Wednesday, 1 February 2017

வாழைப்பூ பக்கோடா

தேவையானவை

வாழைப்பூ 1
மைதா மா 1 கப்
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 5
பெருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்





செய்முறை

1.வாழைப்பூவை எடுத்து முற்றிய இதழ்களை களைந்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக படத்தில் காட்டியது போல் செய்யவும்

2.கட்டிங் போட் ல் வைத்து மெலிதாக அரிந்து உப்பு சேர்த்து அலசி கழுவி வடித்து எடுத்துக்கொள்ளவும்.

3. காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் , பெரிய வெங்காயம்  என்பவற்றை நறுக்கவும்.



4. பெருஞ்சீரகம் கருவேப்பிலை,உப்பு ,  மைதா மா எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும் .



5..இப்போது எண்ணெய் சூடாகியதும் கையால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும் .

மிகவும் சுலபமும் சுவையானதுமான பகோடா ரெடி






ஆப்பிள் ரோஸ்


சுலபமானதும் வீட்டு விஷேசங்களுக்கு  ஏற்றதும் பார்வைக்கு அழகாகவும் இருக்கக்கூடிய ஒரு டிசேர்ட் இந்த அப்பிள்ரோஸ்
செய்முறை

தேவையானவை

ஆப்பிள் 3
puff pastry sheet 1
லெமன் பாதி
கோன் சிரப் அல்லது தேன் அல்லது ஜாம்





செய்முறை

1.அப்பிளை [2]கழுவி குறுக்காக பாதியாக வெட்டி விதைகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்

2.மிகவும் மெலிதாக அரிந்து கொள்ளவும்

3.அரிந்த அப்பிளை மைக்ரோவேவ் ல் வைக்க கூடிய ஒரு பாத்திரத்திற்குள் போட்டு பாதி லெமனை பிளிந்து 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் ல் வைக்கவும்

4.இப்போது அதற்குள் உள்ள நீரை வடித்து அப்பிளை எடுக்கவும்

5.puff pastry sheet ஐ 6 துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை எடுத்து கோன் சிறப்,அல்லது விரும்பிய ஜாம் ஏதாவது சீட் ல் பூசவும்

6.அப்பிள்களை படத்தில் காட்டியதுபோல் வரிசையாக அடுக்கி சுற்றவும்.

7. கப் கேக் ட்ரே யிற்குள் வைத்து 350 ல் 20நிமிடங்கள் பேக் பண்ணி எடுக்கவும்




கோவக்காய் பொரியல்


தேவையானவை

கோவக்காய் கால் கிலோ...
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் பொரிக்க





செய்முறை
1.கோவக்காயை கழுவி சுத்தம் செய்து 2 முனைகளிலும் உள்ள கருப்பு புள்ளியை வெட்டி அகற்றவும்.

2.குறுக்கு வெட்டாக 2 ஆக பிளந்து வரி வரியாக மேலும் சீவல்களாக்கிக்கொள்ளவும்.

3.இப்போது உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு பக்கமாக 10 நிமிடங்கள் வைக்கவும்.

4.எண்ணெயை சூடுபண்ணி பொரித்து எடுக்கவும்.




கோவக்காய் உணவில் சேர்ப்பதன் நன்மைகள் தெரிந்தவர்கள் நிச்சயமாக அடிக்கடி சேர்த்துக்கொள்வார்கள் .நீரழிவு நோயாளர்களுக்கு மிகவும் உகந்தது.
கியூக்கும்பர் ,சுரைக்காய், போன்ற நீர்த்தன்மை வாய்ந்த காய்கறிகளின் குடும்பத்தை சேர்ந்தது என்பதால் அவற்றிற்கே உரிய சிறப்புடன் உடல்சூட்டை தணிக்கவும்
சில நுண் கிருமிகளை யூரினுடன் வெளியேற்றவும் வழிவகுக்கும்.
பொரியல் செய்து உண்ணும்போது கூட அதிக சத்துக்களை இழக்காமல் நன்மையே தரும் .
உப்பு ,மிளகாய்த்தூள் கலவையை விரைவில் தன்னகத்து உறிஞ்சிக்கொள்வதால் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.


வீடு சுத்தமாக இருக்க





வீடு சுத்தமாக இருக்கவும்
அடிக்கடி சுத்தம் செய்யும் வேலையை மிச்சப்படுத்தவும்
 பொருட்கள் சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கே வைத்தோம் என தேடாமல் இருக்கவும்

வீட்டிலுள்ள அத்தனை ட்ரோவர்களையும் [drawer} நேர்த்தியாக வைத்திருப்பது அவசியம்.
நேர்த்தியாக கையாள நாம் செய்யவேண்டியவை.
...

1.எந்த காரணத்தை கொண்டும் நேரடியாக ட்ராவர் க்குள் பொருட்களை அடுக்க கூடாது.விரைவில் கலைந்துவிடும் .ட்ராவர் ம் அழுக்காகி பார்க்க நன்றாக இருக்காது.

2.ட்ராவர் களுக்கு விரிப்பதற்கு என்று கடையில் பிரத்தியேகமாக ஒரு ஷீட் விக்கும்.இது ட்ரோவரின் தளத்தை ஒட்டியதுபோல் அங்கும் இங்கும் இழுபடாமல் ஒட்டினால்போல் இருக்கும்.
சிலர் பழைய பேப்பர்களை விரிப்பார்கள் .இது அழகையும் கெடுத்து விரைவில் பழுப்படைந்து கிழிபட்டு அடிக்கடி சுத்தம் செய்யும் வேலையை உண்டு பண்ணும்.

இந்த ஷீட் வாங்கி விரிக்காவிட்டால் கூட பரவாயில்லை பத்திரிகைகளை விரிக்காமல் விடலாம்.

3.ட்ராவர்களுக்கு பொருத்தமான திறந்த பெட்டிகளைக்கொண்டு ட்ரோவரை நிரப்பி விட்டு அந்த பெட்டிகளுக்குள் அழகாக பொருட்களை பிரித்து அடுக்குவதே மிகவும் சிறந்தது.

அன்னாசி புருட் ஸ்டாண்ட்


தேவையானவை
அன்னாசி 1
திராட்சை கறுப்பு கால் கிலோ
திராட்சை பச்சை கால் கிலோ
ஸ்ராபெரி அரை கிலோ
டொமாட் ஷெரி 100 கிராம்
ப்ளூபெரி 100 கிராம்
பழங்களை உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்யலாம் தவிர்க்கலாம்.



இது மிகவும் சுலபம் காரணம் அன்னாசியில் வரிகள் ஏற்கனவே இருக்கும் .சீவிய பின்னும் சரிவான வரிகள் மெலிதாக காணக்கூடியதாக இருக்கும்.அப்படி வரிகளை காணவில்லையா கவலை வேண்டாம்
அன்னாசியில் உள்ள புள்ளிகள் கூட ஒரு ஒழுங்கிலேயே இருக்கும்.அதை வைத்து சுலபமாக வரிசையாக பழங்களை சொருகி விடலாம்
.
1.அன்னாசியை மேலே உள்ள தண்டு இலையை வெட்டி வீசாமல் அப்படியே வைத்து தோலை சீவிக்கொள்ளவும்.



2. பலவண்ண திராட்சைகள்,ஸ்டாபெரி,புளூபெரி என கிட்டத்தட்ட அளவுகளில் ஒத்துப்போகக்கூடிய பழங்களை தெரிவுசெய்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்



3.பல்லுகுத்தும் குச்சிகளை எடுத்து பழங்கள் ஒவ்வொன்றிலும் குத்தவும். அல்லது அன்னசியிலும் குச்சியை  வரிசையாக குத்தி விட்டு பழங்களை மாட்டலாம்




4. இப்போது நீங்கள் தோல் சீவி வைத்துள்ள அன்னாசியில் குச்சியில் குத்திய பழங்களை வரிசையாய சரிவாக மேலிருந்து கீழாக ஒன்று ஒன்றாக குத்துங்கள்.

5.இதேபோல் ஒருவகை பழத்திற்கு ஒரு வரி என குத்திக்கொண்டே போகவேண்டும்.

6.இப்போது அன்னாசி தெரியாமல் பழங்களை நிரப்பிவிடுங்கள்.அவ்வளவுதான்.



உங்கள் பிறந்தநாள்களையும் பார்ட்டிகளையும் சிறப்பிக்கவும் போட்டோக்களை அழகாக்கவும் செய்து பாருங்கள்.

ஒனியோன் வாஸ்



நாம் சமைத்த உணவுகளை அப்படியே தூக்கி மேசையில் வைத்து பரிமாறுவதற்கும் உண்ணும் பொருட்களாலேயே அலங்காரங்கள் செய்து பரிமாறுவதற்கும் எவ்வளவு வித்தியாசமும்
மெருகூட்டலும் திருப்தியும் கிடைக்கும் என்பது (food presentation) ஒருமுறையாவது செய்து பாருங்கள் புரியும்.


இங்கு 2 நிமிடங்களில் செய்துவிடக்கூடிய ஒரு உணவு அலங்காரம் செய்து காண்பித்துள்ளேன்.





1.வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கலாம் நீக்காமலும் விடலாம்.
2.படத்தில் காட்டியது போல் மேலும் கீழும் கொஞ்சம் வெட்டி நீக்கிவிடுங்கள்.
3.நடுவில் உள்ள வெங்காய இதழ்கள் சிலதை குடைந்து எடுத்து விடவும். விரலினால் தள்ளி துளைபோல் ஆக்கி விடலாம்.
4.இப்போது வாஸ் போல் இருக்கும் வெங்காயத்தின் துளைக்குள் கருவேப்பிலை, மிளகாய் ,கொத்தமல்லி ,காய்கறிகளில் செய்த பூக்கள் போன்ற விரும்பியவற்றை வைத்து அலங்கரிக்கலாம்.
வெங்காயம் வெள்ளை,சிவப்பு ,மஞ்சல் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.விரும்பினால் எல்லா வண்ணங்களிலும் செய்தும் அழகு படுத்தலாம்








சொக்லேட் பொக்கேவ்


கொண்டாட்டங்கள் செய்யும் போது எல்லோருமே அதிகம் பேரால் செய்யப்படாத மாறுதலான வித்தியாசமான சிலவற்றை செய்ய விரும்புவோம்.

 அந்த வகையில் விழாக்களில் சொக்லேட் பொக்கேவ் செய்வது பார்க்க அழகாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

விழாக்களின் தரத்திற்கு ஏற்ப பெரிது சிறிதாக செய்து கொள்ளலாம்.வீட்டில் செய்யும் பிறந்த நாள் பாட்டிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
...
இங்கு ஒரு மிக சுலபமான முறையை சொல்லி தருகிறேன்

தேவையானவை

சொக்லட்ஸ் 6
க்ரேப் பேப்பர்
பென்சில்
பார்பிக்யூ ஸ்டிக் 6






.
1.சொக்லட்ஸ் ,குச்சிகள்,கிரேப் பேப்பர் ,கத்தரிக்கோல்,பென்சில்,புளோரல் ரேப் என்பவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்

2. 6சென்ரிமீட்டர் நீளம்*6சென்ரி மீட்டர் அகலம் என்ற வகையில் கிரேப் பேப்பரை கத்தரித்துக்கொள்ளுங்கள்
.
3.ஒரு பென்சிலில் வைத்து சுத்தி 2 முனையையும் நெருக்கி சுருக்கிக்கொள்ளுங்கள்.

4.பின்னர் சுருக்கியதை கழற்றி 2 முனைகளையும் கொஞ்சம் இழுத்துக்கொள்ளுங்கள்

5. அவ்வளவுதான் குச்சியில் முதலில் சொக்லேட் ஐ வைத்து புளோரல் டேப்பால் சுத்தி அதன் பின் தயார் செய்த கிரேப் பேப்பர் இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றி தொடர்ந்து குச்சியையும் சுற்று முடிக்கவும்.

6.கொத்தாக செய்து விரும்பியபடி அலங்கரிக்கவும்.






youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...