைப்படும்
உணர்வுகளில் மாற்றம் [குமட்டல்.வெறுப்பு.குறிப்பிட்ட உணவுகளில் ஆசை,வாசனைகளில் வித்தியாசம் உணர்தல்]
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
வெள்ளைபடுதல்
மார்பக உறுத்தல் ,வலி,அளவில் மாற்றம்,பாரமாகுதல்
மலச்சிக்கல் இருப்பதுபோல் உணர்வு
சோம்பல்
அடிவயிற்றில் லேசான வலி

இந்த அறிகுறிகள் கர்ப்பத்துக்கு மட்டுமே உரியன கிடையாது.எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதற்கில்லை.
அதனால் இந்த உணர்வுகள் ஏதாவ்து வெளிப்படும்போது கர்ப்பத்துக்கான பரிசோதனையை எடுத்துக்கொள்வது அவசியம்.

இங்கு கர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்குக்கும் பெண்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருப்பது போன்றே ஒரு பிரமை ஏற்படுவதுண்டு.வீட்டில் பரிசோதனை எடுத்து நெகட்டிவ்
என்றால் கூட அவர்கள் மனம் அதை நம்ப மறுக்கும்.அடுத்து இன்னுமொரு பரிசோதனை செய்யவோ மருத்துவ பரிசோதனை செய்தால் கூட கர்ப்பமாக இருப்பதுபோலவே உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால் கர்ப்ப பரிசோதனைகள் தவறாக அமைவதற்கான சாத்தியக்கூறுகள் நூற்றுக்கு 0.01 வீதமே.இது அசாதாரண உடல் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு.

Friday, 11 May 2012

Diagnostic Pelvic Laparoscopy Exam

எண்டோமெட்ரியோசிஸ் Endometriosis கருப்பை சுவர் திசு வளர்ச்சி




ஒவ்வொரு மாதமும் ஹார்மோன்களின் செயல்பாடுகளினால் கருமுட்டை வளர்ச்சியடைவது போல்
கருப்பை சுவரிலும் திசுவும் வளர்ச்சி அடைகிறது .மாதவிடாயின் போது கருமுட்டை உதிர்ந்து மாதவிடாயுடன் வெளிப்படுவதுபோல்
இந்த திசுக்களும் உதிர்ந்து மாதவிடாயுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளியேறிவிடும்.இந்த செயல்முறை பெண்களின் உடலுக்கு ஆரோக்கியமான  ஒன்று.

ஆனால் இதற்கு மாறாக கருப்பை உள் வரிச்சவ்வு வளர்ச்சி அடைந்து உதிராமல் போவதும் மேலும் வளர்ச்சி அடைந்துகொண்டு போவதும்
மாதவிடாயிலும் கருத்தரித்தலிலும் குறைபாட்டை உண்டு பண்ணும்.


மாதவிலக்கிலும் ,உறவு கொள்ளும்போதும்  வலியை ஏற்படுத்தும்

.உறவின் போதோ அல்லது சிகிச்சையின்போதோ கருப்பையில் பதியமாகும் கருவை நிராகரித்துவிடும்.

இதனால்தால்தான் கருமுட்டை வளர்ச்சியை போலிக்குள் மொனிட்டரிங்க் மூலம் கணிக்கும் போது கருப்பை சுவரின் தடிப்பையும் வளர்ச்சியையும் ஒவ்வொரு தடவையும் அளந்து  குறித்துக்கொள்வார்கள் .

இதன் வளர்ச்சி  வீதம் அதிகரிக்கும்போது முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளியிடுதல் என்பவற்றை கட்டுப்படுத்திவிடும்.

ஐ வி எவ் போன்ற கருவேற்றம் செய்யப்படும் சிகிச்சையை ஒரு பெண் செய்யும் போது இந்த எண்டோமெட்ரியோசிஸ் ஐ வெகு அவதானமாக மருந்து மாத்திரைகள் மூலம் சரியான அளவில் வைத்துக்கொண்டுதான்
கருவேற்றம் செய்வார்கள்.இதையும் மீறி உள்வரிச்சவ்வு வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்போது சிகிச்சை தோல்வி அடைகிறது.கர்ப்பம் கலைகிறது.


பலருக்கு இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடியதாக இருக்கும். அதேபோல் பலருக்கு இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை சரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அழிக்க வருடங்கள் ஆகலாம்.ஓபரேஷன் மூலம் அகற்றினால் கூட அது ஒரு தடவையில் தீர்ந்து போகிற பிரச்சனை கிடையாது.

மாதாமாதம் அதேபோல் வேகமாக வளர்ச்சி அடைந்து பிரச்சனைக்கு உட்படுத்தும்.

ஆகவே இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அவசரமில்லாமல் மருத்துவரின் படிப்படியான சிகிச்சைக்கு ஒத்துழைத்து கருத்தரித்தலுக்கு முயல வேண்டும்.

Thursday, 10 May 2012

கருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்கள்



ஒரு பெண் தாயாகுவதற்கு மூலக்கூறாக விளங்குவது கருமுட்டை.பெண் குழந்தை தாயின் வயிற்றில் 5 மாதமாக இருக்கும் போதே இந்த செயற்பாடுகள் ஆயத்தமாகிறது  என்பது நாம் அறிந்ததே.

பியூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும்  எவ் எஸ் எச் ( FSH)  எல் எச்Luteinizing Hormone (LH) ஹார்மோன்கள் போதுமான அளவு தூண்டப்பட்டு ஈஸ்டோஜன்  சினைப்பைக்கு கிடைக்கும்போதுதான் முட்டை வளர்ச்சி சரியானதாக அமைந்து .

சரியான காலத்தில் முதிர்ச்சி ஏற்படும்.

மாதவிலக்கு ஒழுங்கற்று போதல் ,மிக குறைந்த அளவிலான மாதவிடாய், உடல் பருமன் போன்றவை முட்டை வெளியாகதற்கான அறிகுறிகளாகும்,
இனி இதற்கான காரணங்களை பார்ப்போம்

சினைப்பைக்கட்டிகள்
தொற்றுக்கிருமிகள்
நீர்க்கட்டிகள்
அதிக உடல்பருமன்
ப்ரோலக்டின் அதிகாக இருத்தல்
ஊட்டச்சத்துக்குறை
எடை குறைவு
மன இறுக்கம்
முந்தைய அறுவைச்சிகிச்சைகளின் பாதிப்பு
நச்சுப்பொருட்களின் தாக்கம் உடலுக்கு சென்றிருத்தல்
கருத்தடை மாத்திரைகள்
வலி நிவாரண மாத்திரைகள்
சினைப்பை செயலிழப்பு

என்பன கருமுட்டையின் வளர்ச்சியியை பாதிப்புக்குள்ளாக்குகிறது. நாள்தோறும் 2 தடவை நடைப்பயிற்சி மேற்கொள்வது.போலிக் ஆசிட் அதிகம் உள்ள பச்சைத்தாவரங்களை உணவில் சேர்த்துக்கொள்வது,
விரதங்களை தவிர்ப்பது,மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது.போன்றவற்றால் கருமுட்டை வளர்ச்சியை தூண்டலாம் .காரணம்
pituitary ,Hypothyroidism சினைப்பை ஆகியவை தங்களுக்குள் ஹார்மோனை சமப்படுத்தி ஒரேமாதிரியாக கட்டுப்பாட்டுடன் சுரப்பிகளை சீராக இயங்க வைக்கின்றன.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு கருமுட்டை வளர்ச்சியின்மையின் முதல் படி ஆகையால் ஹார்மோன்களை குழப்பமடைய செய்யும்படியான காரணிகளை தவிர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வதும்
ஹார்மோன்களை சீர்குலைக்காமல் இயங்கவைக்க உதவும்.


இருப்பினும் கருமுட்டை வளர்ச்சியின்மை கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஊக்குவிக்கும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் அறுவைச்சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வது அவசியம்.

வீணே காலத்தை போக்குவது இதற்கு தீர்வாகாது.


Wednesday, 9 May 2012

ivf மருத்துவம் எவ்வாறு செய்யப்படுகிறது



மாதம் ஒரு தடவை பெண்ணின் கருமுட்டை முதிர்ந்து கருக்குழாய் வழியாக பயணம் செய்யும் அதே வேளையில் ஆண் விந்தணுவும் அந்த இடத்துக்கு சென்றால் சதாரணமாகவே கருத்தரிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.இது இயற்கையான நிகழ்வு.

 இதையே செயற்கை முறையில் இரண்டையும் இணைய வைத்து கருவை ஏற்றுவதே ivf . இதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் உரிய பரிசோதனை செய்து ivf க்கு தகுதியானவர்களா என்று உறுதிப்படுத்தப்படும்.இல்லையெனில் தகுதியானவர்களாக மாற்ற லாப்ரஸ்கொப்பி.டி அண்ட் சி, ஊசிகள் மாத்திரைகள் போன்ற சில சிகிச்சைகள் அழித்து
 அடுத்த கட்டமாக பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வர மாத்திரைகள் கொடுக்கப்படும்.சிலருக்கு ஊசியும் மாத்திரையும். மாத்திரைகளின் பின் குறிப்பிட்ட சில நாட்களில் மாதவிடாய் ஆனதும் போலிக்குள் மொனிட்டரிங் அல்ராசவுண்ட் follicle monitoring ultrasound மூலம் கருமுட்டையை அளப்பதும் எண்ணுவதும் கர்ப்பப்பை சுவரின் தடிப்பை அளப்பதுமாக அந்த மாதம் அடிக்கடி கணிப்பு நடத்தப்படும்.

 அதேவேளை பல கருமுட்டைகள் உருவாகவும் சரியான முறையில் வளர்ச்சி அடையவும் மாத்திரை ஊசி என்பன கொடுக்கப்படும்

. அதன் பின் பெண்ணுக்கு கருமுட்டைகள் தேவையான அளவு முதிர்கிறது என்று ஸ்கானில் தெரிந்ததும் சரியான அளவில் முதிர்ந்து வெளியேற hcg ஊசி ஏற்றப்படும்.

 ஊசி ஏற்றப்பட்டு 32 இலிருந்து 36 மணித்தியாலங்களுக்குள் பெண்ணை மயக்கத்துக்குள்ளாக்கி முதிர்ந்த கருமுட்டைகளை அல்ரா சவுண்ட் ல் பார்த்துக்கொண்டு ஊசிக்குழாயை உட்செலுத்தி ஒவ்வொன்றாக சேகரிக்கப்படும்.

 இதேபோல் ஆண் விந்தணுக்களை சேகரித்து ஒப்படைக்க வேண்டும்.

சில குறைபாடுகளை கருத்தில் கொண்டு மருத்துவ முறையில் குழாய்மூலம் உறிஞ்சி எடுப்பதும் உண்டு.பின்னர் விந்து சுத்தப்படுத்தி தரப்படுத்தப்படும்.

 இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருமுட்டையையும் விந்தணுக்களையும் ஒன்றாக கலந்து வைக்கப்படும்
.இந்த வேளையில் தரமான விந்தணு உடலுக்குள் நிகழ்வதைப்போலவே இங்கும் கருமுட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு உட் சென்றால் ,கருமுட்டையும் விந்தும் சேர்ந்து கருவாகிவிடும்

.முட்டை விந்து என்பவற்றின் தகுதிக்கேற்ப 3 அல்லது 5 அல்லது 10 என்று கருக்கள் உருவாகும்
.சில அவ்வாறு கருவாக சேர்ந்த பின்பு கூட பழுதடைந்து விடும்,3 இலிருந்து 5 நாட்கள் வளர்ச்சியை அவதானித்து அதன்பின் இவற்றில் நல்ல கருக்களை தெரிவு செய்து 2 அல்லது 3 கருக்களை கருப்பைக்குள் செலுத்தப்படும்,மீதி கருக்கள் இருந்தால் பதப்படுத்தி வைத்து மீண்டும் அல்லது அடுத்த குழந்தைக்கு உபயோகிக்கலாம்.

கருவை உட்செலுத்தும் போது மயக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.பெண் விரும்பினால் மயக்க நிலையில் கருவேற்றம்   செய்து கொள்ளும்படி கேட்டால் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்,

 கருவேற்றம் செய்து 15 நாட்களின் பின் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...