Wednesday 1 February 2017

சமையல் துர்நாற்றம் போக்க

ஆழமான எண்ணெயில் மீன் பொரித்தெடுக்கும் போதும் கருவாடு வறுக்கும் போதும் வெளிப்படும் மணம் எவ்வளவு அழுத்தமாக இருக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும் .அதற்கென இருக்கும் எலெக்ரிக் குக்கரில் செய்தால் கூட வீடு முழுவதும் பரவிக்கொள்ளும் இந்த மணம்.இதை தவிர்க்க நமக்கு வினிகர் மிகவும் கை கொடுக்கும்


மிருதுவான இட்லி



தேவையானவை
cream of rice {இட்லி அரிசி} 2 கப்
உழுந்து 1 கப்


ஆயத்தம்

cream of rice  ஐயும் உழுந்தையும் தனித்தனி பாத்திரங்களில் இட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

செய்முறை

உழுந்தை அரைக்கவும் மிகவும் மாவாக அரைக்க தேவையில்லை.அதனுடன் cream of rice  ஐ தண்ணீர் இல்லாமல் பிழிந்து
உழுந்துடன் சேர்த்து மிக்ஸ் பண்ணி 10 மணித்தியாலங்கள் வைக்கவும்{ ஒரு இரவு}

பின் உப்பு சேர்த்து  இட்லி யை  20 நிமிடங்கள் வேக  வைத்து இறக்கி  தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் ஆறியதும் தட்டில் இருந்து எடுக்கவும்.



வெளிநாட்டில் இருக்கும் பலர் சொல்லுவது இங்கு இட்லி அரிசி கிடைப்பதில்லை .என்பதே .ஆனால் ரவா வை விட அரிசி இட்லியே அதிக சத்துக்கள் அடங்கியது.இது cream of rice என்று எல்லா நாட்டிலும் தமிழர்களுக்கு என்றில்லாத பொதுவான கடைகளில் கிடைக்கும் .பாலுடன் சேர்த்து காலை உணவாக எடுத்து கொள்வார்கள் .இதையே நாம் தண்ணீரில் ஊற வைத்து பின் தண்ணீரை நீக்கி இட்லி செய்யலாம் .உலகளாவிய ரீதியில் சத்தான நிறைவான காலை உணவாக இட்லி இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத விடயம்.அரிசி உழுந்து என்பவற்றை நாம் மணிக்கணக்கில் ஊறவைக்கும் போது உருவாகும் ஆரோக்கியமான பக்ரீரியாக்கள் நம் உடலுக்கு இட்லி மூலம் நிறைந்த நன்மைகளை கொடுக்கும்.

சுண்டைக்காய் நெத்தலி குழம்பு


தேவையானவை
சுண்டைக்காய் 1/4 கிலோ
நெத்தலி கருவாடு 50 கிராம்...
புளி 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 மேசைக்கரண்டி


தாளிக்க
வெங்காயம் 1
உள்ளி 2 பல்லு
கருவேப்பிலை,சீரகம்,கடுகு

ஆயத்தம்

சுண்டைக்காயை உரலில் தட்டி தண்ணீரில் அலசி விதகளை நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்
நெத்தலிக்கருவாட்டை சுடுநீரில் ஊறவைத்து சுத்தம் செய்து வைக்கவும்
புளியை கரைத்து வைக்கவும்

செய்முறை

1அடுப்பில் சட்டியை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளிகவும்

2.அதனுள் சுண்டைக்காய் கருவாடு என்பவற்றையும் வதக்கவும்

3.தூள் ,உப்பு சேர்த்து கிளறி கரைத்த புளி யும்,1 கப் தண்ணீரும் சேர்க்கவும்

4.நன்கு கொதித்து ஓரளவு வற்றியதும் இறக்கவும்.



சுண்டைக்காயில் ஒரு கசப்பு தன்மை இருந்தாலும் நிறைய பேருக்கு பிடித்த ஒரு காய்கறி இது.தனியே செய்வதை விட இப்படி கூட்டாக செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.அத்தோடு இன்னொன்றுடன் செர்த்து செய்யும்போது அதிகமாக எடுக்க தேவை இல்லை இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொள்ள போதுமானதாக இருக்கும்

சின்ன வெங்காய குழம்பு



தேவையானவை
சின்ன வெங்காயம் 15 கிராம்
வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
புளி 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி

தாளிக்க
கடுகு ,கருவேப்பிலை,சீரகம்


ஆயத்தம்

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்யவும் .வெட்டக்கூடாது.
புளியை கரைத்து வைக்கவும்

செய்முறை

கடுகு, சீரகம் ,கருவேப்பிலை ,வெந்தயம் தாளித்து அதனுடன் சேர்த்து வெங்காயத்தையும் வதக்கவும்
வதங்கியதும் தூள் ,உப்பு சேர்த்து  கிளறி கரைத்து வைத்துள்ள புளியையும் சேர்க்கவும்
1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து ஓரளவு வற்றியதும் இறக்கவும்.


வெங்காயத்தை எப்போதும் குழம்புக்கு பயன் படுத்துவோம்.ஆனால் வெங்காயத்தையே குழம்பாக செய்து பார்த்தால் அதன் சுவை எப்போதுமே நாவை விட்டு போகாது .எல்லா உணவுகளுக்கும் சுவையை கொடுக்கும் வெங்காயம் அதுக்கென்று தனி மரியாதை கொடுக்கும்போது ஏமாற்றுமா என்ன?

உணவு பரிமாறுதல்

சமையலில் உள்ள சிறு குறைகள் பரிமாறும் விதத்தில் காணாமல் போய்விடும்.அதேபோல் பரிமாறும் தட்டுக்களும் உணவில் ஈர்ப்பையும் பசியையும் ஏற்படுத்தி நிச்சயம் நமக்கு பாராட்டை ஏற்படுத்தி தரும்

ஆடிக்கூழ் {யாழ்ப்பாண முறை]

தேவையானவை

சிவப்பு அரிசிமா  1/4 கப்
அவித்த மைதா மா 1/4 கப்
பயறு 5 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் 2 கப்
சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
பனங்கட்டி 1/4 கிலோ


நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 5 {எண்ணிக்கை}
ஏலக்காய் 1


ஆயத்தம்

1.சிவப்பு அரிசிமாவில் 4 டேபிள் ஸ்பூன் எடுத்து கால் கப் அளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்

2.சிவப்பு அரிசி மாவையும் அவித்த மைதா மாவையும் சேர்க்கவும்

3.தண்ணீரை கொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் தண்ணீருக்குள் உப்பு சேர்த்து கொஞ்சமாக மாவில் சேர்த்து  இடியாப்ப பதத்திற்கு குழைக்கவும்

4. மா ஆறியதும் சிறு உருண்டைகள் செய்து வேக வைக்கவும்

5.பனங்கட்டியை 1 கப் சுடுநீரில் கரைத்து வைக்கவும்

6.தேங்காய்ப்பால் 2 கப் தயார் செய்து வைக்கவும்

7.ஒரு துண்டு தேங்காயை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும்

8.பயறை வறுத்து வைக்கவும்

9.நச்சீரகம், மிளகு,ஏலக்காய் என்பவற்றை  சட்டியில் வறுத்து பொடி செய்து வைக்கவும்

செய்முறை

அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் விட்டு பயறை வேக வைக்கவும் .
பயறு வேகியதும் பனங்கட்டியை வடிகட்டி அதற்குள் ஊற்றவும்
பாலையும் சேர்க்கவும்
ஒரு கொதி வந்ததும் வேகிய மா உருண்டைகளை கொட்டி தேங்காய்த்துண்டுகள் ,பொடி செய்த மிளகு சீரகம்,ஏலக்காய் என்பவற்றை சேர்க்கவும்
கடைசியில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து குமிழி விட்டு கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.



தேசம் விட்டு தேசம் போய் பல நூறு உணவுகளை சுவைத்தாலும் அறியாத வயதில் ஒரே ஒரு முறை உண்டிருந்தாலும் நம் பாரம்பரிய உணவு நமக்கு எப்போதுமே விசேசம்தான் .

வாழைக்காய் சம்பல்

தேவையானவை

வாழைக்காய் தோல்  1 வாழைக்காயினுடையது
சின்ன வெங்காயம் 4
பச்சை மிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்

செய்முறை

வாழைக்காய் தோலை கொஞ்ச தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வேகி தண்ணீர் வற்றியதும் {வற்றாவிட்டால் தண்ணீரையும் எடுக்கவும்} தேங்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம்  சேர்த்து மிக்சியில் அரைக்கவும்

உப்பு லெமன் சேர்க்கவும்


அசைவ உணவுகள் ,கடல் உணவுகள்,மாமிச உணவுகள் போன்றவற்றை எல்லா வகையறாக்களையும் சேர்த்து உண்ண முடியாது ஆனால் காய்கறிவகைகள்  எத்தனை சேர்த்தாலும் சுவை அதிகமாகுமே தவிர குறையாது .அவ்வாறு காய்கறிகள் விரதங்கள் செய்யும் நாட்களில் இந்த எளிய வாழைக்காய் சம்பல் உணவுக்கு இன்னும் கூடுதல் சுவை சேர்க்கும்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...