Tuesday, 7 February 2017

வாழ்வும் வளமும்

எல்லோருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் நின்மதியாகவும் வாழவே ஆசை. இருப்பினும் பலருக்கு அது வெகு தூரமாகவே இருக்கிறது.
சிலருக்கு பிரச்சனைகள், துன்பங்களுக்குரிய நியாயமான காரணங்கள் இருந்தாலும் பலர் தாமே சேகரித்து மீளத் தெரியாமல் சிக்கி உழல்கிறார்கள்.
அதற்கான பல காரணங்களில் ஒன்று மகிழச்சியும் நிம்மதியும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதும்,
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்மை சார்ந்தவர்கள் கெடுக்கிறார்கள் என நினைப்பதும் ஒரு பிரதான காரணம்.
இந்த மாயையில் சுலபமாக மாட்டிக்கொண்டு தங்கள் நிம்மதியை தாமே கெடுத்துக்கொள்பவர்கள் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள்.
இவர்களது தலையாய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால் மாமியார் சரியில்லை, என் குடும்பத்தை மதிப்பதில்லை, நான் எவ்வளவுதான் குடும்பத்திற்காக உழைத்தாலும் எனக்கு தேவையான மதிப்பு அளிப்பதில்லை,
தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள், என்னை குற்றம் சொல்கிறார்கள், எனக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, பெண்களை இந்த சமூகம் ஊதாசீனப்படுத்துகிறது, வீட்டிற்கு தலைமை வகிக்கும் ஆண்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள், வீட்டு வேலைகள் குழந்தைகளை பராமரிப்பதில் எனக்கு யாரும் ஒத்தாசை செய்வதில்லை ஆனால் குறை சொல்வதற்கு முன்னிற்கு நிற்கிறார்கள், என் உடல் நிலையையும் சோர்வையும் ஏறிட்டு பார்ப்பதில்லை என் ஆசைகளை நிராகரிக்கிறார்கள் இவைகள்தாம் நம்மில் அனேகமானவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.
ஆனால் இவை எல்லாம் நாம் முன்னெடுக்கும் செயல்களாலும், சிந்தனைகளாலுமே நமக்கு இது பிரச்சனைகளாக விஷ்வரூபம் எடுக்கிறது. குறிப்பாக நம் பெண்கள் அனேகர் இங்கு கூறப்பட்ட அனேகமான பிரச்சனைக்குள்
திக்குமுக்காடுவதற்கு மூல காரணம் பொருளாதார ரீதியிலும், இன்ன பிற தேவைகளிலும் சார்ந்து வாழுதல். இதிலிருந்து மீள ஆண்களுக்கு சரியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதல்ல. மிக மிக குறைந்த வருவாய் வீட்டில் இருந்த படியே கூட சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொழுது போக்காக சிறு கைத்தொழில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வளவு படித்து விட்டு இதை செய்வதா என்று எண்ணக்கூடாது. சரி அதற்கும் நம் சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு செலவாகும் சில பொருட்களையோ காய்கறிகளையோ நாமே தயாரிப்பது மிகச்சிறந்த வழி. இதற்கு கணவர் அதிகம் சம்பாதிக்க அல்லது பிஸ்னஸ் ல் இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்து சிரமப்பட வேண்டும் என்று நினைக்க கூடாது. தனித்து செய்யக்கூடிய
சில பயணங்கள் கொள்வனவுகள் வெளிவேலைகளை நாமே செய்து கொள்வது நமக்கும் குடும்பத்திற்கும் பக்க பலம்.
Blog image
அடுத்து நம் பாதிப் பிரச்சனைகளை தூக்கி முழுங்கி நம்மை அறியாமல் நம் பிரச்சனைகளை நீக்கும் ஒரு அருமருந்து பொழுது போக்கு. ஆம் சிலர் அவர்கள் இப்படி சொல்லி விட்டார்கள் இவர்கள் இப்பிடி சொன்னார்கள்
ஒரே கவலையாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை என்பார்கள். மறக்க வேண்டுமா எதுவுமே வேண்டாம் ஒரு தக்காளியை நட்டு வையுங்கள் அது உங்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும். அதன் வளர்ச்சி உங்களோடு பேசும். அழகான ஒரு பூ செய்து மேசையில் வைத்துப்பாருங்கள் உங்கள் பார்வை அடிக்கடி அதில் மோதும். சமையலில் ஏதாவது மாற்றம் செய்து அழகு படுத்தி பாருங்கள் யாரும் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை உங்களுக்கே ஒரு பெருமிதம் தோன்றும். ஆகவே நல்ல பொழுதுபோக்குகளை உங்கள் சூழ்னிலைக்கு ஏற்றால்போல் தேர்ந்தெடுங்கள் அது உங்கள் கவலைகளை வாங்கிக்கொள்ளும்.
எல்லாவற்றையும் விட நம் சிறு சிறு பிரச்சனைகளையும் பெரிதாக நம்மில் திணிக்க வைக்கும் ஒரு விடயம் நம் புலம்பல்கள் என்பது பலருக்கு தெரியாது. அதாவது கவலைகள் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடைவீர்கள் என்று
சொல்லப்படுவது நோய், மரணங்கள், இழப்புகள் என்பவற்றைத்தான் உங்கள் குடும்பத்தில் நாளாந்தம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளோ குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளோ அல்ல.
இதையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களிடம் புலம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பிரச்சனைகளில் நீங்கள் மூழ்கிப்போய் நிம்மதி இழப்பீர்கள். அதாவது உங்களை அறியாமலே மறக்க வேண்டியதையும்
தூக்கி போட்டு கடந்து போக வேண்டியதையும் அநியாயத்திற்கு மீள்பதிவு செய்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அவ்வாறு உங்கள் சகாக்களுடன் பேசும்போது அவர்களும் அவ்வாறுதான் பேசப் போகிறார்கள். அப்படியாயின் உங்கள் சக நண்பி சொல்கிறார் என் கணவருக்கு எப்போதும் சாப்பாட்டில் குறை சொல்வதே வேலை. எரிச்சலாக வருகிறது என்று கூறுவாராயின் நீங்களும் அதே தலைப்பில் நிச்சயம் இணைந்து கொள்வீர்கள். இவ்வாறான பேச்சுக்கள் ஆரோக்கியம் அற்றவை. உங்கள் கணவர் காது பட அவரைப்பற்றி நல்லதாக அடுத்தவர்களிடம் சொல்லிப்பாருங்கள். ஏன் உங்கள் கணவரை நேரடியாகவே பாராட்டுங்கள் என்ன என்ன நல்ல குணங்கள் உள்ளதாக சொல்கிறீர்களோ அந்த குணங்கள் இல்லாவிட்டாலும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய நின்மதியை கொடுக்கும். குடும்ப உறுப்பினர் யார் குறையையுமே சொல்லிக்காட்டாதீர்கள்.
நம்மிலும் பல குற்றம் குறைகள் இருக்கவே இருக்கும் பதிலுக்கு நம்மை நின்மதி இழக்கச்செய்து விடுவார்கள்.பொது விடயங்கள் பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் பற்றிய பேச்சுக்கள் கேள்விகள் சுவாரஸ்யமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் விரும்பி ரசித்து செய்து விட்டு நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். யாரும் நமக்கு உதவ வேண்டும் எதையாவது வழங்க வேண்டும் ஒத்தாசை செய்தே ஆக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் முடிந்தளவு நாமே பொறுப்பாக இருக்கும்போது சிரமப்பட்டாலும் நாளடைவில் அதில் மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.
Blog image
கிடைப்பதை மாற்ற முடியாததை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின்னும் நண்பர்களை இழப்பதில்லை நாம் மட்டும் இழக்க வேண்டி இருக்கிறதே என்று ஆண் வர்க்கத்தை சாடாதீர்கள்.
அதைவிட சந்தோசமாக குழந்தைகளுடன் கூடி மகிழும் பாக்கியத்தை கடவுள் பெண்களுக்கே அதிகம் தந்திருக்கிறான் என்று மகிழுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின் ஊரையும் குடும்பத்தையும் வளர்ந்த வீட்டையும்
பிரிவதில்லை நம்மை மட்டும் வேரோடு பெயர்க்கிறார்கள் என்று வருந்தக்கூடாது. நமக்கு மாறுபட்ட வாழ்வு மாறுபட்ட இடங்கள் மாறுபட்ட மனிதர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று
ஆனந்தப்படுங்கள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கு செல்வதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் இந்த பிரிவையும் ஏற்றுகொள்ள முடியும். நிறைய ஆண்கள் திருமணத்திற்கு
முன்பே பொருளாதார நிமித்தம் பிரிகிறார்கள்.
இவை எல்லாமே நம்மை நாமே நிம்மதியாக வைக்க உதவும். நம்மைப்பற்றி நாமே அக்கறை கொள்ளாமல் மறைமுக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அடுத்தவர்களை சாடுவது தவறு. பெண்களுக்கான உரிமை
பெண்களிடம்தான் உள்ளது. மீறி நடக்கும் தவறுகளும் கேடுகளும் அசம்பாவிதங்களும் தவறானவர்களால் நடக்கிறது. ஆண்கள் எல்லோரும் ஆதிக்க வாதிகள் கிடையாது. அப்பாவின் தியாகங்களை போற்றியும் கணவனை
குறை சொல்லியும் வாழ்ந்துவிட்டு திரும்பிப்பார்த்தால் கால ஓட்டத்தில் நம் பிள்ளைகள் தங்கள் அப்பாவை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்போது உணர்வதை விட இப்போதே உணர்ந்தால் வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Saturday, 4 February 2017

under construction



கிட்ஸ் யூ ட்யூப் தவிர நான் இன்னும் ப்ளாக் ல் ப்ளாக் கு என புதிதாக எதையும் எழுதவில்லை.கொப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் .( ஒவொரு மனநிலையில் எழுதிய வரிகள் வாசிக்கும் போது அதே மொமெண்ட் க்கு மறுபடி செல்கிறேன்

அதனால் எதையும் அழிக்க தொலைக்க விருப்பமில்லை
.
முதலில் சிதறிக்கிடக்கும் என் பழைய பதிவுகளை இங்கு இணைத்துவிட நினைக்கிறேன்.100 பதிவுகளுக்கு மேல் வருகிறது அதனால் உங்கள் லிஸ்ட் ஐ நிரப்பி நிச்சயம் உங்களுக்கு இடையூறு பண்ணும் என்றே நினைக்கிறேன்.

அதனால் என் பக்கத்தில் இருக்கும் எண்பதாயிரம் {8}நல்லுள்ளங்களையும்  என்னை தற்காலிகமாக 1 நாள்  சண்டே}அன்பலோ பண்ணிவிட்டு மீண்டும் பலோ பண்ண முடியுமா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Friday, 3 February 2017

ஞாபக சின்னங்கள்.


நாம் எல்லோருமே சின்ன வயசில் விளையாடிய பொருட்களை தொலைத்தாலும் அந்த ஞாபகங்களை தொலைப்பதில்லை.
காரணம் சிறு வயது ஞாபகங்களுக்கு இணையில்லை என்பதை நம் சுமை மிகுந்த வாழ்வு சுட்டி நிற்பதே.

...
எத்தனை வயதானாலும் நம் அன்புக்குரியவர்களின் அதை சொல்லி சொல்லி பூரித்து போகும் செயல் இந்த உலகில் யாரையும் விட்டு வைப்பதில்லை.
அப்படியிருக்க ஏதாவது வித்தியாசமான குறும்பு படங்களோ,ஞாபக சின்னங்களோ கையில் கிடைத்து விட்டால் போதும் .அதை வைத்து அந்த வயசுக்கே போய் விடுவது மனித இயல்பு.
நம்மை சார்ந்தவர்களுக்கு அதை காண்பித்து கதை பேசியே மாய்வோம். பாவம்தான் அவர்கள் அதற்காக விட முடியாது.நம் சந்தோசத்தை திணித்தே திணறடிப்போம்.


அந்த வகையில் நம் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த நல்ல ஞாபக சின்னங்களை கொடுப்பது மிகவும் நல்லதும் மகிழ்விக்கக்கூடியதும்.நம்மை பெருமைப்படுத்தக்கூடிய ஒன்றும் ஆகும்.
அதில் ஒன்றுதான் குழந்தைகளில் கால் பதிவு,கை பதிவு போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்தி அவர்கள் வளந்ததும் கொடுப்பது.
இதற்கென கிராவ்ட் கடைகளில் ஒரு விதமான கிளே விக்கும் அதை வாங்கி கூட செய்யலாம்.

முடியாவிட்டால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் கிராவ்ட் பெயிண்ட் ல் அடையாளம் எடுத்து பதிவு செய்து திகதி ஆண்டு குறிப்பிட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.



கூடவே நம்முடையை கை ,பாத அடையாளங்களுக்கு பக்கத்தில் அவர்களுடைய பிஞ்சு கை,பாத அடையாளங்களை வைக்கும்போது மிகவும் அழகாக இருக்கும்.


மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றில்லை.இது என் முயற்சிகள் . நீங்களும் குழந்தைகளின் ஒத்துழைப்புடன் செய்து பாருங்கள்.




2. அடுத்து அவர்கள் முதல் முதல் பாவித்த பொருட்களை இங்கு படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்து வைக்கலாம்
நான் கடிதமும் கவிதையும் எழுதி இதற்குள் ஒளித்தும் வைத்திருக்கிறேன்.
என் காலத்தின் பின் அவர்களுக்கு விட்டுச்செல்ல நினைக்கிறேன்.
என் அன்பு, சந்தோஷம் ,புத்திமதி, கண்ணீர், வீரம் எல்லாவற்றையும் கலந்தே இதைசெய்து வைத்திருக்கிறேன்
அவர்களுக்காக பொருளும் பணமும் சேர்த்துக்கொடுத்தாலும் அது எப்போதும் பொதுவானதும் அடையக்கூடியதும் அவர்களும் தேடிக்கொள்வார்கள்.
ஆனால் இவ்வாறான சில சிறுவயது ஞாபகங்கள் அவர்களுக்காக பெற்றோர் நம்மால் மட்டுமே பதிவு செய்து கொடுக்க முடியும்.


அன்புக்கூடம்


இந்த பொருளுக்கு இதுதான் இடம் என்றும்
இந்த இடத்திற்கு இதுதான் பொருள் என்றும் வீட்டில் பொருட்களை தெரிவு செய்து நேர்த்தி செய்தால் தேட வேண்டிய தேவையும் இருக்காது வீடும் அடிக்கடி கலையாது.

இது எனக்கு என் கணவர் கற்றுத்தந்த பாடம் இன்று வரைக்கும் நான் தேடிய பொருட்கள் குறைவு.கடையில் ஏதாவது பொருட்களை வாங்க முற்படும்போது  தடுத்து
இதை எங்கே வைக்க போகிறாய் ? என ஒவ்வொரு தடவையும் கேட்டு  என்னை சிந்தித்து வாங்க வைப்பார்.

அத்தோடு 4 மக் வாங்கினால் ஏற்கனவே நிறைய காலமாக இருக்கும் மக் 4 ஐ டொனேட் பண்ணவோ குப்பையில் போடவோ  சொல்வார்.

ஷோ கேஸ் வாங்கி அது நிறைய அழகு பொருட்களை அடுக்குவது எல்லோரும் செய்வது .அதை நான் வாங்க முற்பட்ட போது ஷோ கேஸ் ஐ சட்டென்று தூக்கி வீச முடியாது வைத்தால் வைத்ததுதான்
வருசக்கணக்கா அந்த ஸ்டைல்லயே வீட்டை வச்சிருக்க போறியா ? என்ற ஒரு கேள்வியில் சிந்தித்து அதை  வாங்காமல் விட்டேன்
.
அதன் பலன் இன்று சீசன் க்கு ஏற்றால் போல் வீட்டு ஹால் ஐ மாற்றி விடுவேன் .
பிள்ளைகளுக்காக சிலதை அகற்ற வேண்டியும் உயரத்தில் வைக்க வேண்டியும் வந்தபோது மாறி மாறி வைத்து  கிளீனிங் செய்தும் தேடியும் களைத்து ஒரே டென்ஷன்  ல் கழிந்தது கொஞ்சநாள்.
நிறைய நிலையான பொருட்களை வாங்கி சேர்க்காத காரணத்தால் அதையும் சரி செய்யக்கூடியதாக இருந்தது.

அவ்வாறு மாறியதுதான் பிள்ளைகளுக்காக ஆசை ஆசையாக செய்து கொடுத்த  இந்த நர்சரி.

ஒரு ரூம் ஐ அவர்களுக்காக ஒதுக்கி அவர்களை விளையாட அனுமதிப்பதை விட ஹால் ஐ இவ்வாறு செய்து விட்டால் மொத்த பமிலியும் சேர்ந்து விள்ளாடலாம்.

பின்னாளிலும் அவர்களுக்கு இது ஒரு நல்ல நினைவுகளாக அமையும்.

இங்கு அதிகாலைச்சூரியன் அந்திமாலை சந்திரன் எல்லாம் நம்முடன் விளையாடத்தவறியதில்லை. {படம் ஒன்றில் சண் அடோராவை கொஞ்சிங் கொஞ்சிங்}





வளையல் ட்ரீ


க்றிஸ்மஸ் க்கு LED twig tree செய்ய ரோட்டோரம் வெட்டி இருந்த மரத்தில் இருந்து இந்த கிளையை எடுத்து வந்தேன்.


ஆனாலும் இந்த க்றிஸ்மஸ் அவ்வளவு அவகாசம் கொடுக்கவில்லை.

அதன்பின் இந்த கிளையை தூக்கி போடாமல் சும்மா வீட்ல வச்சிருந்ததால வீட்டை குப்பையாக்குவது யார் ????எனும் தலைப்பில் குடும்பத்தில் பிரச்சனை வர தொடங்கிவிட்டுது.

அதனால பாக்ஸ் பாக்ஸ் ஆ இந்தியாவில் வாங்கி கொண்டு வந்த வளையல்களில் சில பங்கை எடுத்து இந்த மரத்தை தளைக்கச்செய்து விட்டேன்.



ஐடியா நம்பர் 1 பிடித்துக்கொள்ளுங்கள்.



ஐடியா நம்ப 2 கிவ்ட் பேப்பர் முடிந்ததும் கிடைக்கும் ரோல் ஐ எடுத்து நம்முடைய ட்ரோவர் க்கு அளவாக வெட்டி இவ்வாறு வரிசையாகவும் அடுக்கி வைக்கலாம்.



பேக்ட் கட்லட் பஜ்ஜி


தேவையானவை
மிளகாய்கள் 6
மீன்  வேக வைத்து முள்ளு நீக்கியது கால் கிலோ
வெங்காயம் 1
முட்டை 2
பச்சை மிளாகாய் அல்லது காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் அல்லது பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
டுத் பிக் 12





1.மிளகாயின் தலைப்பகுதியை வட்டமாக வெட்டி எடுக்கவும்



2. சிறிய கத்தியை உள்ளே விட்டு வட்டமாக சுழற்றி மிளகாயின் விதைகளை வெளியே எடுக்கவும்


3. மீன் தசைக்குள் வெங்காயம் ,உப்பு,மிளகாய் ,சிறிதாக அரிந்த கொத்தமல்லி  என்பவற்றோடு முட்டையையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்

4.மிளகாய்க்குள் மீன் கலவையை வைத்து வெட்டி வட்டமாக வெட்டி எடுத்த மிளகாய் பகுதியை மறுபடியும் வைத்து டுத் பிக் சொருகி இணைக்கவும்.



5.ட்ரேயில் வைத்து எண்னெய் அல்லது பட்டர் தடவி 400 பாகை பரனைட் ல் 15 நிமிடங்கள்  பேக் பண்ணவும்



ம்ம்ம் ஜம்மி

Thursday, 2 February 2017

இறால் கார சாலட்


தேவையானவை
romaine salade 1
தக்காளி 1
காரட் பாதி அளவு
கியூக்கும்பர் பாதி அளவு
இறால் 1 கிலோ
வெங்காயம் அரை கிலோ
கொத்தமல்லி 1 கட்டு
மஞ்சல் ஒரு டேபிள் ஸ்பூன்
தனிமிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளாகாய் 2 விரும்பினால் 
உப்பு




செய்முறை
இறால் பிரட்டல்
1.இறால் ஐ சுத்தம் செய்து உப்பு மஞ்சல் மிளகாய்த்தூள் சேர்த்து வைக்கவும்
2.சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லியை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3.அதற்குள் தயாராக வைத்திருக்கும் இறாலை சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் விடவும்
4. நீர் வற்றி இறால் வேகியதும் இறக்கி ஆற வைக்கவும்


சாலட்
1.காரட் ஐயும் கியூகும்பர் ஐயும் துருவி ,தக்காளியையும் சாலட் ஐயும் அரிந்து கொள்ளவும்

இப்போது ஆறிய இரால் ஐயும் சாலட் ஐயும் சேர்க்கவும்.
மிகவும் சுவையான காரமான இறால் சாலட் ரெடி.





பேக்ட் கத்தரிக்காய்


படங்களை பார்க்க உங்களுக்கு புரிந்து விடும் அளவுகள் தேவையில்லை ஆனாலும் சட்டத்தை மீறக்கூடாது என்பதற்காக அளவுகள் கொடுக்கிறேன்.
தேவையானவை 
பெரிய கத்தரிக்காய் 1
ஏதாவது ஒரு வகை சீஸ் 50 கிராம்
சுக்கினி 1
தக்காளி 1
கீரை கொஞ்சம்
வெங்காயம் 2
உள்ளி 4


1. கத்தரி,வெங்காயம் ,உள்ளி,தக்காளி,சுக்கினி,கீரை,எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொள்ளவும் .
2.சுக்கினி ,தக்காளி ,வெங்காயம் என்பவற்றை வட்டமாக வெட்டவும்


3.foil paperற்கு எண்ணெய் தடவி அதில் கத்தரிக்காயை வைக்கவும் 
4..இப்போது எல்லா காய்கறிகளையும் சீஸ் ஐயும் கத்தரிக்காயின் வெட்டிய இடைவெளிக்குள் அடுக்கவும்.


5.உப்பு சேர்த்து கொஞ்சம் எண்ணெய் பூசவும்.{ நான் கோக்கனட் ஒயில் யூஸ் பண்ணுவேன் அதுதான் பிரிஜ் ல் இருந்து எடுத்த கத்தரியில் பட்டதும் உறைந்து விட்டது.}


6..மீண்டும் foil paper ஆல் மூடி 400 பாகை வெப்பநிலையில் 30 நிமிடம் பேக் செய்யவும்.



விரும்பினால் பிரஷர் குக்கருக்குள் வைத்து மூடி கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் வேக வைக்கலாம் {தண்ணீர் அதிகம் அதிகம் சேர்க்க தேவை இல்லை .காய்கறிகளில் இருந்தும் தண்ணீர் வரும்.}
10 நிமிஷம் போதும். ரெம்ப வாசனையாகவும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் .
எனக்கும் ப்ரஷர் குக்கருக்கும் பழைய பகை அதனால் அவன் {oven} ல் செய்தேன்.


Brass tea pot /turkish pitcher


கடந்த மாதம் 10 ஆம் திகதி நமக்கு திருமணநாள் வந்தபோது வழக்கமான எந்த ஆரவாரமும் இல்லாமல் கப் கேக் (கேக் ஒரு சிறிய துண்டுக்கு மேல் யாரும் சாப்பிடாமல் 
குப்பைக்கு போவதை தடுக்க இப்படி செய்வோம்} செய்து வெட்டி இத்தாலியன் ரெஸ்ரோரண்ட் சென்று கொண்டாடிவிட்டு நிறைவு செய்ய இருந்தோம்.
எப்போதுமே வீட்டில் கொண்டாடி விட்டு எங்காவது பிக்னிக் சென்று அங்கேயே தங்கி வருவோம். முக்கியமாக அனிவேஸ்ரி நாளில் யாரையும் வீட்டுக்கு அழைக்க மாட்டோம்.
ஆனால் அன்று கதவில்
டொக் டொக் டொக்
டி வி யில் பார்த்தேன் .நமக்கு மிகவும் பிடித்த அயலவர்களான தாத்தாவும் பாட்டியும் நின்றிருந்தார்கள்.எப்பவாச்சும் என் பிள்ளைகளை பார்க்க வருவார்கள் ஆனால் இன்றுதான் சொல்லாமல் வந்திருந்தார்கள்.
கதவை திறந்தேன் .
உள்ளே வந்து என் கணவரையும் கூப்பிட்டு இருவரையும் ஆசீர்வதித்து இந்த brass tea pot /turkish pitcher ஐ எங்கள் கைகளில் கொடுத்தார்கள்.


பாட்டிக்கு 88 வயசு தாத்தாவிற்கு 89 வயசு. பெரிய வீடுகளை பிள்ளைகள் கையில் ஒப்படைத்து விட்டு நாங்கள் இருக்கும் பிளாட் ல் ஒரு ரூம் உள்ள வீடு வாங்கி தங்கி இருப்பதோடு அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.
கவர்மண்ட் ஆல் நிறைய உதவியும் கிடைக்கிறது.அதிக ஸ்னோ காலங்களில் சமூக சேவை செய்வோர் வந்து சொப்பிங்க் செய்து கொடுக்கிறார்கள்.
ஹாஸ்பிட்டல் க்கு அவர்களுக்குரிய வாகனம் வந்து கூட்டி போய் மறுபடி கொண்டு வந்து விடுகிறார்கள்.அழகாக ஆடை அணிவார்கள்..அன்பாக பேசுவார்கள் .
என் இரண்டாவது மகள் வயிற்றில் இருக்கும்போது என்னோடு பேசுவது போலவே அவளோடும் பேசுவார் இந்த ஜான் பாட்டி.
இப்படி வாழவேண்டும் என என் சகோதரிகளை மட்டுமே பின்பற்றும் எனக்கு இப்போதெல்லாம் இவர்களும் ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்கள்.
மிகவும் சந்தோஷமான தம்பதிகள் .இப்போதும் அதே சந்தோஷத்தோடு தங்கள் அந்திம காலத்திற்கு அடுக்குப்பண்ணுவதுதான் எனக்கு அடிக்கடி வயிற்றைக் கலக்கும்.
அந்த வகையில் தான் இதை நமக்கு திருமணநாளை ஜாபகம் வைத்து பரிசாக கொடுத்தார்கள்.
அதாவது தாங்கள் பலகாலங்களாக கட்டிக்காத்த இவ்வாறான பொருட்களை மிகவும் பிடித்தவர்களுக்கு விட்டுச்செல்வதாக கூறுகிறார்கள்.
இந்த brass tea pot /turkish pitcher அவர்கள் வீட்டில் கம்பீரமாக அழகாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.
இவாறான ஒரு pitcher என் அண்ணன் ஒருவன் துருக்கி க்கு வக்கேஷன் போனபோது வாங்கி வந்தும் பார்த்திருக்கிறேன்.
சரியான பெயர் தெரியாமல் கேக்கவும் சங்கடப்பட்டு அவர்கள் தந்துவிட்டு போன பின் போட்டோ எடுத்து கூகிள் ல் search by image இல் அப்லோட் பண்ணி இதன் விபரங்களை பார்த்தேன்.
வீட்டில் உள்ள திருநீறைக்கொண்டு கழுவினேன் பொலிஷ் பண்ணும் மருந்து தேடிக்கொண்டு இருக்கிறேன்.
மிகவும் அழகாக இருக்கிறது .அவர்கள் நினைத்தால் ஒன்லைன் ல் இதை விற்று விடலாம் அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொடுக்கலாம் 
 ஆனாலும் தாம் நேசிப்பவர்களையும் மதித்து அவர்களோடு தங்கள் நினைவுகளை பதிய வைத்து செல்ல நினைக்கும் அழகும் அன்புள்ளமும் எனக்கு
மிகவும் பிடித்து போய்விட்டது.
அவர்களுக்கு முன்னே போகிறேனோ பின்னே போகிறேனோ ஏதோ ஒன்ற கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்



அதிசயங்கள்

இன்று எவ்வளவோ செலவு செய்து சீன சுவரையும் ஈபிள் டவரையும் உலக அதிசயங்கள் என்று நம் பிள்ளைகளிடம் காண்பித்துக்கொண்டிருந்தாலும் எந்த செலவுமின்றி நம் அம்மாக்கள் நமக்கு காட்டிய 
 ஒரு கோழிமுட்டைக்குள் இரண்டு கருவும்,குழம்பு வைக்க வாங்கிய {மீன் வயிற்றுள் } மீனை மீன் விழுங்கிய குட்டி மீனும் என்றும் 
 நம்மை கொள்ளை கொண்ட அழகான அதிசயங்களே



போராட்டம்




எனக்கும் ஈழத்தில் மிக சிறிய வயதில் ஊர்வலங்கள், உண்ணா விரதங்கள், போராட்டங்கள் என்பவற்றில் பங்கு கொண்ட ஏராளமான அனுபவங்கள் உண்டு.
நம்ம்மீதான அடக்குமுறைகளையும் உயிர்ப்பலிகளையும் இந்த உலகம் மூடி மறைக்கும் போது நமக்காக போராடியவர்கள் மட்டுமல்ல தீயில் கருகி உயிரையும் கொடுத்தவர்கள் இவர்களே.
உணர்வுடன் தெருவில் இறங்கி மனிதச்சங்கிலி நடத்தியவர்கள்.
ஆம்
அடுத்தவர்களை சாடுதல் விடுத்து
தம் மதிப்பு உணர்ந்து 
தலைமையை எதிர்பார்க்காமல் 
கொதித்து எழுந்தார்கள் இன்று
புகழ்வாய்ந்த சினிமா நடிகர்களை விட மேலானவர்கள் 
நல்வாழ்க்கை வாழும் சாதாரண மக்களாகிய தாமே என்பதை
புரிந்து கொள்ளாமல்,
தொழிலுக்காக நடிப்பவர்களை
தலைவன் என்றும் ,எடுத்துக்காட்டாளன் என்றும்
வாழ்க்கையில் மேன்மை வாய்ந்தவர்கள் என்று நினைப்பதுவும்
அவர்களுக்காக சக மனிதர்களுடன் மல்லுக்கட்டுவதுமான
எண்ணங்கள் இன்று தகர்ந்தது.
சுதந்திரமில்லாத போது அதற்காக உயிர் கொடுத்து போராடி அதை பெற்றவர்கள்.
சுதந்திர நாட்டின் உரிமைகளுக்கு போராட்டங்களை முன்னெடுக்காமல்
மேடை போட்டு பேசிக்கொண்டே இருப்பதும்
முக்கியமாக இலவச கல்விக்காக மாணவ சக்தியை பயன்படுத்தி 
எந்த எதிர்ப்பும் காட்டாமல் தம்மை வருத்துவதும். 
போராட்டம் என்றால் தீக்குளிப்பது என்று தீர்மானிப்பதும் 
இன்று தொலைந்தது.
.மக்கள் சக்தியை பயன்படுத்தி 
சமூக சேவைகள் செய்து உலகம் வியக்கவும்
எங்கோ வாழும் நம் கண்கள் குளமாகும்படியும்
ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்துவிட்டு
ரஜனி என்ன செய்தார்?விஷால் உதவி செய்ய்வில்லை என
சில்லி தனமாக பேசி
அவர்களை எல்லாம் தம்மை விட பெரிய மனிதர்கள் ஆக்குவது.
இன்றுடன் முடிந்தது.
(ஆம் களத்தில் இருந்து போராடும் நீதான் நாட்டின் பெரிய மனிதன்.பசியில் அழும் குழந்தையை நேரில் கண்டு மனமிரங்கி நீ பாலுக்கு செலவு செய்த 10 ரூபாய்தாய் மிகப்பெரிய தொகை.
இதில் அவர்களை எல்லாம் எதற்கு நடிக்க அழைக்கிறாய்???)
.
அரசியல் வாதிக்கு
செய்கையில் பயத்தை கொடுத்து படிய வைக்காமல் 
அவர்கள் எண்ணம்போல் ஆள அனுமதி கொடுப்பதும் விலைபோவதும்
இன்றுடன் ஒழிந்தது
.தங்கள் கருத்தை அப்பட்டமாக ஆணித்தரமாக முன்னிறுத்துவதை விடுத்து
அயல் நாட்டு நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்??
நடிகர்கள் என்ன சொல்கிறார்கள் ??? 
அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என
வெறும் அபிப்பிராயங்களுக்கும்
தனிப்பட்ட கருத்துக்களுக்கும் ஆத்திரப்பட்டு உனக்கு உரிமை இருக்கிறதா??? பெருமை இருக்கிறதா என 
அடித்து நொருக்கி உருவ பொம்மை செய்து எரிப்பதும் 
இன்று இன்றிப்போனது.
.
இந்த மாணவர்களுக்காகவும் அவர்கள் மனம் துவண்டு போகாமல் 
மேலும் சாதிக்கும் எண்ணங்களை விதையிலேயே அறுபட்டு போகாமல் இருப்பதற்காகவாவது இந்த போராட்டம் தோற்று விட கூடாது என்று வேண்டுகிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்.

பூச்சி மருந்துகள்




பேஸ்புக் ல் எங்கு பார்த்தாலும் ஆளாளுக்கு இன்றுமுதல் பெப்சி வாங்க மாட்டேன் கோக் குடிக்க மாட்டேன் என்றும் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்வதை பார்க்கிறேன்.
அப்படி எல்லாம் சொல்வதை விட்டு இவற்றை ஒருதடவை வாங்குங்கள்.வாங்கி வந்து உங்கள் வீட்டு டாய்லட் ல் 1 கப் ஊற்றி விட்டு ஒரு மணித்தியாலம் விட்டு டாய்லட் ஐ கழுவி பாருங்கள்.
கழுவவே வேணாம் பிளாஷ் பண்ணும்போதே அம்புட்டு அழுக்கையும் அடித்து போய்விடும்.
நான் 10 வருஷத்துக்கும் மேலா கிளீன் பண்ண மட்டுமே வாங்குவதுமில்லாமல், பிள்ளைகளையும், பார்பிக்யூ மஷின்{barbecue machine} அவன் {oven}எல்லாம் கழுவும்போது பக்கத்தில் நின்று பார்க்க வைப்பேன்.
என் 4 வயது மகளிடம் ஒருநாள் கிச்சன் டொப் ல் இருந்த ஒரு கோக் கான் ஐ குடுத்து இதை வை அம்மா என்றேன். பிரிஜ் ல் வைப்பாள் என்று நினைத்தேன்.
பின்னர் பார்த்தால் கிளீன் பண்ணும் பொருட்கள் அடுக்கி வைக்கும் பாஸ்கட் ல் வைத்திருக்கிறாள்.
சோ இனிமேல் யாராச்சும் குடிக்க எடுக்கும் போது நீங்கள் குடிக்கபோவது டாய்லட் மருந்து என்பதை ஞாபக படுத்தினால் போதும்.
இதுக்கு பிறகுமா இதையெல்லாம் குடிப்பீங்க???????
உவ்வேக்
பூச்சி மருந்துகள் பற்றிய பதிவுகள் அனுபவங்கள் தொடரும்........
சுரேஜினி பாலகுமாரன்

வானம்பாடியின் சூர்யோதயம்

பெட் ல் படுத்தபடியே இந்த சூரியோதயத்தை தெளிவாக பார்க்க முடிந்தாலும் கூட , தூங்க போகமுன் அடுத்த நாளைய சூரியோதயம் சரியாக 
எத்தனை மணி எத்தனை நிமிசத்தில் தோன்றும் என்பதை பார்த்து வைத்துவிடுவேன்.ஸ்பெஷலி விடுமுறை நாட்கள்.
அந்த நாள் ரெம்ப உற்சாகமா ஆரம்பிக்கிற மாதிரியும் பார்த்த படியே பருகும் கோப்பி ரெம்ப ஸ்பெஷலா இருக்கிற மாதிரியும் ஒரு பீலிங்.
அதனால பொங்கலுக்கு ரெம்ப நன்றி உணர்வோட பொங்கி எடுத்துட்டு போனால் மிஸ்டர் சண் செம பிஸி போல.வானத்தில சிவப்பு கீறல்கள்தான் தெரிஞ்சுது.
எல்லா பொங்கலும் முடிச்சு வந்துட்டார்.
சரி கோப்பி ரெடி பண்ணிக்கொண்டு பார்ப்போம் என்றால் ஹஸ் எனக்கும் கோப்பி மஷின் ல் கோப்பி ரெடி பண்ணி சூடாக இருக்கும்படி வைத்து போயிருந்தார்.வழக்கம்போலவே ரசித்தேன்.
சோ ஏதோ ரெம்ப பிடித்தவர்களை மிஸ் பண்ணுற மாதிரியே இருக்கு இந்த மிஸ்டர் சண் லீவு போட்டால்.
இது இன்றைய க்ளிக்ஸ்








பொங்கல் அன்றும் இன்றும்

ஈழத்தில்
நான் பிறந்த ஊரில் பொங்கல் மிக அழகாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.சமையல் என்றால் அம்மாக்கள் என்றுதான் பார்த்திருப்பீர்கள் ஆனால் எங்கள் ஊரில் பொங்கல் என்றால் 
அப்பாக்கள் அண்ணன்கள்தான் பொங்கலுக்கு மெயின் காரக்டர்களாக விளங்குவார்கள்.ஆனால் அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ஓடி ஓடி அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேணும்.

கோலம் தமிழகத்திலும் இலங்கையின் சில மாகாணங்களிலும் வழக்கத்தில் இருந்தாலும் நாம் வசிக்கும் மாவட்டத்தில் மிக அரிது.ஆனால் பொங்கலுக்கு கோலம் போடுவோம்.அதுவும் ஆண்கள்தான்.உடனே பெரிய பெரிய வண்ணக்கோலங்களை
எல்லாம் நீங்கள் கற்பனை பண்ணினால் நான் பொறுப்பல்ல .


ஒரு பெரிய சதுர கோடு.அதையும் போட தெரியாது உலக்கை வைத்து தான் நேர் கோடு போடுவார்கள்.அந்த சதுரத்தில் ஒரு மூலையில் ஒண்ணாம் வாப்பு குழந்தைபோல சூரியன் வரைந்து வைப்பார்கள்.
அதன் நட்ட நடுவில் பொங்கல் வைப்பார்கள்.
மற்றும்படி எல்லாமே மாவிலை தோரணம் என சிறப்பாகவே இருக்கும்.நம்மூரில் பொங்கல் கொண்டாட யாரும் சமயம் பார்க்க மாட்டார்கள்.எல்லோரும் பொங்குவார்கள்.ஆனாலும் குடும்பத்தில் ஏதாவது இழப்போ ஏதாவது அசம்பாவிதங்களோ நடந்தால்
மட்டும் அந்த வருடம் பொங்க மாட்டார்கள்.
பொங்காத வீட்டுக்கு எல்லோரும் பாத்திரம் நிறைய நிறைய குடுப்பார்கள்.
பொங்கினவனை விட தண்டினவனுக்குதான் பொங்கல் அதிகம் கிடைக்கும் என்று அம்மம்மா சொல்லும் பழமொழியை போல பொங்காவிட்டால் நிறைய பொங்கல் கிடைக்கும்.
அப்போதெல்லாம் நெற்கதிர்களை உரசிவிட்டு வந்த சுத்தமான காற்று எங்களை தொட்டுச்சென்றது.சொந்தங்களின் குரலை கேட்க போன் தேவைப்படவில்லை . யார் வீட்டு கதவுகளும் எங்கள் வரவிற்கு எதிராக தாள் போடவில்லை. 
.கூடும் இடம் ,நலம் விசாரிக்கும் சந்திப்புக்கள் ,புன்னகை பரிமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் வாட்ஸ் அப் , வைபர் ,ஸ்கைப்,மெசஞ்சர் எதையும் நாங்கள் நம்பி இருக்கவில்லை.மழைத்துளிகளை படம் பிடித்து பேஸ்புக் ல் பதிவேற்றும் 
வேலை இருக்கவில்லை. எந்த அழகையும் ஸ்டேட்டஸ் ஆக ஏற்றம் செய்யும் கண்களூடு பார்க்கவில்லை.வரப்புகளில் வழுக்காமல் வரிசையாக நாம் நடந்த சுகத்தை வெளிப்படுத்த எந்த வரிகளையும் தேடியதில்லை.
கடை,தெருகள்,கோவில்கள் விழாக்கள் எல்லாமே எங்களை இணைப்பில் அணைத்து வைத்திருந்தது.அழகான நாட்கள் அவை.
கனடாவில் என் பொங்கல் .
முதலில் ஆளுக்கொரு நாள் சொல்லுவார்கள் இலங்கை நேரப்படி சிலர் பொங்குவார்கள் அவ்வாறாயின் முதல் நாள் வரும். சிலர் பொருத்தமாக மாட்டுப்பொங்கலை அதுவே சரியான நாள் என்று கொண்டாடுவார்கள்
இன்று பொங்கல் .அதிகாலையில் எழுந்தேன்.{மிகப்பெரிய அதிசயம்.)
ரைஸ் குக்கரை எடுத்து அரிசிகழுவி , வறுத்த பயறு எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து மூடினேன்.சிறிது நேரத்தில் திறந்து வறுத்த ஏலக்காய் ,கயூ,பிளம்ஸ் சேர்த்து கரைத்த பனங்கட்டி சேர்த்து திறந்தே வைத்திருந்தேன்.

பால் பொங்கும் பச்சைத்தண்ணி எப்பிடி பொங்கும்???????
ம்ம் வெந்த பின் பால் சேர்த்து கிளறி மூடி விட்டேன் அவ்வளவேதான்.
மொத்தத்தில் பொங்கி ஊத்தி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் பின்ன ஆரு ரைஸ் குக்கர் ,கிச்சன் எல்லாம் கிளீன் பண்றதாம்.
முதல் முதலாக, மேசையில் பேப்பரை ஒட்டி மகளிடம் திருடிய கலர்களை கொண்டு கோலம் வரைந்தேன்.


7.48 க்கு சூரியன் வருவார் என வெதர் சானல் ல் இருந்தது .
ஆனால் ரெம்ப குளிரில் அமுங்கி தலையை காட்டாமலே பதுங்கி இருந்தார். ஏதோ எனக்கு தெரிந்தபடி படைத்து வணங்கி விட்டு வழமையான பிஸி க்கு திரும்பி விட்டேன்.


ஒரே பொங்கல் ஈ கார்ட் ஆ வந்திருக்கு மெசேஜ் ல் .பயபுள்ளைகளுக்கு எத்தனை தடவை அட்ரஸ் க்கு மெய்யான கார்ட் அனுப்ப சொன்னாலும் ஈகார்ட் ஆ அனுப்பி வைக்கிறது என்னைப்போலவே சோம்பேறிகள்.
அவ்வளவுதான் அவசரமான நாட்கள் இவை.


நன்றி .
சுரேஜினி பாலகுமாரன்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...