Wednesday, 1 February 2017

3 டி இதயம் சுவர் அலங்காரம்




ரெட் அல்லது பிங் அட்டை ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

அதில் இதய வடிவுகளை பெரிது சிறிதாக 4 அளவுகளில் வெட்டவும் .
...
சிறியதில் கொஞ்சம் அதிகமாக வெட்டவும்.


படத்தில் காட்டி உள்ளதுபோல் நடுவில் வெட்டி மடிக்கவும்.

இரண்டு மடிப்பையும் ஒட்டவும்.

அவ்வளவுதான் விசேஷ நாட்களில் வழக்கமான சுவர் அலங்காரத்திற்கு பதில் வித்தியாசமாக சுலபமாக இதை செய்து ஒட்டி அலங்கரிக்கலாம்.



திருமண ரிஷப்சன் ஆக அல்லது வீட்டில் செய்யும் வெட்டிங் டே ஆக இருப்பின் இதிலேயே உள்ள பெரிய ஹாட் ல் பெயர் எழுதலாம்.


ஈசி சின்ன வெங்காய கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்
 
100கிராம் சின்ன வெங்காயம்
100 கிராம் நெத்தலி கருவாடு...
புளி சிறிது
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
1 உள்ளி
கருவேப்பிலை
கடுகு
சீரகம்





1.கருவாட்டை சுடுநீரில் அலசி சுத்தம் செய்து வைக்கவும்

2.வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.வெட்ட தேவையில்லை.

3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளிக்கவும்.

4அதனுடன் சேர்த்து கருவாடு ,வெங்காயம்,உள்ளி என்பவற்றையும் தாளிக்கவும்

5.உப்பு ,தனிமிளகாய்த்தூள் என்பவற்றை சேர்த்து புளியையும் கரைத்து விட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டால் போதும்
சுவையான வெங்காய கருவாட்டு குழம்பு தயார்.




ஈஸி பீன்ஸ் சுண்டல்



தேவையானவை

வெங்காயம் 1
செத்தல் மிளகாய் 2
உள்ளி 1பல்லு
தேங்காய்ப்பூ 1 கைப்பிடி
பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1டீஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு




1.பீன்ஸ் ஐ மெலிதாக அரிந்து கொள்ளவும்.

2.பீன்ஸை மூடுமளவு தண்ணீர் விட்டு உப்பு மஞ்சல் சேர்த்து வேக வைக்கவும் .

3.தண்ணீர் வற்றி பீன்ஸ் வேகியதும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள வெங்காயம் ,செத்தல் மிளகாய் பெருஞ்சீரகம் ,தேங்காய்ப்பூ ,கருவேப்பிலை,பூடு
எல்லாவற்றையும் போட்டு மெல்லிய நெருப்பில் கிளறி விட்டு இறக்கவும்.




மிகவும் சுவையான நேரத்தை சிக்கனப்படுத்தும் சுலபமான பீன்ஸ் சுண்டல் சோற்றுடன் சாப்பிட ரெடி.



ஈஸி வாழைக்காய் பஜ்ஜி



தேவையானவை

வாழைக்காய்  2
கடலை மா 1 கப்
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு



செய்முறை

1.வாழைக்காயை தோல் நீக்கி படத்தில் காட்டியதுபோல் மெலிதாக சீவிக்கொள்ளவும்

2.  கடலைமா , தனிமிளகாய்த்தூள்,உப்பு மூன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசைமா பதத்திற்கு குழைக்கவும்.

3. எண்ணெய் கொதித்ததும் வாழைக்காயை இந்த கலவையில் முக்கி எடுத்து பொரித்து எடுக்கவும்.

மா உப்பியது போல் வாழைக்காய் தெரியாமல் மூடி இருந்தால் சரியாக செய்து விட்டீர்கள் என்று கொள்ளவும்


வாழைப்பூ பக்கோடா

தேவையானவை

வாழைப்பூ 1
மைதா மா 1 கப்
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 5
பெருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்





செய்முறை

1.வாழைப்பூவை எடுத்து முற்றிய இதழ்களை களைந்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக படத்தில் காட்டியது போல் செய்யவும்

2.கட்டிங் போட் ல் வைத்து மெலிதாக அரிந்து உப்பு சேர்த்து அலசி கழுவி வடித்து எடுத்துக்கொள்ளவும்.

3. காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் , பெரிய வெங்காயம்  என்பவற்றை நறுக்கவும்.



4. பெருஞ்சீரகம் கருவேப்பிலை,உப்பு ,  மைதா மா எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும் .



5..இப்போது எண்ணெய் சூடாகியதும் கையால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும் .

மிகவும் சுலபமும் சுவையானதுமான பகோடா ரெடி






ஆப்பிள் ரோஸ்


சுலபமானதும் வீட்டு விஷேசங்களுக்கு  ஏற்றதும் பார்வைக்கு அழகாகவும் இருக்கக்கூடிய ஒரு டிசேர்ட் இந்த அப்பிள்ரோஸ்
செய்முறை

தேவையானவை

ஆப்பிள் 3
puff pastry sheet 1
லெமன் பாதி
கோன் சிரப் அல்லது தேன் அல்லது ஜாம்





செய்முறை

1.அப்பிளை [2]கழுவி குறுக்காக பாதியாக வெட்டி விதைகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்

2.மிகவும் மெலிதாக அரிந்து கொள்ளவும்

3.அரிந்த அப்பிளை மைக்ரோவேவ் ல் வைக்க கூடிய ஒரு பாத்திரத்திற்குள் போட்டு பாதி லெமனை பிளிந்து 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் ல் வைக்கவும்

4.இப்போது அதற்குள் உள்ள நீரை வடித்து அப்பிளை எடுக்கவும்

5.puff pastry sheet ஐ 6 துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை எடுத்து கோன் சிறப்,அல்லது விரும்பிய ஜாம் ஏதாவது சீட் ல் பூசவும்

6.அப்பிள்களை படத்தில் காட்டியதுபோல் வரிசையாக அடுக்கி சுற்றவும்.

7. கப் கேக் ட்ரே யிற்குள் வைத்து 350 ல் 20நிமிடங்கள் பேக் பண்ணி எடுக்கவும்




கோவக்காய் பொரியல்


தேவையானவை

கோவக்காய் கால் கிலோ...
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் பொரிக்க





செய்முறை
1.கோவக்காயை கழுவி சுத்தம் செய்து 2 முனைகளிலும் உள்ள கருப்பு புள்ளியை வெட்டி அகற்றவும்.

2.குறுக்கு வெட்டாக 2 ஆக பிளந்து வரி வரியாக மேலும் சீவல்களாக்கிக்கொள்ளவும்.

3.இப்போது உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு பக்கமாக 10 நிமிடங்கள் வைக்கவும்.

4.எண்ணெயை சூடுபண்ணி பொரித்து எடுக்கவும்.




கோவக்காய் உணவில் சேர்ப்பதன் நன்மைகள் தெரிந்தவர்கள் நிச்சயமாக அடிக்கடி சேர்த்துக்கொள்வார்கள் .நீரழிவு நோயாளர்களுக்கு மிகவும் உகந்தது.
கியூக்கும்பர் ,சுரைக்காய், போன்ற நீர்த்தன்மை வாய்ந்த காய்கறிகளின் குடும்பத்தை சேர்ந்தது என்பதால் அவற்றிற்கே உரிய சிறப்புடன் உடல்சூட்டை தணிக்கவும்
சில நுண் கிருமிகளை யூரினுடன் வெளியேற்றவும் வழிவகுக்கும்.
பொரியல் செய்து உண்ணும்போது கூட அதிக சத்துக்களை இழக்காமல் நன்மையே தரும் .
உப்பு ,மிளகாய்த்தூள் கலவையை விரைவில் தன்னகத்து உறிஞ்சிக்கொள்வதால் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...