Thursday 11 May 2017

கவுத


இரவோடு பகலையும் 
இணைத்தே 
நனைத்தபடி ....நீயும் 
மணிக்கொரு தேநீரை
அணைத்தபடி நானும்.....
ஈர மனதுடன் 
உவகையில் துளிர்க்கின்ற 
தளிர்களை கொஞ்சியபடி
இளவேனிற்காலத்தின்
சத்தமிடுகிறது
சாரல் துளிகள்









படமும் கதையும் 1


மார்ச் ஏப்ரல் மே வசந்த காலம் Spring
ஜூன் ஜீலை,ஆகஸ்ட் கோடை காலம் Summer
செப்டெம்பர் ஒக்டோபர் நவம்பர் இலையுதிர்காலம்Fall
டிசம்பர் ஜனவரி பெப்ருவரி குளிர்காலம்Winter
காலநிலை பிரிவு நாடுகளை பொறுத்து வேறுபடலாம் ஆனால் எல்லாக்காலநிலைகளும் எல்லோராலும் நேசிக்கப்பட்டாலும்,
எந்த இடையூறும் கொடுக்காமல் எல்லோரையும் நேசிக்கும் ஒரு காலநிலைதான் இந்த வசந்தகாலம், காரணம் மற்றைய எல்லாக்காலங்களிலும் உள்ளதை மிதமிஞ்சாமல் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
மரங்களில் தளிர்கள் சிறு மொட்டுக்கள் போல் அழகாக இருக்கும் .அதாவது மரம் நிறைய மொட்டுக்கள் போல் இருக்கும்.அதுவும் பனியில் நனைந்தோ மழையில் குளித்துவிட்டோ நிற்கும் மரங்களை binocular கொண்டு பாத்தால்
நம் மனசிலும் அழகு துளிர்க்கும்.
நான் மரங்களின் தளிர்களைத்தான் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது கமராவை 35* ற்கு மேலே ஸூம் பண்ணும்போதுதான் இந்த குட்டி குருவியார் கூடு கட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
துணை தேவையான பொருட்கள் கொண்டுவர போயிருக்கும் போல அடிக்கடி கூப்பிட்டு கொப்பில் தாவி தாவி தேடிக்கொண்டு இருந்தது.
நமது சுட்டு விரலளவு சிறிய பறவை .நெட் இல் search by image இல் படத்தை கொடுத்து தேடினேன் great tit இதன் பெயர் என்றும் வெறும் 16 கிராம் மட்டுமே எடைகள் கொண்டது என்றும் தெரிகிறது.
நானும் ஸீப்ரா பிஞ்ச் கனரி எல்லாம் வளர்த்தேன் முன்பு. அவை போல அழகான பாடகர்களை எங்கும் கண்டதில்லை.இந்த பேர்ட் குரல் கூட அழகாக இருந்தது.
ஓட்டை ஓட்டையாக குடைந்து இந்த மலைகளில் வசிப்பவர்களும் இதுபோன்ற குட்டிப்பறவைகள் குடும்பங்களே.
போட்டோக்கு முகத்தை காட்டாமல் வாலை மட்டும் காட்டிக்கொண்டு இருந்தது அதுவும் தெளிவில்லை.பார்ப்போம் அடுத்த தடவை மாட்டுவார் .மாட்டுவார்
சோ நீங்கள் எவ்வளவு பரபரப்பாகவும் , மன அழுத்தமாகவும் இருக்கலாம் முடிந்தவரை இவற்றை பிள்ளைகளுக்கு (இயற்கையை ரசிக்க )கற்றுக்கொடுக்க தவறிவிடாதீர்கள்.இவை அவர்கள் பழக்கவழக்கங்களில் அதிக மாற்றங்கள் கொண்டுவரும்.
சாந்தமான பிள்ளைகளாக வளர்வார்கள்.குடும்பத்தை அதிகமாக நேசிப்பார்கள் .தேவையற்ற பொழுதுபோக்குகளை நாட மாட்டார்கள்,தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள் ,மனம் அமைதி கொள்வதால் ஞாபக சக்தி பெருகும் 
நன்றாக படிப்பார்கள் 
என்றெல்லாம் நான் சொல்லவில்லை ஆராய்ச்சிகள் சொல்கிறது.அம்புட்டுத்தேன்.

























மழைக்கால மேகங்கள்


மழைத்துளிகளையும் ,அது விழும்போது சிதறும் அதிர்வுகளையும் ,சில துளிகள் இணைந்து உருண்டு பின் தெறிப்பதையும் படம் பிடிப்பதற்கே சில காலம் கமராவுக்கு lens hood போட்டுக்கொண்டு 
நான் மழையில் நனைந்திருக்கிறேன். பின்னாளில் அது பற்றி படிக்கும்போதுதான் தெரிந்தது மிகவும் தெளிவான கண்ணாடி தடுப்பை உபயோகித்து, கண்ணாடியை ஊடறுத்து மழைத்துளிகளை படம்பிடிக்க வேண்டும் என்பது.
இப்போது இன்னொரு ஆசை 
மேகத்தை விட்டு இறங்கும் மழைத்துளிகள் ”
நேரில் சில தடவைகள் பார்த்திருக்கிறேன் 
கமராவுக்குள் கொண்டு வந்துவிட ஆசை.அதற்கான தேடல்களே இவை .
நாம் கற்ற கல்வியோ ,செய்யும் வேலையோ ,சம்பாதிக்கும் பணமோ மற்றவர்கள் முன் நம்மை நிர்வகிக்கலாம் ஆனால் நம் உணர்வுகளை அழகாக்கி மனங்களை பண்பாக்கி நேசங்களை வள்ர்ப்பது என்னவோ நாம் தெரிவுசெய்யும் 
பொழுதுபோக்குகள்தான்.
வீட்டிற்கு ஒரு குடும்பம் வந்திருந்தார்கள் .சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் சாயந்தரம் ஆனதும் ஏதோ ஒரு அவசரம் ,கடைசியில் கேட்டே விட்டார்கள் உங்கள் வீட்டில் தமிழ் சானல் இல்லையா என.
நாங்கள் சொன்னோம் எங்கள் வீட்டில் விரும்பிய சானல் பாக்கலாமே நாங்களும் காமடி சானல் பாப்போம் உங்களுக்கு எந்த சானல் வைப்பது என???
ஏதோ நாடகத்தின் பெயர் சொன்னார்கள் ஹஸ் தேடி போட்டுவிட்டார்.
அவளவு நேரமும் ஒழுங்காக இருந்தவர்கள் நாடகம் தொடங்கியதும் மயான அமைதி.பிள்ளைகள் சத்தம் போட்டால் செம வெருட்டல்.
சும்மா என் பாட்டுக்கு பிள்ளைகளுடன் ஒளிச்சு பிடிச்சு விளாண்டிக்கொண்டிருந்த என்னைய கூப்பிட்டு அந்த நாடகத்துல வர குழந்தை வச்சிருக்கிற பொம்மை ஆவியாம் ,வில்லி சித்தி அந்த குழந்தையின் அம்மாவை
கொன்னுட்டாவாம் .அந்த ஆவி வந்து பொம்மைக்குள்ள இருக்காம் .
ஆத்தீ ரணகளமால்ல இருக்கு .
அந்த நாடகம் முடிய இன்னொன்று ,அப்பறம் சண் டிவி நாடகம் இப்படியே நிறைய நேரம் .
நான் இப்போ சொல்ல வந்தது சீரியல் பார்க்கும் பொழுதுபோக்கு கூடாது என்பதல்ல.அது அவரவர் விருப்பம்.அவர்கள் நேரத்திற்கும் ,உடல்நிலைக்கும் , ஆர்வத்திற்கும் ஏற்றால்போல் பொழுது போக்குகளை தெரிவு செய்கிறார்கள்.
ஒரு டாக்டர் கூட சொல்லிக்கேட்டிருக்கிறேன் அதாவது ரெம்ப வயதான, துணையை இழந்த பெற்றோருக்கு புத்தகம் வாசிப்பதோ,டான்ஸ் ஆடுவதோ ,ஊர் சுற்றுவதோ பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ள அவர்களால் முடியாது.
அப்போது அவர்கள் இந்த தொடர் நாடகங்கள் பார்ப்பதால் விரக்தியோ அடுத்தவர்களில் கோவமோ வராமல் அமைதிப்படுவார்கள் .
அவ்வாறானவர்களுக்கு இந்த பொழுதுபோக்குகளை கொடுத்து ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.
அதேபோலத்தான் திரைப்படங்களையும் ,சீரியல்களையும் பொழுதுபோக்காக கொண்டவர்களை நான் மதிக்கிறேன்.
ஆனால் நான் சொல்லப்போவது என்னைப்பற்றி மட்டுமே .
ஆம் அந்த நாடகங்கள் சில கட்டங்கள் பார்த்தேன் .வழக்கமான வேலைகளை செய்தேன் .தூங்கப்போய்விட்டேன்.
என் மாமியார் என் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை.பதிலுக்கு நான் கிச்சனுக்குள் போய் துடைப்பக்கட்டையை எடுத்துக்கொண்டு வரப்போகிறேன் .உப்ஸ் நல்லவேளை கனவு கலைந்து விட்டது.
கோவம் ,திட்டுறது,எரிச்சல் என்பதெல்லாம் என்னவென்று தெரியாத அதுவும் வேறு நாட்டில் இருக்கும் என் அப்பாவி மாமியார் எனக்கு அடித்துவிட்டார்.
சரி போகட்டும் மறுபடி உறங்கிவிட்டேன் நிறைய கனவுகள்.அதிகாலையிகூட ஒரு இறந்துபோன சொந்தக்காரர் ஆவியாக துரத்துகிறார் நான் ஓடுகிறேன் ஓடுகிறேன் கால் ஒத்துழைக்கவில்லை .வேர்த்தே போனேன்.
ச்ச்ச்ச்சே.
அப்பறம் அந்த அக்காவை மறுபடி சந்தித்தபோது சொல்லி சிரித்தேன் .நான் வழக்கமாக பார்க்காமல் அன்று பார்த்ததால் இப்பிடியெல்லாம் கனவாச்சு என்று.
அப்போது அவர் சொன்னார் இல்லை தனக்கும் இதுபற்றி கனவு கண்டிப்பா வருமாம் .சில காரக்டர்களில நாள் முழுக்க கோவம் வந்து கொண்டிருக்குமாம்.அடுத்தது என்ன நடக்கும் நு மனசு பரபரப்பாக இருக்குமாம்.சில காரெக்டர்களுக்கு 
அடிக்க வேணும் போல இருக்குமாம்.
ஆத்தீ இது இன்னும் ரணகளமாவுல்ல இருக்கு
பொழுது போக்குகள் என்பது நம்மை மகிழ்ச்சிப்படுத்த நாமே தெரிவுசெய்து கொள்வது.அது எங்களை ஆற்றுப்படுத்த வேண்டும் .அல்லது நம்மை அறியாமலே நம் வார்த்தைகளிலும் நடவடிக்கைகளிலும் எதிர்மாறான ஆதிக்கம் செலுத்த 
தொடங்கி விடும்.
சிலர் பாட்டுக்கள் விரும்பி கேட்பார்கள் .அது அழகான பொழுதுபோக்கு . ஆனால் பாட்டையோ ,பாடியவரையோ யாரும் விமர்சிக்க கூடாது என்று வெறிப்பிடித்து பேசினார்களானால் அதன் பெயர் அதீதம் .
ஆகவே எதுவாயினும் அளவோடு எடுத்துக்கொண்டு வாழ்க்கையை அழகாக்கிகொண்டு கடந்து செல்வோம்.
படமும் கதையும் தொடரும்.












பேலியோ டயட்



எந்த விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கத்தான் செய்யும் .நான் எந்தப்பக்கத்தில் இருக்கிறேனோ அதில் எனக்கு ஆத்ம திருப்தியே .
ஆமா நான் இப்டீக்கா போறேன் நீங்க எப்டீக்கா வாணா போங்கோ.
மறுப்பவர்கள் அனுபவிக்கவில்லை.
அனுபவித்தவர்கள் மறுப்பதற்கில்லை . அவ்வளவே .
டேட் எக்ஸ்ஃப்யர் ஆகினால் யாராக இருந்தாலும் கிளம்பித்தானே ஆகவேணும்.நான் டயட் ல இருந்தேனே இன்னும் 5 வருஷம் போட்டுக்குடு நு எல்லாம் கேக்க முடியாது.
பட் இருக்கும் எல்லை வரைக்கும் ஆரோக்கியமாவும் மனசுக்கு திருப்தியாவும் முடிஞ்ச அளவு நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டால்தான் தேவையற்ற நோய்களை சுமக்காமல் யாருக்கும் சுமையாகாமல்
குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால் அவர்களை விட நான்கு மடங்கு நோய்களை லிஸ்ட் போட்டுக்காட்டாமல் தென்பாக உதவி செய்யலாம்.
என் அக்காவின் சிறுவன்கள் nutella எல்லாம் 1 கிலோ போத்தலைகூட சட்டுபுட்டுன்னு காலி பண்ணுவாங்கள் .ஆனா அந்த குண்டனுகளே ஸ்கூல் ல எதையாச்சும் சேர்ந்து பேசிக்கதைச்சுட்டு வந்து இடைக்கிடை
டயட் பண்ண தொடங்கிடுறாங்கள்.2015 இல அளவில்லாத ஒரு பார்ட்டி ட்ரெஸ் ஐ தங்களுடைய அம்மாக்கு வாங்கீட்டு சட்டைக்கு அளவா தாயாரை மெலிய வச்சுட்டாங்கள் தெரியுமோ.
அப்போ எல்லாம் எனக்கு இந்த டயட் ஐ சொல்லித்தர நான் காதுல விழுத்தவே இல்ல.
இப்போ நெட்ல பாத்து ஃபலோவ் பன்றனாக்கும் .
ஜனவரி 15 அரிசி சாதம் சாப்பிட்டேன்.இன்னும் பிள்ளைகளுக்கு செய்யுற சாதத்தில உப்பு பாக்குறதுக்கு கூட வாயில வைக்கலையே.
தொப்பையும் இல்ல சோம்பலும் இல்ல. எக்ஸ்ரா ஸ்மோல் ட்ரெஸ்ஸஸ் ம் ஸ்மால் சைஸ் ட்ரெஸ் எல்லாம் ரெம்ப நல்லதுகளை எடுத்து ,பிள்ளைகள் கண்டிப்பா விரும்பி போடுவினம் எண்டு நாலு 20 litre storage box ல 
அழகா அடுக்கி வச்சிருந்தேன் .
ரெம்ப பிடிச்ச ஆடைகள் .
தங்கைகளிடம் வருடக்கணக்காக சண்டை போட்டதில் திருமணமாகி வரும்போது மனசு கரைஞ்சு அவர்களாக கொடுத்த ஆடைகள்.
அவர்களுக்கு தெரியாமல் திருடிக்கொண்டு வந்து போட்டு போட்டோ எடுத்து ஷாக் குடுத்த ஆடைகள்.
இன்னும் சில சட்டைகளில் என் ஞாபகம் ஒட்டியிருக்க அதை அப்படியே வைத்திருந்து என்னிடமே கொண்டு வந்து தந்தவைகள் .
ஏக்கமாக பார்ப்பேன்.
இப்போ நானே சிலதை மறுபடி யூஸ்பண்ண தொடங்கியிருக்கேனே.இது மட்டும் போதும் நேக்கு.
எங்கே என் பட்டர் டீ???
யாராவது இந்த டயட் ஐ தொடர விரும்பினால் ஆரோக்கியம் அண்ட் நல்வாழ்வு குழுமத்தில் இணைந்து .அவர்கள் வழிகாட்டலின் படி தொடருங்கள்.
ஆனாலும் சிலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் உணவுப்பட்டியலையும் கொடுக்கிறேன்.
காலை 
நேரம் கிடைத்தால் 
பட்டர் டீ 
முதல்நாள் ஊறவைத்த பாதாம் 100
அல்லது 
அவகொடா 1
அல்லது
முட்டை 3
பிஸ்தாஸ்
நேரம் கிடைக்காவிட்டால் ப்ரேக்ஃபாஸ்ட் ஐ ஸ்கிப் பண்ணிவிடுவேன்
மதியம்
பேலியோ காய்கறிகள்
மீன்
சிக்கன்
சாலட் 
கடல் உணவுகள்
க்ரீன் டீ
சீஸ்
இரவு
பேலியோ சூப்
அவ்வளவுதான்.
கீழ்வரும் லிஸ்ட் கொப்பி பேஸ்ட்
உண்ணகூடிய காய்கறிகள்
காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ் 
முள்ளங்கி
பாகற்காய்
காரட் (200 grams max. dont take daily)
பீட்ரூட் (200 grams max. dont take daily)
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ பீர்க்கங்காய் புடலங்காய் ,சுரைக்காய்
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
நிலக்கடலை
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய் பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்
___________________________________________________
இது முகநூலில் இயங்கும் ஆரோக்கி யம்& நல்வாழ்வு எனும் குழுமத்திற்கான டயட். இதில் மேலும் கேள்விகள் இருந்தால் இக்குழுவில் இணையவும். இக்குழுவின் பதிவுகளை முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்திலும் படிக்கலாம்.
மேலும் கேள்விகள் இருந்தால் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைந்து கேட்கவும்.
அன்புடன்
நியாண்டர் செல்வன்

படமும் கதையும்

நீர் நிலைகள் எப்போதும் அழகுதான் .அதிலும் என்னை கடலை விடவும் அதிகம் கவர்வது இவ்வகையான pond தான்.
அங்கு நிச்சயமாக அன்னங்கள் வாழும் .சின்ன மீன்கள் கூட்டமாக இருப்பதால் எல்லாவகைப்பறவைகளும் இங்கு உணவு தேடி வரும்.
சில வாத்துக்கள் அழகான குஞ்சுகளுடன் வரிசையாய உலக அழகிப்போட்டியில் டிங்கு டிங்கு என 
நடப்பதுபோல் சுத்தி சுத்தி வரும் .
கடும் குளிரிலும்,கடும் பிஸியிலும் இந்த இடங்களை பார்க்க போக தவறுவதில்லை நாம்.தரையில் கால்வைக்க முடியாவிட்டாலும் அதைப்பார்த்தவாறு காருக்கு உள்ளிருந்து ரசித்தபடி கோப்பி குடித்துவிட்டு வருவோம்.
குளிர் நேரத்தில் அதிக பறவைகள் இருக்காது.இந்தியா போன்ற நாடுகளுக்கு போய்விடுமாம்.ஆனாலும் திரும்பி அதே இடங்களில் வந்து லாண்ட் பண்ணுவார்களாம் என்று படித்திருக்கிறேன்.(வேடந்தாங்கல்}
போன வாரம் போயிருந்த போது ஏனோ குஞ்சுகள் இல்லை.இப்போதுதான் குளிர் குறையத்தொடங்கி இருக்கிறது அடுத்த மாசம் கண்டிப்பாக மழலைகளை பார்க்கலாம்.
இவ்வாறான இடங்கள் இங்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஆனாலும் கேரளாவில் குடில்களுடன் சேர்ந்தால் போல் அமைந்த pond மட்டும் மனசை விட்டு இன்னும் நகர்வதே இல்லை.


































படமும் கதையும்

அவ்வ்வ்வ்வ் குளிர் குறைந்ததும் இந்த வாரம் soccer match தொடங்கிவிட்டது.இரவிரவாக மட்ச் நடக்கும் .குழந்தைகள் விளாடுற மட்ச் அண்ட் பெண்கள் மட்ச் எனக்கும் பிள்ளைகளுக்கும் ரெம்ப பிடிக்கும்.
சின்னக்குட்டிகள் 12 வயசு டீம் பாக்க ரெம்ப அழகு.ஒராள் விழுந்தால் கோல்கீப்பர் முதல்கொண்டு எல்லாரும் சேந்து தூக்கிவிட ஓடி வருவினம்.
எத்தின வயசு டீம் ஆக இருந்தாலும் அந்த டீம் ல் தமிழ் பிள்ளைகளும் இருப்பதோடு soccer coach,referee எல்லாம் அதிகமாக தமிழர்கள்தான்.
நேரப்பற்றாக்குறைகளால் என் ஹஸ் இப்பொதெல்லாம் பார்வையாளர்தான்.
இன்று நல்ல மழை ஆனாலும் விளையாட்டு ஓயவில்லை. அந்த பக்கம் சண்செட் ரெம்ப தெளிவா அழகா இருக்கும் அதனால கமரா கொண்டுபோயிருந்தேன்.
ஆனாலும் இன்று இயற்கை அநியாயத்துக்கு பில்டப் கொடுத்தது வித்தியாசமான அனுபவம்தான்.
அங்கே போன போது கடும் மழை .கொஞ்ச நேரத்தில் சரியான சூரிய வெளிச்சம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ஒருபக்கம் சண்செட் இன்னொரு பக்கம் அழகான வானவில்.
எல்லாத்தையும் ஓடி ஓடி க்ளிக் க்ளிக்.இதோ.
























youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...