இது எவ்வளவு விசேஷமானது என்று என் ஈழ மக்களுக்கு சொல்லவே வேணாம்.
இருந்தாலும் நான் செய்ததை என் சொந்த பாஷையிலேயே மாற்றம் செய்யாமல் சொல்லீட்டு போறன்.
ஆயத்தம் செய்யுறதுதான் கஸ்டம் அதனால மெல்ல வீட்டில உள்ள எல்லாரையும் கூட்டு சேர்க்கவேணும்.
கஷ்டமான வேலை முடியவிட்டு ,நான் செய்யுறன் ,வெளிய போங்கோ எண்டு வத்தி விட்டுட வேணும்.
தேவையானவை
5,6 பேருக்கு
ஒடியல்மா 150 கிராம்
நண்டு கால் கிலோ
இறால் கால்கிலோ
கணவாய் அரை கிலோ
பயித்தங்காய் 100 கிராம்
மரவள்ளி கால் கிலோ
முருக்கை இலை கொஞ்சம்
பலாக்கொட்டை 100 கிராம்
குத்தரிசி 2 கைப்பிடி
மீன் தலை கால் கிலோ
உள்ளி 10 பல்லு
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் 20 { உறைப்பு பார்த்து தேவைப்பட்டால் இன்னும் சேர்க்கவும்}
புளி ஒரு டேபிள் ஸ்பூன்
ஆயத்தம்
1.ஒடியல் மாவை தண்ணீரில் ஊற வைத்து கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை மேலே உள்ள தண்ணியை ஊற்றிவிட்டு புது தண்ணி மாற்றவும்
கயர்ப்பு போக 3 தடவையாவது இவ்வாறு செய்யவும்
2. தண்ணீரில் உள்ள ஒடியல் மாவை துணியால் பிழிந்து தண்ணீரை நீக்கி எடுத்து 1 கப் புது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
3...மீன் ,நண்டு ,இறால் , கணவாய் எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைக்கவும்.
4..பயிற்றங்காய்,மரவள்ளி ,பலாக்கொட்டை ,முருக்கை இலை இவற்றையும் சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்
5.. உள்ளி,மிளகாய்,மிளகு மூன்றையும் அரைத்து வைக்கவும்
6.. புளியை கரைத்து வைக்கவும்
செய்முறை
அடுப்பை மிதமான வெப்பத்திலயே வச்சிருங்கோ
தேவைக்கேற்ற மாதிரி அப்பப்போ தண்ணியும் ,உப்பும் சேர்க்க மறக்க கூடாது.
1.வீட்ல உள்ளதில பெரிய பாத்திரமா ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.
2. 4 கப் தண்ணி விட்டு பயிற்றங்காய் ,பலாக்கொட்டை,அரிசி மூன்றையும் வேக வைக்கவும்
3. கொஞ்சம் வெந்து கொண்டு இருக்கும் போது கணவாய் ,நண்டு ,மீன் சேர்க்கவும்
4. ஒரு 5 நிமிஷம் வேக விட்டு மரவள்ளி ,இறால் ,முருங்கை இலை மூன்றையும் போடவும்
5. கொதித்து எல்லாம் வெந்து வரும்போது அரைத்து வைத்திருக்கும் உள்ளி ,மிளகு,மிளகாய் கலவையை சேர்க்கவும்
6. இப்போது எல்லாம் வெந்த பிறகுதான் புளி சேர்க்க வேண்டும்.
7. புளி மணம் போக 5 நிமிஷம் மெல்லிய ஹீட் ல கொதிக்க வச்சுட்டு ஒடியல்மா கரைசலை சேர்க்கவும்
ஒடியல் மா சேத்த உடன அடிப்பிடிக்க பாக்கும் கவனமா கிண்டி விட்டு அடுப்பை அணைக்கவும் { நோஓஓஓ அடுப்பை கட்டிப்பிடிக்க குடாது யுடும் ]